இரான்ட்சுடாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரான்ட்சுடாடு
இரான்ட்சுடாடு ரெஜியோ
பெருநகரத் தொகுப்பு
இரவில் ஆம்ஸ்டர்டம் வணிக மையம்
இரவில் ஆம்ஸ்டர்டம் வணிக மையம்
அந்திப்போதில் இராட்டர்டேம்
அந்திப்போதில் இராட்டர்டேம்
மாலையில் தி ஹேக்
மாலையில் தி ஹேக்
நாடு நெதர்லாந்து
மாகாணங்கள்

வடக்கு ஆலந்து
தெற்கு ஆலந்து
உத்ரெக்ட்
பிளெவோலாந்து


பெரிய நகரங்கள் ஆம்ஸ்டர்டம்
ராட்டர்டேம்
டென் ஹாக்
உத்ரெக்ட்
மற்ற நகராட்சிகள் அல்மெரெ
ஆர்லெம்
அமெர்சுபூர்ட்
சான்சுடாடு
ஆர்லெம்மெர்மீர்
சோடெர்மீர்
லைடன்
டோர்ட்ரெக்ட்
அல்பென் ஆன் டென் ரின்
வெஸ்ட்லாந்து
டெல்ஃப்ட்
அல்க்மார்
புர்மெரென்டு
ஷியெடேம்
ஊர்ன்
விளார்டிங்கென்
கௌடா
பரப்பளவு[a]
 • நிலம் 8,287
 • நகர்ப்புறம்[1] 4,300
உயர் புள்ளி 69
தாழ் புள்ளி �.76
மக்கள்தொகை (2008)[2][b]
 • பெருநகரத் தொகுப்பு 71,00,000
 • நகர்ப்புறம் 66,00,000
 • நகர்ப்புற அடர்த்தி 1
இணையதளம் regio-randstad.eu
ஆம்ஸ்டர்டம் வானூர்தி நிலையம் ஸ்கைபோல்HaarlemmermeerVelsenDelftடென் ஹாக்Alphen aan den RijnZaanstadLelystadHilversumGoudaZoetermeerAmersfoortAlkmaarHaarlemDordrechtலைடன்Almereராட்டர்டேம்Port of RotterdamPort of RotterdamPort of RotterdamPort of RotterdamPort of Rotterdamஉத்ரெக்ட்ஆம்ஸ்டர்டம்
இரான்ட்சுடாடின் விவரிப்புப் படம்
இரான்ட்சுடாடில் அடங்கியுள்ள பெருநகரங்கள், நகரங்களின் மக்கள்தொகையை காட்டும் குமிழ் நிலப்படம்; குமிழின் அளவு மக்கள்தொகைக்கேற்ப உள்ளது.

இரான்ட்சுடாடு (Randstad, டச்சு ஒலிப்பு: [ˈrɑntstɑt]) மேற்கு நெதர்லாந்திலுள்ள பெருநகரத் தொகுப்பாகும். இது நெதர்லாந்தின் மாகாணங்களான வடக்கு ஆலந்து, தெற்கு ஆலந்து, உத்ரெக்ட் மற்றும் பிளெவோலாந்துப் பகுதிகளை உள்ளடக்கியது. இதில் பெரிய நகரங்களான ஆம்ஸ்டர்டம், ஆர்லெம், லைடன், டென் ஹாக், டெல்ஃப்ட், ராட்டர்டேம், டோர்ட்ரெக்ட், கௌடா, உத்ரெக்ட், இல்வெர்சம், அல்மெரெ ஆகியன அடங்கியுள்ளன. இச்சொற்றொடரை முதன்முதலாக கேஎல்எம் வானூர்தி சேவை நிறுவனரான ஆல்பெர்ட் பிளெசுமான் பயன்படுத்தினார். வானிலிருந்து காண்கையில் இந்த நகரங்கள் ஒரு வட்டத்தில் அமைந்திருப்பதாகத் தோன்றியமையால் எல்லை நகரம் எனப் பொருள்படும்படி இராண்ட்சுடாடு எனப் பெயரிட்டார். இரான்ட்சுடாடு நெதர்லாந்தின் 20% பரப்பில் அமைந்துள்ளது. நெதர்லாந்தின் மக்கள்தொகையில் 40%க்கும் கூடுதலானவர்கள் இங்கு வசிக்கின்றனர். இப்பகுதியிலுள்ள நகரங்கள் ஒன்றிலிருந்து மற்றொன்றுடன் 26 kilometres (16 mi) (டென் ஹாக் - ராட்டர்டேம்) முதல் 77 kilometres (48 mi) (ஆம்ஸ்டர்டேம் - ராட்டர்டேம்) வரையிலான தொலைவுகளில் உள்ளன. வட்டத்தின் மையமான பகுதி கிரோன் ஆர்ட் எனப்படுகின்றது; இங்கு வெகு சிலரே வாழ்கின்றனர்.

7,100,000 மக்கள்தொகை கொண்ட இரான்ட்சுடாடு ஐரோப்பாவின் மிகப் பெரும் பெருநகரத் தொகுப்பாக விளங்குகின்றது;[b] அளவில் மிலன் பெருநகரப் பகுதியையும் சான் பிரான்சிஸ்கோ விரிகுடாப் பகுதியையும் ஒத்துள்ளது. இதன் பரப்பளவு ஏறத்தாழ 8,287 கிமீ² ஆகும்.[a]

இப்பகுதியில் ஐரோப்பாவின் மிகப்பெரும் கடற் துறைமுகமான ராட்டர்டேமும் மிகப் பெரும் வானூர்தி நிலையமான ஸ்கைபோலும் உள்ளன.

மேற்சான்றுகள்[தொகு]

  1. "Approximation of area on Google Maps" (2010-10-16). பார்த்த நாள் 2010-10-16.
  2. "Randstadmonitor 2010" (2010-01-01). பார்த்த நாள் 2011-07-21.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இரான்ட்சுடாடு&oldid=2037920" இருந்து மீள்விக்கப்பட்டது