இந்துலேகா வாரியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்துலேகா வாரியர்
இயற்பெயர்இந்துலேகா ஜெ.
பிற பெயர்கள்இந்துலேகா ஜெயராஜ்
பிறப்பு15 சூலை 1993 (1993-07-15) (அகவை 30)
திருச்சூர், கேரளம், இந்தியா
இசை வடிவங்கள்பின்னணிப் பாடகர், சொல்லிசைப் பாடகி
தொழில்(கள்)பின்னணிப்பாட்கர், இசையமைப்பாளர், நடிகை
இசைத்துறையில்2011 – முதல்

இந்துலேகா வாரியர் (Indulekha Warrier-பிறப்பு 15 சூலை 1993) ஓர் இந்தியப் பின்னணிப் பாடகர், இசையமைப்பாளர், சொல்லிசைப் பாடகர் மற்றும் நடிகர் ஆவார்.[1] இவர் முக்கியமாக மலையாளத் திரைத்துரையில் பணியாற்றி வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு படங்களிலும் பங்களிப்பினை செய்துவருகிறார். இந்துலேகா கருநாடக பாரம்பரிய இசை, கதகளி பயிற்சி பெற்ற கலைஞர் ஆவார். மேலும் இவர் அங்கீகரிக்கப்பட்ட சொல்லிசைக் கலைஞரும் ஆவார்.[2]

வாழ்க்கை[தொகு]

இந்துலேகா வாரியர் திருச்சூரில் , ஒரு நகைச்சுவை/கேலிச்சித்திர கலைஞரும் மலையாள திரையுலகில் நடிகருமான ஜெயராஜ் வாரியருக்கும் உஷா ஜெயராஜூக்கும் மகளாகப் பிறந்தார். கலைகளில் விருப்பமுள்ள ஒரு குடும்பத்தில் பிறந்த இந்துலேகா குழந்தையாக இருக்கும்போதே இசை உலகிற்கு அறிமுகப்படுத்தப்பட்டார். சிறு வயதிலேயே பாடத் தொடங்கினார். ஆரம்பத்தில் தனது தந்தையுடன் இவரது சுற்றுப்பயணம் அமைந்தது. இவர் இந்திய பாதுகாப்பு கணக்குகள் சேவையில் பணியாற்றிய இந்தியக் குடிமைப்பணி அதிகாரியான ஆனந்த் அச்சுதன்குட்டி என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு சாரங் என்ற மகன் உள்ளார், இவர் 23 திசம்பர் 2021 அன்று பிறந்தார்

தொழில்[தொகு]

இந்துலேகா திரைப்பட நடிப்பினை தனது அறிமுகப் படமான லவுடு ஸ்பீக்கர் எனும் திரைப்படத்தில் 2009ஆம் ஆண்டில் தொடங்கினார். இதில் இவர் ஒரு பாடலில் நடித்தார். இவர் 2014ஆம் ஆண்டில் பின்னணி பாடகியாக மீண்டும் திரையுலகிற்கு ஈர கன்னினோ தேவரூபம் எனும் பாடலைப் பாடி திரும்பினார். இந்தப் பாடல் மலையாள திரைப்படமான அப்போதெக்கரியில் இடம் பெற்றது. இதன் பின்னர் மலையாளத் திரைப்படங்களில் சொல்லிசைப் பாடகராக மலையாள திரைத்துறையில் பங்களித்துள்ளார்.

திரைப்படவியல்[தொகு]

ஆண்டு படம் இயக்குனர் பங்கு
2009 லவுடு ஸ்பீக்கர் (திரைப்படம்) ஜெயராஜ் சௌதாமினி

திரையிசைத் தொகுப்பு[தொகு]

ஆண்டு தலைப்பு இசையமைப்பாளர் திரைப்படம் மொழி
2014 ஈர கன்னினோ தேவரூபம் ஷேக் எல்லாஹி அப்போதெக்கரி (திரைப்படம்) மலையாளம்
2015 பெசு பெசு வித்யாசாகர் உச்சத்துல சிவா தமிழ்
2018 புதுவை செம்பா சாரித் ஆட்டோர்ஷா மலையாளம்
2020 பட்டுபெட்டிகார இந்துலேகா வாரியர் துனியவிந்தே ஓரிரண்டு மலையாளம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "A tete-a-tete with singer Indulekha Warrier".
  2. "Singer Indulekha Warrier's 'Pen rap' wins attention".
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்துலேகா_வாரியர்&oldid=3910493" இலிருந்து மீள்விக்கப்பட்டது