இணைய உரையாடல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சராசரி இணைய உரையாடல் மென்பொருளின் அமைப்பு

இணைய உரையாடல்கள் அல்லது அரட்டை நிகழ்ச்சி நிரல்கள், இணைய இணைப்பின் மூலம் உடனுக்குடன் எழுத்து மூலமாகவோ பேச்சு மூலமாகவோ உரையாடிக் கொள்ள உதவுகின்றன. இவை மின்னஞ்சல் போன்று அல்லாமல் உடனடியாக மற்றவரின் மறுமொழியைப் பார்த்தே உரையாட ஏதுவாக இருப்பதால் அனைவராலும் மிகவும் விரும்பப் படுகின்றது. இவை பண்டைய அரசர்காலத்தில் இருந்த தூதுவர்கள் மூலமான உரையாடல்களை ஒத்திருப்பதால் இவ்வகையான உரையாடல் மென்பொருட்களை தூதுவர்கள் என்றும் அழைக்கின்றனர். ஆரம்பத்தில் ASCII முறையில் அமைந்திருந்த உரையாடல்கள், தற்பொழுது தமிழ் உட்பட உலகின் பெரும்பாலான மொழிகளை ஆதரிக்கும் ஒருங்குறி முறையை பயன்படுத்துகிறது. இன்று பெரும்பாலான் இம்மென்பொருட்கள் மூலம் உலகின் எப்பாகத்திலிருந்தாலும் தமக்கிடையில் முற்றிலும் இலவசமாக உரையாட முடிகின்றது.

பிரபலமான உரையாடல் மென்பொருட்கள்[தொகு]

யாஹூ! மெசன்ஜர் 7 இலிருந்து ஒருங்குறி முறையில் தமிழ் உட்பட ஏனைய இந்திய மொழிகளை ஆதரிக்கின்றது. யாகூ! மெசன்ஜரில் தமிழில் ஒருங்குறியில் நேரடியாக தட்டச்சுச் செய்ய யாஹூ! தமிழ்ப் பொருத்து பரணிடப்பட்டது 2006-11-07 at the வந்தவழி இயந்திரம் மூலமாக யாஹூ! மெசன்ஜரிலிருந்து யாஹூ! மற்றும் மற்றும் மைக்ரோசாப்ட் வலையமைப்புகளுடன் ஒருங்குறியில் உரையாடமுடியும். யாஹூ! மெசன்ஜர் 7 இலிருந்து கணினியிலிந்து கணினிக்கு நெரடியாக ஒலிமூலமான உரையாடலை மேற்கொள்ள இயலுமெனினும் சில பாதுகாப்புச்சுவர்கள் (Firewall) இலினூடாக ஒலிமூலமான ஒளிமூலமான (Video) உரையாடலை மேற்கொள்ள முடியவில்லை. இதன் தற்போதைய பதிப்பான 8 இல் பல நாடுகளிற்கான குறைந்த கட்டண வசதிகளுடன் ஒலி அழைப்புக்களை தொலைபேசிகளிற்கு மேற்கொள்ளலாம். இதன் நடப்புப் பதிப்புகள் மற்றும் முன்னைய பதிப்புக்களிலும் ஒலி அழைப்புக்கள் சாத்தியமே எனினும் இதன் 7ஆம் பதிப்பில் இருந்து ஒலியின் தரத்தை முன்னேற்றியுள்ளதாகக் கூறிய போதும் இதன் தரம் ஸ்கைப்பை விடச் சற்றே குறைவானது.
  • ஸ்கைப் (skype)
ஸ்கைப் (Skype) மென்பொருளானது பல்வேறு பாதுகாப்புச்சுவர்களூடாக (firewall) ஒலி (Voice) மற்றும் இதன் 2வது பதிப்பில் ஒளி (Video) அழைப்புக்களையும் (calls) பணம் செலுத்துவதன் மூலம் தொலைபேசிகளிற்கான அழைப்பையும் மேற்கொள்ள முடிகிறது. இதன் ஒலி அழைப்பானது மிகவும் தெளிவானது நேரடியாக உள்ளூர்த் தொலைபேசி அழைப்புக்களைப் போன்றுள்ளது.
  • கெயிம் (Gaim)
கெயிம் (Gaim) பல்வேறு உரையாடல் மென்பொருட்களை இணைக்கும் வசதியைக்கொண்டுள்ளது. எனவே தனித்தனி மென்பொருட்களை ஒவ்வோர் உரையாடலிற்கும் வைத்திருப்பது தேவையற்றது. இது மாத்திரம் அன்றி ஆங்கிலம் மற்றும் பலமொழிகளில் சொற்பிழை திருத்தியையும் கொண்டுள்ளது. லினக்ஸில் இயங்கும் கெயிம் தமிழை நேரடியாக ஒருங்குறியூடாக ஆதரிக்கின்ற போதும் விண்டோஸ் இல் இயங்கும் கெயிமிற்கு நேரடி ஆதரவு இன்னமும் கிடையாது.

தொலைபேசியைக் காட்டிலும் இவற்றில் சில குறைபாடுகளும் இருக்கவே செய்கின்றன. முக்கியமாக ஒரு தூதுவனில் இருந்து பிறிதோர் தூதூவனுக்கு செல்வது மிகவும் சிரமமான செயல். கூகிள் டாக் jabber தொழில் நுட்பத்தில் வேறு தூதுவர்களுடன் ஒத்தியங்கினாலும் யாஹூ! மற்றும் மைக்ரோசாஃப்ட் இதில் இன்னமும் இணையாமையால் (இவர்கள் இருவரும் இணைந்தாலும் ஜபர் தொழில் நுட்பத்தைப் பாவிக்கவில்லை) இந்தத் தொழில்நுட்பத்தின் பயன்பாட்டு வெற்றியை இன்னும் கணிக்க இயலவில்லை. இவற்றில் விண்டோஸ் தூதுவன் ஆனது விண்டோஸை நிறுவும் போது கிடைத்தாலும் MSN தூதுவனில் கூடுதல் வசதிகள் கிடைப்பதால் அதைப் பாவிப்பது சிறந்தது.

பதிவிறக்கம்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இணைய_உரையாடல்&oldid=3233565" இலிருந்து மீள்விக்கப்பட்டது