இட்லர் மரண சர்ச்சைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
இவா பிரான் (இடது), இட்லர் (வலது)

இரண்டாம் உலகப் போர் உச்சத்தில் இருந்தபோது அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ் உள்ளிட்ட நேச நாடுகள் ஜெர்மனி மீது வலுவான தாக்குதலைத் தொடுத்துக் கொண்டிருந்தது. இன்னொரு புறமிருந்து ரஷ்யாவும் தாக்குதலைத் தீவிரப்படுத்தி இருந்தது. ஜெர்மனி மீது இவ்வாறு குண்டு மழை பொழிந்து கொண்டிருந்தபோது, இரண்டாம் உலகப் போரின் சூத்திரதாரியான இட்லர், பெர்லின் நகரில் அரசு தலைமை அலுவலக கட்டடத்திற்கு கீழே நிலத்தடியில் அமைக்கப்பட்டிருந்த சுரங்க மாளிகையில் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு பதுங்கியிருந்தார்.

1945ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30ம் தேதி ஜெர்மனி தனது தோல்வியை ஒப்புக்கொண்டு சரணடைந்தது. இந்நிலையில் இட்லரும், அவரது மனைவி இவா பிரானும் தற்கொலை செய்து கொண்டதாகவும், அவர்களது உடல்கள் எதிரிகளின் கைகளில் கிடைக்கக்கூடாது என்ற இட்லரின் ஆசைப்படி எரித்து சாம்பலாக்கப் பட்டதாகவும் கூறப்பட்டது. இதுதான் உலகம் முழுவதும் அனைவருக்கும் தெரிந்த தகவல். இதைத் தான் பெரும் பாலானோர் நம்பிக் கொண்டும் இருக்கின்றனர்.

இட்லரின் இறுதி நாளில் அவரோடு இருந்தவர், அவரது மெய்க்காப்பாளரான ரோஹுஸ் மிஷ், 95 வயதைக் கடந்து இன்றும் உயிரோடிருக்கும் மிஷ், அந்தக் கடைசி நேரக் காட்சிகளை நேரடியாகப் பார்த்தவர். அவரது கூற்று உண்மையானதாக இருக்கும் என்பது அனைவரின் நம்பிக்கை ஆக இருந்தது.

ஏப்ரல் 30ம் தேதி அன்று பங்கரில் உள்ள அனைவரையும் இட்லர் அழைத்து, எல்லாம் முடிந்து விட்டது, அவரவர் தாங்கள் விரும்பிய இடங்களுக்குச் செல்லலாம் தேவையானவர்கள் மட்டும் இங்கு இருந்து கொள்ளலாம்' என்றார். இப்படி அவர் சொன்னதால், அங்கு இருக்க வேண்டியவர்களில் நானும் ஒருவனாக ஆகி விட்டேன். இட்லரும், இவாவும் தற்கொலை செய்வது என்னும் முடிவு அப்போதுதான் எடுக்கப்பட்டது. தற்கொலை செய்து கொள்ள வேண்டும் என்பதற்கான யோசனையைக் கூறியவர் அங்கிருந்த டாக்டர் வெர்னர் ஹாஸெ. முதலில் சயனைட் மாத்திரைகளை விழுங்கி விட்டு, பின்னர் துப்பாக்கியால் சுட்டுக்கொள்வது சிறந்த வழி என்றார். இதைக் கேட்ட பின்னர் இட்லர் சில நிமிடங்கள் ஏதோ ஒரு யோசனையில் ஆழ்ந்திருந்தார். பின்னர் தனது மனைவி இவாவுடன் தங்கள் அறையை நோக்கிச் சென்று கதவைச் மூடிக்கொண்டார். நீண்ட நேரம் வரை அங்கிருந்து சத்தம் எதுவும் இல்லை. ஒரு சத்தம் மட்டுமே வந்தது. சிறிது நேரம் இடைவெளியிட்டு இட்லரின் அறையைத் திறந்தோம். நான் மெல்ல எட்டிப் பார்த்தேன். அங்கு கண்ட காட்சி மனதை உறையச் செய்வதாக இருந்தது. இட்லர் பெரிய சோபாவில் ரத்தக் கறையுடன் இறந்து கிடந்தார், அருகில் இருந்த சிறிய சோபாவில் இவா பிரான் தலை சாய்ந்து விழுந்து கிடந்தார்.

