இரமேசு அக்ரவால்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரமேசு அக்ரவால்
Ramesh Agrawal
2016 ஆம் ஆண்டில் அக்ரவால்
தேசியம்இந்தியர்
பணி
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2014)

இரமேசு அக்ரவால் (Ramesh Agrawal) இந்தியாவின் சத்தீசுகர் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு சுற்றுச்சூழல் ஆர்வலராவார்.இந்திய சமூக சேவகரான இவர் ஒரு சிறிய இணையதள மையத்தின் உரிமையாளராகவும் அறியப்படுகிறார்.

சத்தீசுகரில் உள்ள கரே கிராமத்திற்கு அருகே இரண்டாவது நிலக்கரி சுரங்கத்தைத் திறந்து மின் உற்பத்தி நிலையம் அமைப்பதைத் தடுக்க மக்களை இவர் ஒழுங்கமைத்தார். ராய்கர் மாவட்டத்தில் நிலக்கரி மற்றும் மின் நிறுவனம் தொடங்குவதற்கு எதிராக சட்டப் போரில் ஈடுபட தகவல் அறியும் உரிமை சட்டத்தைப் பயன்படுத்தினார்.[1]

பிராந்தியத்தில் சில தொழில்மயமாக்கல் திட்டங்களுக்கு எதிராக போராட்டங்களை ஒழுங்கமைப்பதில் மேற்கொண்ட முயற்சிகளுக்காகவும், குறிப்பாக பெரிய அளவிலான நிலக்கரிச் சுரங்கம் அமைப்பதினால் ஏற்படும் சுற்றுச்சூழல் மற்றும் சமூக விளைவுகள் குறித்து குடிமக்களுக்கு அறிவித்த காரணத்திற்காகவும் 2014 ஆம் ஆண்டு இரமேசு அக்ரவாலுக்கு கோல்ட்மேன் சுற்றுச்சூழல் பரிசு வழங்கப்பட்டது.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Who tried to kill Ramesh Agrawal, the activist and winner of the prestigious Goldman Environment Prize?" (in en-US). dna. 2014-04-30. https://www.dnaindia.com/india/report-who-tried-to-kill-ramesh-agrawal-the-activist-and-winner-of-the-prestigious-goldman-environment-prize-1983875. 
  2. "Prize Recipient: Ramesh Agrawal, 2014 Asia". Goldman Environmental Prize. பார்க்கப்பட்ட நாள் 6 June 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரமேசு_அக்ரவால்&oldid=3146037" இலிருந்து மீள்விக்கப்பட்டது