இதகுலி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இதகுலி (Itakhuli) அல்லது சுக்ரேசுவர் மலை குவகாத்தியில் பிரம்மபுத்திராவின் தென்கரையில் உள்ள ஒரு சிறிய மலையாகும்.[1] அசாமின் காமரூப் ஊரக மாவட்டத்தின் துணை ஆணையரின் கடந்தகால உத்தியோக பூர்வ இல்லம் இந்த மலையின் மேல் அமைந்திருந்தது. பிரம்மபுத்திரா ஆற்றங்கரை மேம்பாட்டிற்காகத் துணை ஆணையர் மாளிகை காலி செய்யப்பட்டது. துணை ஆணையர் மாளிகையின் மேற்குப் பகுதியில் சுக்ரேசுவர் கோயில் உள்ளது. அகோம், முகலாயர் மற்றும் ஆங்கிலேயர்களுக்கு கம்ரூப்பின் ஆரம்பக் காலத்திலிருந்து இதகுலி மலையானது வைஸ்ராய்களின் இருப்பிடமாகவும், தானைவைப்பகமாகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. துணை ஆணையரின் மாளிகையின் பின்புறத்திலிருந்து பிரம்மபுத்திரா ஆறு, கர்மனாகா பாறைகள் மற்றும் நடுவில் மயில் தீவில் உள்ள உமா நந்தா கோவில், மேற்கில் நிலாச்சல் அல்லது காமாக்யா மலைகள் மற்றும் அகியாத்தூரி ஆகியவற்றைக் காணலாம். வடமேற்கில் வெகு தொலைவில் உள்ள மலைகள், மணிகர்ணேஸ்வர் மலை மற்றும் ஆற்றின் வடகரையில் அஸ்வக்லாந்தா, வடகிழக்கில் குருவா மலைகள் அமைந்துள்ளன.

மேற்கோள்கள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இதகுலி&oldid=3824061" இலிருந்து மீள்விக்கப்பட்டது