இந்திராவதி அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இந்திராவதி அணை
ଇନ୍ଦ୍ରାବତୀ ଜଳବନ୍ଧ
Indiravati Dam.jpg
முகிகுடா மின்நிலையம்
அதிகாரபூர்வ பெயர்மேல் இந்திராவதி மின் நிலையம்
அமைவிடம்ஒடிசா மாநிலம் பவானிபட்வினால் இருந்து 90கிமி
புவியியல் ஆள்கூற்று19°16′34.8″N 082°49′42.4″E / 19.276333°N 82.828444°E / 19.276333; 82.828444ஆள்கூறுகள்: 19°16′34.8″N 082°49′42.4″E / 19.276333°N 82.828444°E / 19.276333; 82.828444
கட்டத் தொடங்கியது1978
திறந்தது2001
அணையும் வழிகாலும்
வகைஈர்ப்பு அணை
Impoundsஇந்திராவதி ஆறு
உயரம்45 m (148 ft)
நீளம்539 m (1,768 ft)
நீர்த்தேக்கம்
உருவாக்கும் நீர்த்தேக்கம்மேல் இந்திராவதி
மொத்தம் capacity2,300,000,000 m3 (1,900,000 acre⋅ft)[1]
வடி நிலம்2,630 km2 (1,020 sq mi)
மேற்பரப்பு area110 km2 (42 sq mi)
மின் நிலையம்
Nameமேல் இந்திராவதி மின் நிலையம்
Operator(s)OHPC
Commission date1999
சுழலிகள்4 x 150 Francis-type
பெறப்படும் கொள்ளளவு600 MW

இந்திராவதி அணை  இந்திராவதி ஆறு மீது கட்டப்பட்டுள்ள ஈர்ப்பு அணை ஆகும் . இது இந்தியாவின்  ஒடிசா மாநிலத்திலுள்ள  பவானிபட்னாவிலிருந்து சுமார் 90 கி. மீ தொலைவில் உள்ளது. இது  முதன்மை  இந்திராவதி நீர்த்தேக்கத்துடன் 4.32 கி. மீ., நீண்ட மற்றும் 7 மீட்டர் குறுக்களவு  கொண்ட  சுரங்கப்பாதை வழியாக இணைக்கப்பட்டுள்ளது. இதன்  வெளியேற்ற திறன் 210 கனமீட்டர்/விநாடி  ஆகும். மேலும் இது   ஒரு எழுச்சி தண்டை சுழற்றி செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது 600 மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் திறன்  கொண்ட அணை ஆகும்.

மேல் இந்திராவதி  திட்டமானது, இந்திராவதி நதியின்  நீர்  மகாநதி  படுகையில் பாயுமாறு வகுக்கப்பட்டிருக்கிறது. இது மின் உற்பத்தி மற்றும் நீர்ப்பாசன வசதிக்காக பயன்படுத்தப்படுகிறது. கூடுதலாக, இந்திராவதி மற்றும் அதன்  கிளை நதிகளில் 4 அணைகள் கட்டுதல், 8 கரைகளுடன்  கூடிய இணைப்புக் கால்வாய்கள் அமைத்து 1,435.5 மில்லியன் கனமீட்டர் நேரடி திறன் கொண்ட ஒரே நீர் தேக்கத்தை  உருவாக்குதல், ஹதி மற்றும் மஹாநதி ஆற்றுப் படுகைகளுக்கு  இடையே  ஒரு தடுப்பை உருவாக்குதல் ஆகியவை இந்த திட்டத்தின் முக்கிய குறிக்கோள்கள் ஆகும்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Upper Indravati Multi Purpose Project JI02388". India WRIS. பார்த்த நாள் 11 February 2016.
  2. "Indrawati Dam D01012". India WRIS. பார்த்த நாள் 11 February 2016.

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திராவதி_அணை&oldid=2385810" இருந்து மீள்விக்கப்பட்டது