இரத்தினகிரி பாலமுருகன் கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இரத்தினகிரி பாலமுருகன் கோயில் என்பது கோயமுத்தூர் மாவட்டம் சரவணம்பட்டியில் அமைந்துள்ள முருகன் கோயிலாகும்.

இருப்பிடம்[தொகு]

கோவை- சத்தியமங்கலம் சாலையில் சரவணம்பட்டியில் உள்ளது. திறக்கும் நேரம்: காலை 6.00 - 1.00 மணி மாலை 4.00 – 7.30 மணி

தல வரலாறு[தொகு]

சிவனை நோக்கி தவம் செய்து வரம் பெற்ற சூரபத்மன் இந்திரனை அழிக்க வந்தார். அப்போது இரத்தினகிரி மலையில் ஒளிந்துகொண்டார். இந்திரனை முருகன் மயிலாக மாற்றினார். சூரபத்மனை அசுரமயிலாக மாற்றினார்.

முருகனுக்கு இடப்புறம் இந்திரமயில், வலப்புறம் அசுரமயில் என இரு மயில்கள் இருந்தன.

பூப்பறித்தல் சடங்கு[தொகு]

கந்தசஷ்டி அன்று நடக்கும் பூப்பறித்தல் நோன்பு புகழ்பெறுகிறது. விரும்பிய வாழ்க்கைத்துணை, திருமணத்தடை நீங்க, திருமணமாகாதவர்கள் பூப்பறித்து வழிபாடு செய்கின்றனர்.

திருவிழா[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. ஆன்மிக மலர் - தினமலர் சூன் 17 – 2017.