உள்ளடக்கத்துக்குச் செல்

இயிசுனா மேத்தியூ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இயிசுனா மேத்தியூ
Jisna Mathew
Mathew in 2017ஆம் ஆண்டில் இயிசுனா மேத்தியூ
தனிநபர் தகவல்
பிறப்பு7 சனவரி 1999 (1999-01-07) (அகவை 26)
அலகோடு, கேரளம், இந்தியா
உயரம்1.55 மீ
விளையாட்டு
நாடு இந்தியா
விளையாட்டுதடகளம்
நிகழ்வு(கள்)400 மீட்டர் ஓட்டப்பந்தயம்
சாதனைகளும் விருதுகளும்
தனிப்பட்ட சாதனை(கள்)
  • 100 மீ: 12.08 s (2015)
  • 200 மீ: 23.98 s (2017)
  • 400 மீ: 52.65 s (2017)
பதக்கத் தகவல்கள்
நாடு  இந்தியா
பெண்கள் தடகள விளையாட்டு
ஆசிய தடகள வெற்றியாளர் போட்டி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2025 குமி பெண்கள் 4 × 400 மீட்டர்கள் தொடரோட்டம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2015 வூகான் பெண்கள் 4 × 400 மீட்டர்கள் தொடரோட்டம்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2017 புவனேசுவரம் பெண்கள் 4 × 400 மீட்டர்கள் தொடரோட்டம்
ஆசிய இளையோர் வெற்றியாளர் போட்டி
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 ஓ சி மின் நகரம் 400மீ
தங்கப் பதக்கம் – முதலிடம் 2016 ஓ சி மின் நகரம் 4×400மீ தொடரோட்டம்
தங்கப் பதக்கம் – முதலிடம் 2018 கிபு 400மீ
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2018 கிபு 4×400மீ தொடரோட்டம்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 2018 கிபு 200மீ
ஆசிய இளையோர் வெற்றியாளர் போட்டி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2015 தோகா 400மீ
பொதுநலவாய விளையாட்டுப் போட்டிகள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 2015 அபியா 400மீ
9 சூன் 2018 இற்றைப்படுத்தியது.

இயிசுனா மேத்தியூ (Jisna Mathew) என்பவர் இந்திய ஓட்டப்பந்தய வீராங்கனையாவார். 1999 ஆம் ஆண்டு சனவரி மாதம் 07 ஆம் தேதியன்று இவர் பிறந்தார். கேரள[1] மாநிலத்தில் வசித்து வருகிறார். 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் கலந்து கொண்டு விளையாடுகிறார்.

தொழில்

[தொகு]

கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் உள்ள அலகோட்டில் பிறந்த இயிசுனா மேத்யூ, 2011 ஆம் ஆண்டு உசா தடகளப் பள்ளியில் சேர்க்கப்பட்டார்.[2]

2015ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுநலவாய இளைஞர் விளையாட்டுப் போட்டிகளிலும், ஆசிய இளைஞர் தடகள வெற்றியாளர் போட்டிகளிலும் 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்றார்.[3]

2016ஆம் ஆண்டு நடைபெற்ற கோடைகால ஒலிம்பிக்கில் இந்திய மகளிர் 4 × 400 மீட்டர் தொடரோட்ட அணியில் இவர் ஒரு பகுதியாக இருந்தார்.[4][5]

2016 ஆசிய இளையோர் தடகள வெற்றியாளர் போட்டியில் 400 மீ மற்றும் 4 × 400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் இவர் வென்றார். 2018 ஆசிய இளையோர் தடகள வெற்றியாளர் போட்டியில் இவர் மூன்று பதக்கங்களை வென்றார்: 400 மீ ஓட்டத்தில் தங்கம், 4 × 400 மீ ஓட்டத்தில் வெள்ளி, மற்றும் 200 மீட்டர் ஓட்டத்தில் வெண்கலம்.[3]

2017 ஆசிய தடகள வெற்றியாளர் போட்டியில் பெண்கள் 4 × 400 மீ தொடரோட்டம் மற்றும் பெண்கள் 400 மீ ஓட்டப்பந்தயம் ஆகிய போட்டிகளில் வெண்கலத்தை வென்றார். 2019 ஆம் ஆண்டில், இவரது தொடரோட்ட அணித் தோழியும், நிகழ்வில் 400 மீ வெற்றியாளருமான நிர்மலா சியோரன், ஊக்கமருந்து பயன்படுத்தியதற்காக 15 ஆகத்து 2016 முதல் 21 நவம்பர் 2018 வரை தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதன் விளைவாக, இந்தியா தோடரோட்டப் பட்டத்தை இழந்தது.[6] மேலும் இயிசுனா மேத்யூவின் 400 மீ போட்டி வெண்கலம் வெள்ளியாக மேம்படுத்தப்பட்டது.[3]

2019 உலக தடகள வெற்றியாளர் போட்டியில் கலப்பு 4 × 400 மீட்டர் தொடரோட்ட இறுதிப் போட்டியில் 7ஆவது இடத்தைப் பிடித்த இந்திய அணியில் இயிசுனா மேத்யூவும் இருந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Koshie, Nihal (5 May 2015). "Running with the best, 16-year-old Jisna Mathew holds her own". The Indian Express. https://indianexpress.com/article/sports/sport-others/running-with-the-best-16-year-old-jisna-holds-her-own/. பார்த்த நாள்: 12 August 2016. 
  2. Nihal, Koshie (5 May 2015). "Running with the best, 16-year-old Jisna Mathew holds her own". The Indian Express. Retrieved 5 June 2025.
  3. 3.0 3.1 3.2 Rayan, Stan (8 August 2020). "Jisna Mathew: on the fast lane to securing Tokyo Olympics berth". Sportstar. Retrieved 5 June 2025.
  4. Express Web Desk (1 August 2016). "Jisna Mathew Profile: Women's 4x400m Relay". The Indian Express. http://indianexpress.com/sports/rio-2016-olympics/jisna-mathew-profile-india-400m-relay-medal-records-2948347/. பார்த்த நாள்: 12 August 2016. 
  5. Rajan, Adwaidh (24 December 2014). "A Perfectionist Who chases time". The Indian Express இம் மூலத்தில் இருந்து 16 November 2015 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20151116154442/http://www.newindianexpress.com/cities/kochi/A-Perfectionist-Who-chases-time/2014/12/24/article2585514.ece. 
  6. "DECISION OF THE ATHLETICS INTEGRITY UNIT IN THE CASE OF MS SHEORAN NIRLMA" (PDF). Athletics Integrity Unit. 7 October 2019. Archived from the original (PDF) on 22 October 2021. Retrieved 5 June 2025.

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இயிசுனா_மேத்தியூ&oldid=4378473" இலிருந்து மீள்விக்கப்பட்டது