இரயில்வே கோட்ட மருத்துவமனை, ஈரோடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இரயில்வே கோட்ட மருத்துவமனை, ஈரோடு
தெற்கு இரயில்வே
அமைவிடம் தெற்கு இரயில்வே காலனி, ஈரோடு, தமிழ்நாடு, இந்தியா
வகை முழு சேவை மருத்துவமனை
படுக்கைகள் 60
நிறுவல் 2016
பட்டியல்கள்

இரயில்வே கோட்ட மருத்துவமனை, ஈரோடு என்பது ஈரோடு தெற்கு இரயில்வே காலனி பிரதான சாலையில் உள்ள ஒரு இரயில்வே மருத்துவமனையாகும். துணைக் கோட்ட மருத்துவமனையாக செயல்பட்டுவந்த இம்மருத்துவமனை சேலம் இரயில்வே கோட்டத்திற்கான கோட்ட தலைமை மருத்துவமனையாகத் தரம் உயர்த்தப்பட்டு 23.06.2016 அன்று அதற்கான புதிய கட்டடங்களுடன் துவக்கி வைக்கப்பட்டது.

ஈரோட்டில் செயல்பட்டு வரும் மின்சார ரயில் எஞ்சின் பணிமனை, டீசல் ரயில் எஞ்சின் பணிமனை, சரக்குப் பரிமாற்ற ரயில் முனையம் உள்ளிட்ட இடங்களில் பணிபுரியும் சுமார் 8000 இரயில்வே ஊழியர்களின் நலன்கருதியும், சேலம் தொடருந்து கோட்டத்திலுள்ள கோவை, திருப்பூர், சேலம், கரூர், மேட்டூர் ஆகிய அனைத்துப் பகுதிகளுக்கும் மையமாக இருப்பதாலும் இம்மருத்துவமனை ஈரோட்டில் அமைக்கப்பட்டது.

ஈரோடு சந்திப்பு ரயில் நிலையத்திலிருந்து தெற்கு வாயில் வழியாகவும் இம்மருத்துவமனையை அடையலாம்.

மேற்கோள்கள்[தொகு]