இதுலிபு மாகாணம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இத்லிப் மாகாணம்
مُحافظة ادلب
மாகாணம்
சிரியாவின் வடமேற்கில் இதுலிபு மாகாணம்
சிரியாவின் வடமேற்கில் இதுலிபு மாகாணம்
ஆள்கூறுகள் (இத்லிப்): 35°42′N 36°42′E / 35.7°N 36.7°E / 35.7; 36.7ஆள்கூறுகள்: 35°42′N 36°42′E / 35.7°N 36.7°E / 35.7; 36.7
நாடு சிரியா
தலைநகரம்இத்லிப்
மாவட்டங்கள்5
பரப்பளவு
 • மொத்தம்6,097
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்15,01,000
 • அடர்த்தி250
நேர வலயம்கிழக்கு ஐரோப்பிய நேரம் (ஒசநே+2)
 • கோடை (பசேநே)கிழக்கு ஐரோப்பிய கோடைக்காலம் (ஒசநே+3)
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடுSY-ID
மொழிகள்அரபு

இத்லிப் மாகாணம் (Idlib Governorate) (அரபு மொழி: مُحافظة ادلب / ALA-LC: Muḥāfaẓat Idlib) சிரியாவின் 14 மாகாணங்களில் ஒன்றாகும். இது சிரியாவின் வடமேற்கில், துருக்கி எல்லையை ஒட்டியுள்ளது. இம்மாகாணத்தின் தலைநகரம் இத்லிப் ஆகும். இட்லிப் மாகாணத்தின் பரப்பளவு 5,933 km²[1] முதல் 6,097 km² வரையாக கணக்கிடப்பட்டுள்ளது.[2]சிரியாவின் உள்நாட்டுப் போருக்கு முன்னர் இம்மாகாணத்தின் மக்கள்தொகை 14,64,000 (2010) ஆக இருந்தது. 2011-இல் சிரியா கிளர்ச்சிப் படைகள் இட்லிப் மாகாணத்தை கைப்பற்றி ஆண்டது.

மாவட்டங்கள்[தொகு]

இட்லிப் மாகாணம் 5 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:

  1. அரியா மாவட்டம்
  2. அரேம் மாவட்டம்
  3. இதுலிபு மாவட்டம்
  4. சிஸ்சுர் அசு-சுக்கூர் மாவட்டம்
  5. மார்ராத் அல்-நுமான் மாவட்டம்

மாவட்டங்களை தாலுக்காக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

சிரியா உள்நாட்டுப் போர்[தொகு]

செப்டம்பர் 2011 முதல் சிரியா விடுதலைப் படையினர் இதுலிபு மாகாணத்தின் அரசுப் படையினருடன் மோதலில் ஈடுபட்டு, இதுலிபு மாகாணத்தை கைப்பற்றினர். 2015-இல் ஹிஸ்புல்லா ஆதரவுப் படைகளுடன், சிரிய அரசுப் படைகள் இத்லிப் நகரத்தை சிரியா விடுதலைப் படைகளிடமிருந்து திரும்ப கைப்பற்றினர். [3] மீண்டும் இதுலிபு நகரம் சிரியக் கிளர்ச்சி படைகளால் கைப்பற்றப்பட்டது. சிரியாவின் அரசுப் படைகள் கிளர்ச்சிப் படைகள் மீது வேதியல் வெடிகுண்டுகள் வீசியதாக உலக நாடுகள் குற்றம் சாட்டியது.[4][5][6][7] இக்குற்றச்சாட்டை சிரிய அதிபர் மறுத்தார்.[8] அக்டோபர் 2017 இறுதியில் சிரிய ஆதரவு துருக்கியப் படைகள் இட்லிப் மாகாணத்தை சிரிய கிளர்ச்சிப் படையினரிடமிருந்து கைப்பற்றியது. [9][10][11]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இதுலிபு_மாகாணம்&oldid=2825902" இருந்து மீள்விக்கப்பட்டது