உள்ளடக்கத்துக்குச் செல்

இராதிகா ராய்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இராதிகா ராய்
பிறப்புஇராதிகா தாஸ்
7 மே 1949 (1949-05-07) (அகவை 75)
கொல்கத்தா, இந்தியா
பணிஇணை நிறுவனர், இணை- இயக்குநர் என்டிடிவி
வாழ்க்கைத்
துணை
பிரணாய் ராய்
பிள்ளைகள்1
உறவினர்கள்பிருந்தா காரத் (சகோதரி)

இராதிகா ராய் (Radhika Roy) (பிறப்பு 7 மே 1949) இராதிகா தாஸ் எனவும் அறியப்படும் இவர் ஓர் இந்திய பத்திரிகையாளரும் புது தில்லி தொலைக்காட்சியின் (என்.டி.டி.வி) இணை நிறுவனரும் ஆவார். [1] [2] அச்சு பத்திரிகைத் துறையில் பத்து வருட வாழ்க்கையைத் தொடர்ந்து, [3] இவர் 1987இல் தொலைக்காட்சிக்கு மாறினார். பின்னர், என்.டி.டி.வியை இணைந்து நிறுவி 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தினார். [4] இவரையும் இவரது கணவர் பிரணாய் ராய் ஆகிய இருவரையும் என்.டி.டி.வியில் நிர்வாக பதவிகளை வகிக்க 2 ஆண்டுகள் தடை செய்து இந்திய பங்கு மற்றும் பரிவர்த்தனை வாரியம் (செபி) உத்தரவு பிறப்பித்தது. வாரியம் நடத்திய விசாரணையில், கடன் ஒப்பந்தங்கள் தொடர்பான தகவல்களை இவர்கள் தடுத்து நிறுத்தியதாக குற்றம் சாட்டியது .

14 சூன் 2019 அன்று, இவர்கள் இருவரும் சேர்ந்து ஒரு கூட்டு அறிக்கையை வெளியிட்டனர். "தாங்கள் இயக்குநர் பதவியில் இருந்து விலகவும், என்.டி.டி.வி-யில் எந்த நிர்வாக பதவிகளையும் வகிக்கக் கூடாது என்ற செபியின் உத்தரவை மதிக்கவும் செய்வதாகவும், ஆனால் செபியின் இந்த முடிவு தவறான மதிப்பீட்டை அடிப்படையாகக் கொண்டது என்றும் மிகவும் அசாதாரணமான மற்றும் விபரீதமானதாகும் உத்தரவாகும். " என்றனர். [5] [6] [7]

தொழில்

[தொகு]

இவர், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக அச்சு இதழியல் துறையில் பணியாற்றினார். இதில் இந்தியன் எக்சுபிரசு மற்றும் இந்தியா டுடே போன்ற வெளியீடுகளும் உள்ளன. [8]

சொந்த வாழ்க்கை

[தொகு]

இவர், தான் வெல்ஹாம் பெண்கள் பள்ளியில் படித்தபோது சந்தித்த பிரணாய் ராயை திருமணம் செய்து கொண்டார். [9] இவர்களுக்கு தாரா ராய் என்ற மகள் உள்ளார். [10]

இவரது சகோதரி பிருந்தா காரத் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்)யின் முடிவெடுக்கும் உயர்ந்த அமைப்பான செயற்குழு உறுப்பினராக உள்ளார். [11]

குற்றச்சாட்டு

[தொகு]

தூர்தர்ஷனை மேம்படுத்தும் நிகழ்வில் என்டிடிவி மோசடி செய்ததாக அதன் நிர்வாக இயக்குனர் ராய் மீது சி.பி.ஐ 1998இல் குற்றச்சதி வழக்கு ஒன்றைப் பதிவு செய்தது. [12] சூலை 2013 இல், சிபிஐ மூலம் இவர்களுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்குகள் சம்பந்தப்பட்ட எல்லா குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்தது. [13] [14]

மேற்கோள்கள்

[தொகு]
 1. "Radhika Roy". Bloomberg. பார்க்கப்பட்ட நாள் 18 January 2017.
 2. Bansal, Shuchi (21 April 2003). "Radhika Roy: NDTV's heart and soul". Rediff India Abroad. பார்க்கப்பட்ட நாள் 18 January 2017.
 3. Kaushik, Krishn (1 December 2015). "Have Radhika and Prannoy Roy undermined NDTV?". The Caravan. பார்க்கப்பட்ட நாள் 18 January 2017.
 4. "Radhika Roy". NDTV. பார்க்கப்பட்ட நாள் 27 January 2017. Radhika Roy is the guiding force behind NDTV and has been responsible for leading NDTV's tremendous growth since inception.
 5. "Statement From Radhika And Prannoy Roy On SEBI Order". 14 June 2019.
 6. "Sebi bars NDTV promoters Prannoy, Radhika Roy from accessing securities markets for 2 years". தி எகனாமிக் டைம்ஸ். 14 June 2019. பார்க்கப்பட்ட நாள் 14 June 2019.
 7. "SEBI bars Prannoy, Radhika Roy from NDTV board". The Hindu. 14 June 2019. பார்க்கப்பட்ட நாள் 14 June 2019.
 8. Kaushik, Krishn (1 December 2015). "Have Radhika and Prannoy Roy undermined NDTV?". The Caravan. பார்க்கப்பட்ட நாள் 18 January 2017.Kaushik, Krishn (1 December 2015). "Have Radhika and Prannoy Roy undermined NDTV?". The Caravan. Retrieved 18 January 2017.
 9. Karmali, Naazneen (2006-09-14). "Prannoy Roy plans to take NDTV global". Rediff (Rediff.com) இம் மூலத்தில் இருந்து 2014-03-21 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20140321064313/http://inhome.rediff.com/money/2006/sep/14forbes.htm. பார்த்த நாள்: 2014-03-21. 
 10. Chandran, Bipin (2005-05-31). "Prannoy Roy to gift NDTV stake to daughter". Rediff (Rediff.com) இம் மூலத்தில் இருந்து 2011-08-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110808085739/http://inhome.rediff.com/money/2005/may/31ndtv.htm. பார்த்த நாள்: 2014-03-21. 
 11. "Exclusive Interview/Brinda Karat". www.rediff.com. பார்க்கப்பட்ட நாள் 2021-01-20.
 12. "Archived copy". Archived from the original on 10 September 2015. பார்க்கப்பட்ட நாள் 2015-09-16.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
 13. NDTV and Prannoy Roy – Once Upon a Time Zoom Indian Media (14 February 2011).
 14. CBI case against Prannoy Roy. The Indian Express. (20 January 1998).
"https://ta.wikipedia.org/w/index.php?title=இராதிகா_ராய்&oldid=3908768" இலிருந்து மீள்விக்கப்பட்டது