இப்ராகிம் பின் அப்துல்லா மஸ்கதி
Appearance
இப்ராகிம் பின் அப்துல்லா மஸ்கதி | |
---|---|
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினர் | |
பதவியில் 2006–2012 | |
தொகுதி | சட்டப் பேரவை உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் |
ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவையின் மேலவை உறுப்பினர் | |
பதவியில் 1985–1994 | |
முன்னையவர் | கவாஜா அபு சயீது |
பின்னவர் | மும்தாஜ் அகமது கான் |
தொகுதி | யாகுத்புரா |
உருது கழகத்தின் தலைவர் | |
பதவியில் 2002–2015 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 1930 |
இறப்பு | 2015 |
அரசியல் கட்சி | தெலுங்கு தேசம் கட்சி (2002-2015) |
பிற அரசியல் தொடர்புகள் | அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் (1989-2002) சுயேட்சை (1985-1989) |
இப்ராகிம் பின் அப்துல்லா மஸ்கதி (Ibrahim Bin Abdullah Masqati) (1930-2015) ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் ஆந்திரப் பிரதேச சட்டப் பேரவை உறுப்பினராக பணியாற்றினார். யாகுத்புரா சட்டமன்றத் தொகுதியில், 1985 இல் சுயேச்சை வேட்பாளராகவும், 1989 இல் அனைத்திந்திய மஜ்லிசே இத்திகாதுல் முசுலிமீன் வேட்பாளராகவும் இரண்டு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார். [1] [2] பின்னர் 2002 இல் தெலுங்கு தேசம் கட்சியில் சேர்ந்தார். [3] 2006 முதல் 2012 வரை ஆந்திரப் பிரதேச சட்ட மேலவை உறுப்பினராக பணியாற்றினார். [4] 2002 முதல் உருது கழகத்தின் தலைவராக இருந்து தான் இறக்கும் வரை பணியாற்றினார். [5] இவர் ஆகஸ்ட் 25, 2015 அன்று இறந்தார் [6]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "MIM, Congress woo Masqati family". https://www.thehindu.com/news/cities/Hyderabad/mim-congress-woo-masqati-family/article25084779.ece.
- ↑ "MIM trains its guns on Masqati". https://timesofindia.indiatimes.com/city/hyderabad/mim-trains-its-guns-on-masqati/articleshow/98508.cms?from=mdr.
- ↑ "TDP leaders manipulated Majlis defections". https://timesofindia.indiatimes.com/city/hyderabad/tdp-leaders-manipulated-majlis-defections/articleshow/1971701817.cms?from=mdr.
- ↑ "Ibrahim Bin Abdullah Masquati(TDP):(ELECTED BY MLAS) - Affidavit Information of Candidate:". பார்க்கப்பட்ட நாள் 2023-08-07.
- ↑ "Former TDP Legislator Masqati Dead". பார்க்கப்பட்ட நாள் 2023-08-07.
- ↑ "TD leader Masqati dead" (in en-IN). The Hindu. 2015-08-24. பன்னாட்டுத் தர தொடர் எண்:0971-751X. https://www.thehindu.com/news/national/andhra-pradesh/td-leader-masqati-dead/article7576741.ece.