உள்ளடக்கத்துக்குச் செல்

இந்திய அணுக்கரு மருத்துவ குழுமம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய அணுக்கரு மருத்துவ குழுமம் (Society of Nuclear medicine of India) என்பது அணுக்கரு மருத்துவத் துறையில் பணியிலுள்ள மருத்துவர்கள் ஆய்வாளர்களின் அமைப்பாகும். இந்தியாவில் அணுக்கரு மருத்துவத் துறையினை வளர்ப்பதும் ஊக்குவிப்பதும் அத்துறையினை முன்னெடுத்துச் செல்வதும் இவ்வமைப்பின் முக்கிய நோக்கமாகும். இத்துறையில் உயர் ஆய்வினை ஊக்கப்படுத்துதல், கதிர் ஐசோடோப்புகளை மருத்துவத்தில் பயன்படுத்தும் மருத்துவர்களுக்கு தங்கள் எண்ணங்களை, ஆய்வின் முடிவுகளை தங்களுக்குள்ளே பகிர்ந்து கொள்ள ஒர் அமைப்பாக அமைந்திருக்கிறது. கதிர் ஐசோடோப்பின் பயன்பாட்டைப் பற்றி பொது மருத்துவர்களிடையே ஒரு புரிதலை உண்டாக்குவதற்கான எல்லா முயற்சிகளையும் மேற்கொள்கிறது. சங்கத்தின் சஞ்சிகை JNMI. 1967 ல் மும்பையில் பதிவு செய்யப்பட்டது. தலைமை இடம் டாட்டா நினைவு மையத்தில் அமைந்துள்ள கதிர்வீச்சு மருத்துவ மையமாகும்.

வெளி இணைப்புகள்

[தொகு]