உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய கருந்தேனீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்திய கருந்தேனீ
உயிரியல் வகைப்பாடு
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
கைமினாப்பிடிரா
குடும்பம்:
ஏபிடே
பேரினம்:
இனம்:
ஏ. கரிஞ்சோடியன்
இருசொற் பெயரீடு
ஏபிசு கரிஞ்சோடியன்
சானாசு மற்றும் பலர், 2022

இந்திய கருந்தேனீ (ஏபிசு கரிஞ்சோடியன்) என்பது இந்தியாவில் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஏபிசு பேரினத்தின் சிற்றினமாகும். இந்த சிற்றினம் இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி ஆகும்.[1] இந்த சிற்றினம் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் கேரளா, தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கோவா ஆகிய மாநிலங்களிலிருந்து பதிவாகியுள்ளது. ஏ. இண்டிகா மற்றும் ஏ. செரானா தவிர, இந்த புதிய தேனீ வளர்ப்பிற்குப் பயன்படுத்தப்படுகிறது. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்ப்பட்டியலின்படி இந்த சிற்றினம் அச்சுறு நிலையை அண்மித்த இனமாகக் கருதப்படுகிறது.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. Shanas, S. ., Anju, K. G., & Mashhoor, K. . (2022). Identity of cavity nesting honey bees of the Indian subcontinent with description of a new species (Hymenoptera: Apidae: Apinae: Apini: Apis). ENTOMON, 47(3), 197–220.
  2. https://www.thehindu.com/news/national/kerala/new-honeybee-species-endemic-to-western-ghats-found/article66092592.ece
"https://ta.wikipedia.org/w/index.php?title=இந்திய_கருந்தேனீ&oldid=3717935" இலிருந்து மீள்விக்கப்பட்டது