உள்ளடக்கத்துக்குச் செல்

இதுலிபு ஆளுநரகம்

ஆள்கூறுகள்: 35°42′N 36°42′E / 35.7°N 36.7°E / 35.7; 36.7
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இத்லிப் ஆளுநரகம்
مُحافظة ادلب
சிரியாவில் வடமேற்கில் இதுலிபு மாகாணம்
சிரியாவில் வடமேற்கில் இதுலிபு மாகாணம்
ஆள்கூறுகள் (இத்லிப்): 35°42′N 36°42′E / 35.7°N 36.7°E / 35.7; 36.7
நாடு சிரியா
தலைநகரம்இத்லிப்
மாவட்டங்கள்5
பரப்பளவு
 • மொத்தம்6,097 km2 (2,354 sq mi)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்15,01,000
 • அடர்த்தி250/km2 (640/sq mi)
நேர வலயம்ஒசநே+2 (கி.ஐ.நே.)
 • கோடை (பசேநே)ஒசநே+3 (கி.ஐ.கோ.)
ஐஎசுஓ 3166 குறியீடுSY-ID
மொழிகள்அரபு

இத்லிப் கவர்னரேட் (Idlib Governorate) (அரபு மொழி: مُحافظة ادلب‎ / ALA-LC: Muḥāfaẓat Idlib) சிரியாவின் 14 ஆளுநரகங்களில் (மாகாணம்) ஒன்றாகும். இது சிரியாவின் வடமேற்கில், துருக்கி எல்லையை ஒட்டியுள்ளது. இம்மாகாணத்தின் தலைநகரம் இத்லிப் ஆகும். இட்லிப் மாகாணத்தின் பரப்பளவு 5,933 km²[1] முதல் 6,097 km² வரையாக கணக்கிடப்பட்டுள்ளது.[2]சிரியாவின் உள்நாட்டுப் போருக்கு முன்னர் இம்மாகாணத்தின் மக்கள்தொகை 14,64,000 (2010) ஆக இருந்தது. 2011-இல் சிரியா கிளர்ச்சிப் படைகள் இட்லிப் மாகாணத்தை கைப்பற்றி ஆண்டது.

மாவட்டங்கள்

[தொகு]

இட்லிப் மாகாணம் 5 மாவட்டங்களைக் கொண்டது. அவைகள்:

  1. அரியா மாவட்டம்
  2. அரேம் மாவட்டம்
  3. இதுலிபு மாவட்டம்
  4. சிஸ்சுர் அசு-சுக்கூர் மாவட்டம்
  5. மார்ராத் அல்-நுமான் மாவட்டம்

மாவட்டங்களை தாலுக்காக்களாக பிரிக்கப்பட்டுள்ளது.

சிரியா உள்நாட்டுப் போர்

[தொகு]

செப்டம்பர் 2011 முதல் சிரியா விடுதலைப் படையினர் இதுலிபு மாகாணத்தின் அரசுப் படையினருடன் மோதலில் ஈடுபட்டு, இதுலிபு மாகாணத்தை கைப்பற்றினர். 2015-இல் ஹிஸ்புல்லா ஆதரவுப் படைகளுடன், சிரிய அரசுப் படைகள் இத்லிப் நகரத்தை சிரியா விடுதலைப் படைகளிடமிருந்து திரும்ப கைப்பற்றினர். [3] மீண்டும் இதுலிபு நகரம் சிரியக் கிளர்ச்சி படைகளால் கைப்பற்றப்பட்டது. சிரியாவின் அரசுப் படைகள் கிளர்ச்சிப் படைகள் மீது வேதியல் வெடிகுண்டுகள் வீசியதாக உலக நாடுகள் குற்றம் சாட்டியது.[4][5][6][7] இக்குற்றச்சாட்டை சிரிய அதிபர் மறுத்தார்.[8] அக்டோபர் 2017 இறுதியில் சிரிய ஆதரவு துருக்கியப் படைகள் இட்லிப் மாகாணத்தை சிரிய கிளர்ச்சிப் படையினரிடமிருந்து கைப்பற்றியது. [9][10][11]

மேற்கோள்கள்

[தொகு]
  1. http://www.statoids.com/usy.html
  2. http://www.citypopulation.de/Syria.html
  3. "Gulf allies and 'Army of Conquest". Al-Ahram Weekly. 28 May 2015 இம் மூலத்தில் இருந்து 17 ஏப்ரல் 2019 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20190417102743/http://weekly.ahram.org.eg/News/12392.aspx. 
  4. Theodore Schleifer and Dan Merica. "Trump: 'I now have responsibility' when it comes to Syria". CNN. http://www.cnn.com/2017/04/05/politics/trump-syria-comments-response/index.html. பார்த்த நாள்: 5 April 2017. 
  5. "Syria chemical 'attack': Russia faces fury at UN Security Council". BBC. 5 April 2017. பார்க்கப்பட்ட நாள் 5 April 2017.
  6. "US attack on Syria: world leaders react". The Irish Times. 12 April 2017.
  7. "An official source at Foreign Affairs Ministry expresses Kingdom of Saudi Arabia's strong support for US military operations on military targets in Syria". 12 April 2017.
  8. "Syria's Assad says chemical attack '100 percent fabrication'". Agence France Presse. 13 April 2017. https://www.afp.com/en/news/23/syrias-assad-says-chemical-attack-100-percent-fabrication. 
  9. "Syria: Who's in control of Idlib?". BBC News. 7 September 2018. பார்க்கப்பட்ட நாள் 22 October 2018.
  10. Joe Macaron (17 October 2018). "A confrontation in Idlib remains inevitable". Al-Jazeera. பார்க்கப்பட்ட நாள் 27 October 2018.
  11. "A Jihadist Breakup in Syria" (in en-US). Foreign Affairs. 2017-09-15. https://www.foreignaffairs.com/articles/syria/2017-09-15/jihadist-breakup-syria. 

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=இதுலிபு_ஆளுநரகம்&oldid=3373659" இலிருந்து மீள்விக்கப்பட்டது