இப்னு அரபி
இப்னு அரபி | |
பிறப்பு | 25 சூலை 1165 மூர்சியா, எசுப்பானியா |
இறப்பு | 8 நவம்பர் 1240 சலீஹிய்யா, திமிஷ்கு-அயூபித் வம்சம் |
காலம் | இசுலாமியப் பொற்காலம் |
பள்ளி | சூபித்துவம் |
முக்கிய ஆர்வங்கள் | உள்ளுணர்வியல், சூபித்துவம், கவிதை |
செல்வாக்குச் செலுத்தியோர்
| |
செல்வாக்குக்கு உட்பட்டோர்
|
இப்னு அரபி (றலி) என அழைக்கப்படும் அபு அப்தல்லா முகம்மது இப்னு அலி இப்னு முகம்மது இப்னு அல்-அரபி அல்-ஹாத்திமி அத்தாய் (Abū ʿAbd Allāh Muḥammad ibn ʿAlī ibn Muḥammad ibn al-ʿArabī al-Ḥātimī aṭ-Ṭāʾī, அரபு மொழி: أبو عبد الله محمد بن علي بن محمد بن العربي الحاتمي الطائي சூலை 25, 1165 - நவம்பர் 8, 1240) என்பவர் அராபிய சூபி இறைஞானியும், மெய்யியலாளரும் ஆவார். சூபித்துவத்தைப் பின்பற்றுபவர்களால் இவர் "பெரும் அறிஞர்" எனவும்[1] உண்மையான ஞானி எனவும் போற்றப்பட்டவர்[2]
வாழ்க்கைக் குறிப்பு
[தொகு]இவர் ஹிஜ்ரி ஆண்டு 560 இல் எசுப்பானியாவில் உள்ள மூர்சியா என்னும் இடத்தில் பிறந்து 'இஸ்பீலியா' என்ற ஊரில் வளர்ந்தார்.
"அஷ்ஷெய்க்குல் அக்பர்" (மாபெரும் குருநாதர்), "முகியுதின் இப்னு அரபி" "ஹுஜ்ஜத்துல்லாஹில் ளாஹிரா" (இறைவனின் வெளிப்படையான அத்தாட்சி), "ஆயத்துல்லாஹில் பாஹிரா" (இறைவனின் வியத்தகு அற்புதம்) ஆகிய சிறப்புப் பெயர்களால் அழைக்கப்பட்டார்.[3] இவர்கள் அதிகமான நூல்கள் எழுதியுள்ளார்கள். அவற்றுள் 'அல் புதுஹாத்துல் மக்கியா', புஸுசுல் ஹிகம்', 'மபாதிஹுல் கைப்', அத்தஹ்ரிபாத்', 'முஹாளறதுல் அப்றார்' ஆகியவை மிகப் பிரபலமானவையாகும்.
இவர் மத்திய கிழக்கு நாடுகளில் பயணம் செய்து இஸ்லாமிய பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்த வேளையில், சிரியாவின் தலைநகர் ('திமிஷ்க்') டமஸ்கசில் ஹிஜ்ரி ஆண்டு 638 (கி.பி.1240) காலமானார்.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ Attested by many legendary scholars of Shariah such as al-Alusi al-Hanafi in his magnificent Tafsir where he addressed the Sheikh as: The Sheikh ul Akbar (greatest sheikh), Muhayuddin Ibn Arabi Qudus Allah Ta’la Sira [Ruh ul Ma’ani Volume # 7, Page # 741]
- ↑ அல்-சுயூதி, Tanbih al-Ghabi fi Tanzih Ibn ‘Arabi (p. 17-21)
- ↑ "The Meccan Revelations". உலக மின்னூலகம். 1900–1999. பார்க்கப்பட்ட நாள் 2013-07-14.