இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா (Rajlukshmee Debee Bhattacharya) இவர் வங்காள மொழியிலும், ஆங்கிலத்திலும் இந்தியாவைப் பற்றி எழுதும் ஒரு கவிஞரும், மொழிபெயர்ப்பாளரும் மற்றும் இலக்கிய விமர்சகரும் ஆவார். பிரித்தன் அமைப்புடன் இணைந்து இந்தியக் கவிதைகள் சங்கம் 1991ல் ஏற்பாடு செய்த அகில இந்திய கவிதைப் போட்டியில் முதல் பரிசை வென்றார். [1]

சுயசரிதை[தொகு]

இராஜ்லட்சுமி தேபி பட்டாச்சார்யா 1927 இல் பிறந்தார். கரக்பூரின் இந்தியன் தொழில்நுட்ப நிறுவனம், புனேவின் பெர்குசன் கல்லூரி ஆகியவற்றில் கற்பித்தார். நவ்ரோஸ்ஜி வாடியா கல்லூரியில் தத்துவ பேராசிரியராகவும் இருந்தார்.

இவர் தி உல் அன்ட் அதர் போயம்ஸ் மற்றும் தி டச் மீ நாட் கேர்ள் ஆகிய கவிதைகளை எழுதினார். இரவீந்திரநாத் தாகூரின் பாடல்களின் அழகிய மொழிபெயர்ப்பையும் இவர் செய்துள்ளார். இவரது மொழிபெயர்ப்பு படைப்புகளை தனிப்பட்ட கிரியைகளின் இடமாற்றமாகும். [2]

இராஜ்லட்சுமி தேபி தனது 'புனர்ணவா' (‘‘ எப்போதும் புதுப்பித்தல் ’’) என்றக் கவிதைக்காக 1991 ஆம் ஆண்டில் அகில இந்திய கவிதை வெற்றியாளாராக அறிவிக்கப்பட்டார் . 1996 இல் நடைபெற்ற பள்ளி குழந்தைகளுக்கான முதல் அகில இந்திய கவிதைப் போட்டியில் இராஜ்லுக்ஷ்மி நடுவராகவும் இருந்தார். [3]

குறிப்புகள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]