உள்ளடக்கத்துக்குச் செல்

இணையத் தாக்குதல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இணையத் தாக்குதல் (cyber attack) என்பது தகவல் அமைப்புகள், கணினி வலையமைப்புகள், உட்கட்டமைப்புகள், தனிப்பட்ட கணினி சாதனங்கள், அல்லது திறன்பேசிகளை[1] குறிவைக்கும் எந்தவொரு தாக்குதல் செயற்படுகளையும் குறிக்கும். இது தரவு, செயல்பாடுகள் அல்லது கணினியின் பிற தடைசெய்யப்பட்ட பகுதிகளை அங்கீகாரம் இல்லாமல், தீங்கிழைக்கும் நோக்கத்துடன் அணுக முயல்கிறது.[2] சூழலைப் பொறுத்து, இணையத் தாக்குதல்கள் இணையப் போர் அல்லது இணையப் பயங்கரவாதத்தின் ஒரு பகுதியாக இருக்கலாம். இணையத் தாக்குதலை இறைமையுள்ள நாடுகள், தனிநபர்கள், குழுக்கள், சமூகங்கள் அல்லது அமைப்புகளால் பயன்படுத்த முடியும். மேலும் அது அநாமதேய மூலத்திலிருந்து தோன்றலாம். இணையத் தாக்குதலுக்கு வாய்ப்பளிக்கும் ஒரு தயாரிப்பு இணைய ஆயுதம் என்று அழைக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக இணையத் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இணையத் தாக்குதலின் நன்கு அறியப்பட்ட உதாரணம் சேவை மறுப்புத் தாக்குதல் ஆகும்.

இவற்றையும் பார்க்க[தொகு]

உசாத்துணை[தொகு]

  1. "Cyber Attack – Glossary". csrc.nist.gov (in அமெரிக்க ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-09-05.
  2. "ISTQB Standard glossary of terms used in Software Testing". Archived from the original on 5 November 2018. பார்க்கப்பட்ட நாள் 8 March 2019.

மேலதிக வாசிப்பு[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cyberattacks
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இணையத்_தாக்குதல்&oldid=3944625" இலிருந்து மீள்விக்கப்பட்டது