நிரஞ்சனி சண்முகராஜா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நிரஞ்சனி சண்முகராஜா
தேசியம்இலங்கைத் தமிழர்
பணிதிரைப்பட நடிகை, தொகைக்காட்சித் தொகுப்பாளர்
அறியப்படுவதுஇனி அவன்
கோமாளி கிங்ஸ்
கிரிவசிபுர
சுனாமி
விருதுகள்சிறந்த நடிகை - கிரு கோல்டன் திரைப்பட விருது,
சிறந்த நடிகை - தெரன லக்சு திரைப்பட விருது 2013
சிறந்த நடிகை - இலங்கை சர்வதேச திரைப்பட விழா, கலிபோர்னியா 2022[1]

நிரஞ்சனி சண்முகராஜா (Niranjani Shanmugaraja) இலங்கைத் தமிழ் திரைப்பட நடிகையும், தொலைக்காட்சித் தொகுப்பாளரும் ஆவார். இவர் இலங்கை சிங்கள, தமிழ்த் திரைப்படங்களில் நடித்து விருதுகள் பெற்றவர்.[2][3] இவர் ரூபவாகினி தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் பணியாற்றுகிறார்.

பணி[தொகு]

நிரஞ்சனி முதன் முதலில் 2012 ஆம் ஆண்டில் இனி அவன் என்ற விருது பெற்ற இலங்கைத் தமிழ்த் திரைப்படத்தில் துணைப்பாத்திரத்தில் நடித்தார். இத்திரைப்படத்தில் தர்சன் தர்மராஜ், சுபாசிணி பாலசுப்பிரமணியம் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்தனர்.[4] 2014 இல் நடைபெற்ற கிரு கோல்டன் திரைப்பட விருது விழாவில், இனி அவன் திரைப்படத்திற்காக சிறந்த துணை நடிகைக்கான விருதைப் பெற்றார்.[5][6] 2013 ஆம் ஆண்டுக்கான தெரன இலக்சு திரைப்பட விருதுகளில் சிறந்த நடிகைக்கான விருதையும் வென்றார். 2018 ஆம் ஆண்டு வெளிவந்த இலங்கைத் தமிழ்த் திரைப்படங்களில் ஒரு முக்கியத் திரைப்படமாக கருதப்படும் கோமாளி கிங்ஸ் திரைப்படத்தில் முதன்முறையாக முன்னணிக் கதாநாயகியாக இவர் நடித்தார்.[7]

2021 இல், இவர் ரஃபயெல்லா பெர்னாண்டோ புகழ் விளம்பர நாட்காட்டியில் இடம்பெற்றார்.[8] அதே ஆண்டில், பயெல்சா சர்வதேச திரைப்பட விழாவில் சுனாமி என்ற 2020 இல் வெளிவந்த சிங்களத் திரைப்படத்தில் நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விருதைப் பெற்றார்.[9] 2022 சூன் மாதத்தில் கலிபோர்னியாவில் இடம்பெற்ற இலங்கை பன்னாட்டு திரைப்பட விழாவில் இவருக்கு சுனாமி திரைப்படத்தில் சிறப்பாக நடித்தமைக்காக சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது.[1]

திரைப்படங்கள்[தொகு]

ஆண்டு திரைப்படம் பாத்திரம் மொழி குறிப்புகள்
2012 இனி அவன் தமிழ்
  • சிறந்த துணை நடிகை - கிரு கோல்டன் திரைப்பட விருது (2014)[5]
2016 சிவப்பு வண்ணத்துப்பூச்சி கனவு ராஜினி சிங்களம்
2017 மகன்களும் தந்தைகளும் சிங்களம்
2018 கோமாளி கிங்ஸ் யோகா தமிழ் கதாநாயகி
2020 சுனாமி கல்யாணி சிங்களம்
  • கதாநாயகி
  • சிறந்த நடிகை - பயெல்சா சர்வதேச திரைப்பட விழா, 2021,
  • சிறந்த நடிகை - இலங்கை சர்வதேச திரைப்பட விழா, கலிபோர்னியா 2022[1]
2021 கிரிவசிபுர பேரரசி ரங்கநாயகி சிங்களம் கதாநாயகி
சொப்பன சுந்தரி தமிழ் தயாரிப்பில்
2022 வித்துக்கள் தமிழ்/சிங்களம்/ஆங்கிலம் கதாநாயகி[10]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 Winners of the first Ceylon International Film Festival announced, cinema.lk, 16 சூன் 2022
  2. AlloCine. "Niranjani Shanmugaraja". http://www.allocine.fr/personne/fichepersonne_gen_cpersonne=622001.html. 
  3. www.films.lk. "Niranjani Shanmugarajah - - films.lk - Sri Lanka Cinema". www.films.lk. http://www.films.lk/sinhala-cinema-artist-niranjani-shanmugarajah-5341.html. 
  4. Correspondent, VM Sathish with inputs from (2012-12-21). "Sri Lankan Tamil movie releases to rave reviews". Emirates 24|7. https://www.emirates247.com/news/sri-lanka/sri-lankan-tamil-movie-releases-to-rave-reviews-2012-12-21-1.488149. 
  5. 5.0 5.1 "Hiru golden film awards which took srilankan cinema to global stage concludes successfully massive response from public". Hiru News. 26 October 2014 இம் மூலத்தில் இருந்து 19 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170819144515/http://www.hirunews.lk/95557/hiru-golden-film-awards-which-took-sri-lankan-cinema-to-global-stage-concludes-successfully-massive-response-from-public-video. 
  6. "‘Ini-Avan’ : To break barriers of cinema". The Sunday Times (Sri Lanka). 26 August 2012. http://www.sundaytimes.lk/120826/magazine/ini-avan-to-break-barriers-of-cinema-9833.html. 
  7. "Rebirth of Sri Lankan Tamil Cinema". The Sunday Times Sri Lanka. http://www.sundaytimes.lk/180218/magazine/rebirth-of-sri-lankan-tamil-cinema-281713.html. 
  8. "Rafaela's calendar changed by art stars" 2021-02-17 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify |archivedate=, you must also specify |archiveurl=. http://www.sarasaviya.lk/interviews/2021/02/18/19877/කලා-තරු-වෙනස්-කරපු-රැෆෙලාගේ-කැලැන්ඩරය. 
  9. "I could not go to get the award but the award finds me". 2021-11-03. https://www.sarasaviya.lk/interviews/2021/11/04/21177/සම්මානය-ගන්න-යන්න-බැරි-වුණාට-සම්මානය-මාව-හොයාගෙන-එයි. 
  10. "Praana comes in early August" 2022-07-02 அன்று. பரணிடப்பட்டது.. Error: If you specify |archivedate=, you must also specify |archiveurl=. https://www.sarasaviya.lk/news-films-local/2022/07/15/23523/%EF%BB%BFප%E2%80%8D්%E2%80%8Dරාණ-අගෝස්තු-මුල. 

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நிரஞ்சனி_சண்முகராஜா&oldid=3533134" இருந்து மீள்விக்கப்பட்டது