இரண்டாம் மகிபாலன்
இரண்டாம் மகிபாலன் | |
---|---|
பாலப் பேரரசு | |
ஆட்சிக்காலம் | 1070–1075 |
முன்னையவர் | மூன்றாம் விக்ரகபாலன் |
பின்னையவர் | இரண்டாம் சுரபாலன் |
அரசமரபு | பாலப் பேரரசு |
தந்தை | மூன்றாம் விக்ரகபாலா |
தாய் | யுவனசிறீ தேவி |
மதம் | பௌத்தம் |
இரண்டாம் மகிபாலன் (Mahipala II) இந்திய துணைக்கண்டத்தின் வங்காள பகுதியில் ஆட்சியிலிருந்த பாலப் பேரரசின் ஆட்சியாளாரான மூன்றாம் விக்கிரம பாலன் என்ற அரசாின் வாரிசாவார். இவர் பால வம்சத்தின் 13 வது அரசராவார். இவா் 6 ஆண்டுகள் ஆட்சி புாிந்தாா். இவருக்குப் பின் இரண்டாம் சுரபாலன் ஆட்சிக்கு வந்தார்.[1]
தனது இளைய சகோதரர்களான சுரபாலா மற்றும் இராமபாலன் ஆகியோருடன் கடுமையான மோதலில் ஈடுபட்டார். தனது ஆட்சியின் ஆரம்பத்தில் அவர்களை சிறையில் அடைத்தார். இவரது ஆட்சியில் பொது மக்களும் துன்பத்துக்கு ஆளாயினர்.[2] மகிபாலா தனது நாட்டிலுள்ள தலைவர்களின் கிளர்ச்சியை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. மகிபாலனின் இராணுவம் சிறியதாகவும், ஆயுதம் இல்லாததாகவும் இருந்தது. ஆனால் இவர் கிளர்ச்சியாளர்களுடன் போரிட வேண்டியிருந்தது. திவ்யா என்பவரின் தலைமையில் கிளர்ச்சியாளர்களால் தோற்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.[3] கிளர்ச்சியாளர்கள் தலைநகரை ஆக்கிரமித்தனர். சுரபாலன் மற்றும் இராமபாலன் நகரத்தை விட்டு வெளியேறினர். [4]
குறிப்புகள்
[தொகு]- ↑ Chowdhury, AM (2012). "Pala Dynasty". In Islam, Sirajul; Jamal, Ahmed A. (eds.). Banglapedia: National Encyclopedia of Bangladesh (Second ed.). Asiatic Society of Bangladesh.
- ↑ Sengupta, Nitish K. (2011). Land of Two Rivers: A History of Bengal from the Mahabharata to Mujib. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780143416784.
- ↑ "History of Bengal Vol.1".
- ↑ Ganguly, Dilip Kumar (1994). Ancient India, History and Archaeology. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9788170173045.