இமாம் இப்னு மாஜா
அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் இப்னு மாஜா ابو عبد محمد بن يزيد بن ماجه الربعي القزويني | |
---|---|
பட்டம் | இமாம் இப்னு மாஜா |
பிறப்பு | இ.நா 209 ( கி.பி. 824) கஸ்வீன், பாரசீகம் (இன்றைய இரான்) |
இறப்பு | இ.நா 273 ( கி.பி. 887 |
சமாதி | கஸ்வீன் |
காலம் | அப்பாசிய கலிபாக்கள் |
பிராந்தியம் | இசுலாம் |
பணி | இஸ்லாமிய அறிஞர், ஹதீஸ் தொகுப்பாளர் |
சட்டநெறி | ஷாபி |
முதன்மை ஆர்வம் | ஹதீஸ் |
ஆக்கங்கள் | இப்னு மாஜா (நூல்) |
செல்வாக்கு செலுத்தியோர்
|
அபூ அப்தில்லாஹ் முஹம்மத் பின் யஸீத் இப்னு மாஜா ("Abū ʻAbdillāh Muḥammad ibn Yazīd Ibn Mājahj" அரபு மொழி: ابو عبد الله محمد بن يزيد بن ماجه الربعي القزويني) பொதுவாக இமாம் இப்னு மாஜா என அழைக்கப்படுகிறார்.இவர் பாரசீக இஸ்லாமிய அறிஞர் , குறிப்பாக ஒரு முஹதீத் ( ஹதீஸ் கலை அறிஞர் ) என்று அழைக்கப்படுகிறார்.[1]. ஆறு முக்கிய ஹதீஸ்கள் தொகுப்புகளான ஸிஹாஹ் ஸித்தாவில் இவர் தொகுத்த இப்னு மாஜா மிகவும் நம்பகமான ஹதீஸ் தொகுப்பாக கருதப் படுகிறது.[2].
பிறப்பு
[தொகு]இமாம் இப்னு மாஜா, இ.நா 209 ( கி.பி. 824)ல் பாரசீக குடும்பத்தில் (இன்றைய இரான் நாட்டில்) உள்ள கஸ்வீன் என்ற ஊரில் பிறந்தார். [3][4].இவரது இயற்பெயர் முஹம்மத் பின் யஸீத் என்பதாகும்.இவரது தந்தை பெயர் யஸீத். இவர் ரபயீ கோத்திரத்தைச் சார்ந்தவர்.
ஹதீஸ் தொகுப்பு
[தொகு]இமாம் இப்னு மாஜா,அவர்கள் கஸ்வீன் என்ற தன்னுடைய ஊரில் ஏறத்தாழ 20ஆவது வயதில் கல்வி கற்க ஆரம்பித்தார்கள்.பின்னர் ஹதீஸ்கள் சேகரிக்க குராசான், ஹிஜாஸ், மிஸ்ர், ஷாம் தற்போதைய ஈராக் , சிரியா மற்றும் எகிப்து உட்பட அரேபிய தீபகற்பத்தில் உள்ள பகுதிகளுக்கு பல தடவை பயணம் செய்தார்.
இவரது ஹதீஸ் சேகரிப்பான இப்னு மாஜா நூல் 4,000 ஹதீஸ்கள் 1,500 அத்தியாயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.இப்னு மாஜா தொகுப்பு இது 32 புத்தகங்களாக தொகுக்கப் பட்டுள்ளது.[3].[4].
இவரது ஆசிரியர்கள்
[தொகு]அப்துல்லாஹ் பின் அபீஷைபா, அலீ பின் முஹம்மத், முஸ்அப் பின் அப்தில்லாஹ் உஸ்மான் பின் அபீஷைபா, மற்றும் பலர்.
இவரது மாணவர்கள்
[தொகு]அலீ பின் இப்ராஹீம் அல்கத்தான், சுலைமான் பின் யஸீத், முஹம்மது பின் ஈஸா மற்றும் அபூபக்கர் ஹாமித்.
நூல்கள்
[தொகு]- இப்னு மாஜா (நூல்)
- அத்தாரீஹ்
- அல் தஃப்சீர் [3]
இறப்பு
[தொகு]இமாம் இப்னு மாஜா,அவர்கள் கஸ்வீன் என்ற தன்னுடைய ஊரிலேயே ரமலான் மாதம் இ.நா 273 ( பிப்ரவரி 19ல் கி.பி. 887 )ல் இறந்தார்.அங்கேயே அடக்கம் செய்யப்பட்டுள்ளார்கள்.[5]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Abdul Mawjood, Salahuddin `Ali (2007). The Biography of Imam Muslim bin al-Hajjaj. translated by Abu Bakr Ibn Nasir. Riyadh: Darussalam. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9960988198.
- ↑ Various Issues About Hadiths
- ↑ 3.0 3.1 3.2 al-Dhahabi, Muhammad ibn Ahmad (1957). al-Mu`allimi (ed.). Tadhkirat al-Huffaz (in Arabic). Vol. 2. Hyderabad: Da`irat al-Ma`arif al-`Uthmaniyyah. p. 636.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link) - ↑ 4.0 4.1 Ludwig W. Adamec (2009), Historical Dictionary of Islam, p.139. Scarecrow Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0810861615.
- ↑ al-Kattani, Muhammah ibn Ja`far (2007). Muhammad ibn Muhammad al-Kattani (ed.). al-Risalah al-Mustatrafah (in Arabic) (seventh ed.). Beirut: Dar al-Bashair al-Islamiyyah. p. 12.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)