இனி அவன் (திரைப்படம்)
இனி அவன் | |
---|---|
இயக்கம் | அசோக ஹந்தகம |
தயாரிப்பு | ஜகத் வெள்ளவத்த, அனுரா பெர்னாண்டோ |
கதை | அசோக ஹந்தகம |
திரைக்கதை | அசோக ஹந்தகம |
இசை | கபில பூகலஆராச்சி |
நடிப்பு | தர்ஷன் தர்மராஜ், சுபாஷினி பாலசுப்ரமணியம், நிரஞ்சனி சண்முகராஜா, ராஜா கணேசன், கிங் இரத்தினம், மல்கம் மசாடோ, பெர்மினஸ், பொனிப்பஸ் தைரியநாதன், தங்கேஸ்வரி தைரியநாதன்,மகேஸ்வரி இரத்தினம் |
ஒளிப்பதிவு | சண்ண தேசபிரிய |
வெளியீடு | 2012 |
நாடு | இலங்கை |
மொழி | தமிழ் |
இனி அவன் என்பது 2012 ஆம் ஆண்டில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு தமிழ்த் திரைப்படம். இத்திரைப்படத்தை பிரபல சிங்களத் திரைப்பட இயக்குநர் அசோக ஹந்தகம இயக்கியிருக்கிறார். முற்று முழுதாக யாழ்ப்பாணத்தில் படமாக்கப்பட்ட இந்தத் திரைப்படம் கான்ஸ் திரைப்படவிழா 2012, ரொறொண்டோ திரைப்பட விழா 2012, எடின்பரோ திரைப்பட விழா போன்ற பல உலகலாவிய முக்கிய திரைப்பட விழாக்களிலும் கலந்துகொண்டு வரவேற்பை பெற்றுக்கொண்டது. அது மட்டுமல்லாது சப்பானில் இடம்பெற்ற டோக்கியோ பன்னாட்டுத் திரைப்பட விழாவில் ஆசிய மற்றும் மத்திய கிழக்கு நாடுகளின் சிறந்த திரைப்படமாக நடுவர் குழாமால் தெரிவு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டுள்ளது. இலங்கைத் திரையரங்குகளில் 2012 டிசம்பர் மாதம் 21ம் திகதி வெளியிடப்பட்டது. இலங்கை சினிமா வரலாற்றில் இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஒரு தமிழ்ப்படம் தமிழ். சிங்களம் என்ற வேறுபாடுகள் இல்லாது எல்லா திரையரங்குகளிலும் ஒரே நாளில் வெளியிடப்பட்டது இதுவே முதல்முறை[1].
இனி அவன் திரைப்படம் 2009 முள்ளிவாய்க்கால் பேரழிவிற்கு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் புனர்வாழ்வு முகாமிலிருந்து சமூகவாழ்க்கைக்கு திரும்பும் ஒரு முன்னாள் போராளியின் வாழ்க்கையினை மையமாக கொண்டு எடுக்கபட்டிருப்பது மாத்திரமலல்லாது யாழ்ப்பாணத்தின் இன்றைய நிலையினையும் எதிர்காலத்தில் தமிழர்களின் மத்தியில் ஏற்படப்போகும் பிரச்சனைகளையும் மிகநுணுக்கமான முறையின் கூறிச்சென்றிருக்கிறது. அத்தோடு முன்னாள் போராளிகளுக்கு அரசாங்கத்தால் வழங்கப்படும் புனர்வாழ்வு தொடர்பாகவும் இந்த திரைப்படம் கேள்வியெழுப்புகின்றது.
திரையிடப்பட்ட சில உலகத் திரைப்பட விழாக்கள்
[தொகு]- கான்ஸ் சர்வதேச திரைப்பட விழா 2012
- ஜிஜோஞ்சு சர்வதேச திரைப்பட விழா 2012
- ரொராண்டோ சர்வதேச திரைப்பட விழா 2012
- எடின்பரோ சர்வதேச திரைப்பட விழா 2012
- துபாய் சர்வதேச திரைப்பட விழா 2012
- ஹம்பேர்க் சர்வதேச திரைப்பட விழா 2012
- டோக்கியோ சர்வதேச திரைப்பட விழா 2012
- பெங்களுர் சர்வதேச திரைப்பட விழா 2012
- ஹனோய் சர்வதேச திரைப்பட விழா 2012
- ஆசிய பசுபிக் திரை விருது விழா 2012
மேற்கோள்கள்
[தொகு]- ↑ விரைவில் திரையிடப்படவுள்ள " இனி அவன்.." நம்நாட்டுத் திரைப்படம் பரணிடப்பட்டது 2012-12-02 at the வந்தவழி இயந்திரம், வீரகேசரி