இராஜ் பகதூர்
தோற்றம்
இராஜ் பகதூர் | |
|---|---|
2013-ல் வெளியிடப்பட்ட அஞ்சல் தலை | |
| இந்தியா Ambassador to நேபாளம் | |
| பதவியில் சனவரி 1968 – சனவரி 1971 | |
| சுற்றுலாத் துறை அமைச்சகம் (இந்தியா) & இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சகம் | |
| பதவியில் 9 நவம்பர் 1973 – 22 திசம்பர் 1976 | |
| முன்னையவர் | கரண் சிங் |
| பின்னவர் | கொத்த இரகுராமையா |
| தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் | |
| பதவியில் 7 திசம்பர் 1956 – 17 ஏப்ரல் 1957 | |
| முன்னையவர் | ஜெகசீவன்ராம் |
| பின்னவர் | லால் பகதூர் சாஸ்திரி |
| தனிப்பட்ட விவரங்கள் | |
| பிறப்பு | 21 ஆகத்து 1912 பாசன் வாயில், பரத்பூர் (இராசத்தான், இந்தியா) |
| இறப்பு | 22 செப்டம்பர் 1990 (அகவை 78) புது தில்லி, இந்தியா |
இராஜ் பகதூர் (Raj Bahadur)(1912-1990) என்பவர் இந்தியத் தேசிய காங்கிரசின் தலைவரும், இராசத்தான் மாநிலத்திலிருந்து இந்திய அரசியலமைப்பு நிர்ணய மன்றத்தின் உறுப்பினரும் ஆவார். இவர் இந்திய விடுதலைக்குப் பின்னர் சுதந்திர இந்தியாவின் முதல் சுற்றுலாத் துறை அமைச்சர் ஆவார்.[1]
அரசியல்
[தொகு]இராஜ் பகதூர் பாரத்பூர் மக்களவைத் தொகுதியிலிருந்து மக்களவைக்கு மூன்று முறை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956-57ஆம் ஆண்டு தொலைத்தொடர்பு அமைச்சராகவும் பணியாற்றினார்.[2] இவர் 1980-ல் பரத்பூரிலிருந்து இராசத்தான் சட்டமன்றத்திற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இராஜ் பகதூர் நேபாளத்திற்கான இந்தியத் தூதராகவும் பணியாற்றினார்.
இறப்பு
[தொகு]இராஜ் பகதூர் 22 செப்டம்பர் 1990 அன்று புது தில்லியில் இறந்தார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Members Bioprofile". loksabhaph.nic.in.
- ↑ Former Ministers – Department of Telecommunications – Government of India பரணிடப்பட்டது 2 அக்டோபர் 2013 at the வந்தவழி இயந்திரம்