இரண்டாம் மகிபாலன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(இரண்டாம் மகிபாலா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
இரண்டாம் மகிபாலன்
பாலப் பேரரசு
ஆட்சிக்காலம்1070–1075
முன்னையவர்மூன்றாம் விக்ரகபாலன்
பின்னையவர்இரண்டாம் சுரபாலன்
அரசமரபுபாலப் பேரரசு
தந்தைமூன்றாம் விக்ரகபாலா
தாய்யுவனசிறீ தேவி
மதம்பௌத்தம்

இரண்டாம் மகிபாலன் (Mahipala II) இந்திய துணைக்கண்டத்தின் வங்காள பகுதியில் ஆட்சியிலிருந்த பாலப் பேரரசின் ஆட்சியாளாரான மூன்றாம் விக்கிரம பாலன் என்ற அரசாின் வாரிசாவார். இவர் பால வம்சத்தின் 13 வது அரசராவார். இவா் 6 ஆண்டுகள் ஆட்சி புாிந்தாா். இவருக்குப் பின் இரண்டாம் சுரபாலன் ஆட்சிக்கு வந்தார்.[1]

தனது இளைய சகோதரர்களான சுரபாலா மற்றும் இராமபாலன் ஆகியோருடன் கடுமையான மோதலில் ஈடுபட்டார். தனது ஆட்சியின் ஆரம்பத்தில் அவர்களை சிறையில் அடைத்தார். இவரது ஆட்சியில் பொது மக்களும் துன்பத்துக்கு ஆளாயினர்.[2] மகிபாலா தனது நாட்டிலுள்ள தலைவர்களின் கிளர்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மகிபாலனின் இராணுவம் சிறியதாகவும், ஆயுதம் இல்லாததாகவும் இருந்தது. ஆனால் இவர் கிளர்ச்சியாளர்களுடன் போரிட வேண்டியிருந்தது. திவ்யா என்பவரின் தலைமையில் கிளர்ச்சியாளர்களால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.[3] கிளர்ச்சியாளர்கள் தலைநகரை ஆக்கிரமித்தனர். சுரபாலன் மற்றும் இராமபாலன் நகரத்தை விட்டு வெளியேறினர். [4]

குறிப்புகள்[தொகு]

  1. Chowdhury, AM (2012). "Pala Dynasty". in Sirajul Islam; Jamal, Ahmed A.. Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ). Asiatic Society of Bangladesh. http://en.banglapedia.org/index.php?title=Pala_Dynasty. 
  2. Sengupta, Nitish K. (2011). Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9780143416784. https://books.google.com/books?id=kVSh_TyJ0YoC&pg=PA40. 
  3. "History of Bengal Vol.1".
  4. Ganguly, Dilip Kumar (1994). Ancient India, History and Archaeology. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9788170173045. https://books.google.com/books?id=N2tlKzxwhY8C&pg=PA56. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரண்டாம்_மகிபாலன்&oldid=3812354" இலிருந்து மீள்விக்கப்பட்டது