இரஞ்சனி கெபார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரஞ்சனி கெபார்
பிறப்பு9 செப்டம்பர் 1983
உடுப்பி, இந்தியா
இறப்பு9 சூன் 2013(2013-06-09) (அகவை 31)
உடுப்பி, இந்தியா
பணி
  • கருநாடக இசை, வாய்ப்பாட்டு
செயற்பாட்டுக்
காலம்
23
இசை வாழ்க்கை
இசை வடிவங்கள்
  • கருநாடக இசை
இசைக்கருவி(கள்)
  • வாய்ப்பாட்டு

இரஞ்சனி கெபாபர் (Ranjani Hebbar)(1981-9 சூன் 2013) ஓர் இந்தியக் கருநாடக இசைப் பாடகர் ஆவார். இப்போது இவரது இரண்டு சீடர்கள், வித்து

வான் அர்ச்சனா மற்றும் வித்துவான் சமன்வி இரஞ்சனியின் பாதையைப் பின்பற்றி இசையைப் பரப்புகிறார்கள்.

இளமை[தொகு]

இரஞ்சனி கெபார் உடுப்பியில் தாவரவியல் பேராசிரியரான அரவிந்த் கெபாருக்கும் வசந்த இலட்சுமிக்கும் மகளாகப் பிறந்தார்.[1] இவர் தனது பெற்றோர் மற்றும் மாதூர் பாலசுப்ரமணியம் ஆகியோரிடம் இசையைக் கற்கத் தொடங்கி எஸ். சௌம்யா மற்றும் சௌமியாவின் தந்தை சீனிவாசனின் முதல் சீடரானார். செங்கல்பட்டு ரங்கநாதனிடம் தொடர்ந்து படித்து, சென்னைப் பல்கலைக்கழகத்தில் கருநாடக இசையில் முதுகலைப் பட்டம் பெற்றார். இரஞ்சனி மென்பொருள் பொறியாளரான குரு பிரசாத்தை மணந்தார். [2]

தொழில்[தொகு]

அனைத்திந்திய வானொலி முதல் தரக் கலைஞராக இருந்த இவர், தேசிய தொலைக்காட்சி உட்படத் தென்னிந்தியாவில் பல மேடைகளில் நிகழ்ச்சிகளை நிகழ்த்தியுள்ளார்.[3]

இறப்பு[தொகு]

இரஞ்சனி கெபர் புற்றுநோயால் 9 சூன் 2013 அன்று மணிப்பாலில் உள்ள கே. எம். சி. மருத்துவமனையில் இறந்தார்.

விருதுகள் மற்றும் பட்டங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. V Ramnarayan (15 June 2013), "Death of a brilliant possibility", Daily News and Analysis
  2. http://archives.deccanchronicle.com/130611/news-current-affairs/article/vocalist-ranjani-hebbar-no-more[தொடர்பிழந்த இணைப்பு]
  3. Prakashrao Narayanan (2014-12-13), Ranjani Hebbar-concert, பார்க்கப்பட்ட நாள் 2018-03-23
  4. "Udupi: Renowned musician Rajani Hebbar (30) loses battle with cancer". daijiworld.com. 10 June 2013. பார்க்கப்பட்ட நாள் 6 July 2018.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரஞ்சனி_கெபார்&oldid=3915374" இலிருந்து மீள்விக்கப்பட்டது