இராபர்ட் இசுடேன்சு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சர் இராபர்ட் இசுடேன்சு
பிறப்பு மே 13, 1841(1841-05-13)
லண்டன், ஐக்கிய இராச்சியம்
இறப்பு 6 செப்டம்பர் 1936(1936-09-06) (அகவை 95)
கோயம்புத்தூர், இந்தியா
பணி நிறுவனர், டி ஸ்டேன்ஸ் & கம்பனி; தொழிலதிபர்; கல்வியாளர்.
வாழ்க்கைத் துணை ஹாரியத் ஹன்டிங்க்டன் ஹாரிஸ்

சர் இராபர்ட் இசுடேன்சு (13 மே 1841–6 செப்டம்பர் 1936) இந்தியாவின் கோயம்புத்தூரில் ஐக்கிய நீலகிரி தேயிலைத் தோட்டங்கள் (United Nilgiri Tea Estates, UNTE) என்ற வணிக நிறுவனத்தை நிறுவிய பிரித்தானிய தொழிலதிபரும் வள்ளலும் ஆவார்.

இசுடேன்சு தமது பதினேழாவது அகவையில் 1858ஆம் ஆண்டு இந்தியா வந்தார். கோயம்புத்தூரில் உடனடியாக குளம்பிச்செடி (coffee) வளர்ப்பில் இறங்கினார்.ஐந்து ஆண்டுகளில் இந்தியாவின் முதல் குளம்பிக்கொட்டை தயாரிக்க ஆலை தொடங்கினார். 1885ஆம் ஆண்டு அவரது நிறுவனம் ஸ்டேன்ஸ் & கோ நட்டத்தில் மூடவேண்டியதாயிற்று. கைகளில் ரூ.500 உடனும் அவமானத்துடனும் சரக்குப்படகொன்றில் இங்கிலாந்து திரும்ப நேர்ந்தது. நம்பிக்கையைத் தளரவிடாத ஸ்டேன்ஸ் மீண்டும் தமது வணிகத்தைத் தொடர்ந்து அதில் வெற்றி கண்டார். அவரது இறப்பின்போது அவருக்கு பருத்தி ஆலைகளும், குளம்பி மற்றும் தேயிலைத் தோட்டங்களும் குளம்பி தயாரிப்பு ஆலைகளும் மோட்டார் மற்றும் உருளிப்பட்டை புதுப்பிப்பு நிலையங்களும் உடமையாக இருந்தன. அவரது பங்களிப்பு கோவை இன்றையநாளில் முன்னணி தொழில்நகரமாகத் திகழப் பெரிதும் அடிக்கோளிட்டது.

கோயம்புத்தூரின் நகராட்சி மன்றம் அமைக்கப்பட்டபோது அதன் தலைவராகப் பொறுப்பேற்றார். 1862ஆம் ஆண்டு ஸ்டேன்ஸ் பள்ளியை துவக்கினார். அவரது தமையனார் தாமசு இசுடேன்சு குன்னூரில் 1858ஆம் ஆண்டு ஸ்டேன்ஸ் பள்ளியை துவங்கினார்.[1]

1913ஆம் ஆண்டு அவருக்கு கைசர்-இ-இந்த் விருது அவர் கோவைக்காற்றிய சேவைகளுக்காகவும் கல்விப்பணிக்காகவும் வழங்கப்பட்டது. 1920ஆம் ஆண்டு புத்தாண்டு விருதுகளில் பிரித்தானிய அரசு அவருக்கு கௌரவ படைவீரராக (Knight Bachelor) அறிவித்தது.[2]

குறிப்புகள்[தொகு]

உசாத்துணைகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இராபர்ட்_இசுடேன்சு&oldid=2222142" இருந்து மீள்விக்கப்பட்டது