இரண்டாம் ஜெகந்நாத கஜபதி நாராயண தேவன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரண்டாம் ஜெகந்நாத கஜபதி நாராயண தேவன்
ଶ୍ରୀ ଜଗନ୍ନାଥ ଗଜପତି ନାରାୟଣ ଦେବ
ஆட்சிக்காலம்கி.பி.1736 முதல் 1771 வரை
முன்னையவர்முதலாம் பிரதாப ருத்ர கஜபதி நாராயண தேவன்
பின்னையவர்முதலாம் கௌர ச்ந்திர கஜபதி நாராயண தேவன்
மரபுகீழைக்கங்க வம்சம் (பரலகேமுண்டி கிளை)
மதம்இந்து சமயம்

இரண்டாம் ஜெகந்நாத கஜபதி நாராயண தேவன் (Jagannatha Gajapati Narayana Deo II ) இன்றைய ஒடிசாவிலும், ஆந்திரப் பிரதேசத்திலும் அமைந்துள்ள உள்ள பரலகேமுண்டி தோட்டத்தின் மன்னராக கி.பி.1736 முதல் 1771 வரை இருந்தார்.[1] இவர் கேமுண்டி கங்கர் கிளையின் கீழைக் கங்க வம்சத்தைச் சேர்ந்தவர்.

பின்னணி[தொகு]

ஒடிசா, முகலாயர்கள், மராட்டியர்கள், பிரஞ்சு மற்றும் பிரித்தானிய போன்ற வெளி சக்திகள் பிரதேசத்தின் கட்டுப்பாட்டிற்காக ஆக்கிரமைத்து வந்த நேரத்தில் தனது பதினெட்டாவது வயதில் அரியணை ஏறினார். இவர் குர்தா போய் வம்ச மன்னர் பிரகிசோர் தேவன் மற்றும் விஜயநகரம் தோட்ட மன்னர் இரண்டாம் பூசபதி விஜயராம ராஜு மீது படையெடுத்து இருவரையும் தோற்கடித்தார்.[2]

ஒடிசாவின் இழந்த மகிமையையும் அதன் தனித்துவமான இந்து கலாச்சாரத்தையும் ஜெகந்நாதர் வழிபாட்டின் பாரம்பரியத்தைச் சுற்றியே புத்துயிர் பெறுவதற்கு இவர் தனது கடைசி பெரும் முயற்சிகளை மேற்கொண்டார். இவர் ஐதராபாத் நிசாமின் அதிகாரத்தை மீறி தனது சொந்த இறையாண்மையை பராமரித்து வந்தார். இந்தியாவின் கிழக்குப் பகுதியில் புதிய ஐரோப்பிய காலனித்துவவாதிகளுடன் மோதல்களில் ஈடுபட்ட முதல் ஆட்சியாளர்களில் இவரும் ஒருவர். ஒடிசாவின் பண்டைய நிலத்தை வெளிப்புற ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து விடுவிப்பதற்கும், கடந்த காலத்திலிருந்து இழந்த கீழைக் கங்க வம்சம்-கஜபதி பேரரசின் மகிமையின் மறுமலர்ச்சிக்கும் மூலோபாய இராஜதந்திர திட்டங்களை வகுப்பதில் இவர் தனது வாழ்க்கையின் இறுதி வரை முயற்சி செய்தார்.

இராணுவ ஈடுபாடுகள்[தொகு]

ஜெகந்நாத நாராயண தேவன், ஒடிசாவின் பண்டைய நிலத்தையும் அதன் சிறந்த இந்து கலாச்சாரத்தையும் வெளிப்புற சக்திகளின் பிடியிலிருந்து அகற்ற எண்ணினார். எதிரிகளுக்கு எதிராக ஒன்றுபடுவதற்கும், ஒடிசாவை விடுவிப்பதற்கும், துணைக் கண்டத்தில் இராணுவ சக்தியாக ஒடிசாவின் பாரம்பரியத்தைப் புதுப்பிப்பதற்கும் இவர் பல்வேறு உள்ளூர் ஆட்சியாளர்களிடம் உதவி கோரினார். இருப்பினும், அவர்களில் பெரும்பாலோர் மராட்டியர்களின் ஆட்சியாளர்களாகவோ அல்லது முழுமையான இராணுவ சக்தியற்றவர்களாகவோ இருந்ததால், அவர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் தோல்வியடைந்தார். கோர்த்தாவின் ஆட்சியாளரும், புரியில் உள்ள ஜெகந்நாதர் கோவிலின் தலைமை நிர்வாகியுமான விராகிஷோர் தேவனின் திறமையின்மையால் கோபமடைந்த அவர் கி.பி 1760 இல் அவரது இராச்சியத்தின் மீது படையெடுத்தார்.[3]

தொடர் கிளர்ச்சிகள்[தொகு]

ஜெகந்நாத கஜபதியின் ஒடிசாவை அதன் கடந்த கால பெருமைக்கு புத்துயிர் பெறச் செய்த முயற்சிகள் தோல்வியடைந்தாலும் இவரது நடவடிக்கைகள் இவரது மகன் மற்றும் சகோதரர் ஆகிய இருவரும் கி.பி.1799 இல் ஆங்கிலேயர்களுக்கு எதிரான கிளர்ச்சிகளைத் தொடர்ந்தனர். கி.பி.1813-1834 ஆண்டுகளுக்கு இடையிலும், கி.பி.1851-கி.பி-1856ல் ராதாகிருஷ்ண தண்டசேனாவின் தலைமையில் உள்ளூர் மக்களாலும் பழங்குடி சவரா பழங்குடியினராலும் அடுத்தடுத்து கிளர்ச்சிகள் நடந்தன.[4]

இரண்டாம் நாராயண தேவனின் ஏழாவது வாரிசான கிருஷ்ண சந்திர கஜபதி நாராயண தேவன் 1936 ஆம் ஆண்டு ஒடிசா மாநிலம் உருவாவதில் முக்கியப் பங்காற்றினார். இவர் ஒடியா மொழிக்காக தனது வாழ்க்கையை அர்ப்பணித்தார். பின்னர், ஆங்கிலேயர் ஆட்சியின் போது ஒடிசாவின் முதல் பிரதமரானார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. ODISHA DISTRICT GAZETTEERS GAJAPATI (PDF), GAD, Govt of Odisha, 2002, p. 51
  2. Satyanarayana Rajguru (1972). "No 2 - 3 Gangas Of Khimundi , History of Paralakhemundi Raj". History of Gangas. History of Ganga. Part 2. Bhubaneswar, Odisha: Superintendent of Museum, Orissa , Bhubaneswar. பக். 72–293. 
  3. GAJAPATI KRUSHNACHANDRA DEV. Cuttack: Vidyapuri, Cuttack-753002. 2011. பக். 72–82. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-7411-800-4. 
  4. "ODISHA DISTRICT GAZETTEERS, GAJAPATI" (PDF). www.gopabandhuacademy.gov.in/. pp. 56–64. பார்க்கப்பட்ட நாள் 23 March 2018.