பிறகு அங்கிருந்த சிலர் அவர்கள் இருவரையும் தூக்கிச் சென்று பங்கருக்கு வெளியே இருந்த இடத்தில் வைத்து, பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தினர் இட்லரின் இறப்பைப் பற்றி முழுமையானதொரு அறிக்கையைக் கொடுத்த ஒரே நபர் மிஷ்தான். இட்லர் இறப்பதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னர்தான் இட்லரின் நண்பரும், இத்தாலியின் சர்வாதிகாரியுமான முஸோலினியும், அவரது மனைவியும் கொல்லப்பட்டிருந்தனர். அத்துடன் அவர்களது உடல்கள் ஒரு பெட்ரோல் நிலையத்தில் தலைகீழாகத் தொங்க விடப்பட்டு அவ மரியாதை செய்யப் பட்டிருந்தது. இதனை அறிந்திருந்த இட்லர், எதிரிகளிடம் தங்களது உடல்கள் எக்காரணம் கொண்டும், சிக்கிவிடக் கூடாது என்று முடிவு செய்தார். அதனால்தான் அவரது மற்றும் இவாவுடைய உடல்களை எரித்துவிடுமாறு ஆணையிட்டு இருந்ததாகவும் ஒரு கருத்து உண்மை போல சொல்லப்படுகிறது. இட்லர் தற்கொலை செய்துகொள்ளும் தருணம் எப்படி இருந்தது என்பதை, அந்தப் பாதாள அரண்மனைக்குள் செவிலியராகப் பணியாற்றிய பெண்மணி எர்னா பிளஜல் என்பவர், சம்பவம் நிகழ்ந்து சுமார் 60 ஆண்டுகளுக்குப் ஊடகங்களில் பேசியிருந்தார். இட்லரின் இறப்பை பார்த்தவர்கள் இவர்கள் இரண்டு பேர் மட்டுமே , இவர்கள் கூறிய செய்தியை வைத்துதான் இட்லர் இறந்துவிட்டதாக இன்று வரை உலகம் முழுவதும் நம்பப்படுகிறது.[1]

இட்லரின் மரணத்தை மறுக்கும் இங்கிலாந்து ஆய்வாளர்[தொகு]

இட்லர் தற்கொலைச் செய்யவில்லை என இங்கிலாந்து ஆய்வாளர் ஜெரால்டு வில்லியம்ஸ் கூறியுள்ளார்.

 • இட்லர் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்படும் 1945-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், அவரது பதுங்கு குழியில் இரண்டு பேர் உயிரிழந்ததும், உயிரிழந்தவர்களின் உடல்கள் எரிக்கப்பட்டதும் உண்மையாக இருக்கலாம்.
 • எரிக்கப்பட்ட இரு உடல்களும் இட்லர், இவா பிரானுடையது இல்லை.
 • இட்லர், இவா பிரானைப் போல தோற்றம் கொண்ட இரண்டு பேரை படுகொலை செய்து அந்த உடல்களைத்தான் இட்லரின் சகாக்கள் எரித்துள்ளனர்.
 • ஒரிஜனல் இட்லரும், இவா பிரானும் ஜெர்மனியிலிருந்து தப்பிவிட்டார்கள் என நம்புகிறேன்.
 • இட்லரின் உதவியாளர் மார்டின் பார்மனின் யோசனைப்படிதான் இட்லர்-இவா பிரான் தற்கொலை நாடகம் அரங்கேறியது.
 • ஒரு பொய்யை திரும்பத் திரும்பக் கூறினால் அதை உலகம் நம்பிவிடும் என்ற கோயபல்ஸ் பாணியை மெய்ப்பிக்கும் வகையில் அந்த நாடகத்தை உண்மையென அனைவரும் நம்பி வருகின்றனர்.
 • இட்லரின் பதுங்கு குழியைக் கைப்பற்றிய ரஷ்யா படையினர் அவரது உடலைக் கண்டெடுத்ததாக 1945-ஆம் ஆண்டே அறிவிக்கவில்லையே.
 • இட்லரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டதாக 1968-ஆம் ஆண்டுதான் ரஷ்யாவே அறிவித்தது.
 • இட்லர் தற்கொலை செய்து கொண்டார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட பின்னரும் கூட அமெரிக்க உளவுத் துறை உலகம் முழுவதும் ஹிட்லரை வலை வீசித் தேடிக் கொண்டிருந்ததது. ஏனெனில் இட்லர் தற்கொலை செய்யவில்லை என்பது அவர்களுக்கும் தெரியும்.[2]

இட்லர் நிலவுக்குச் சென்று விட்டார்[தொகு]

ஜெர்மனியை ஆட்சி செய்துவந்த இட்லர், அவரது ஆட்சிக் காலத்தில் அமெரிக்கா மற்றும் நாசா விண்வெளி மையம் ஆகியவைகளை விட முந்தி நின்றதாகவும், விஞ்ஞானிகள் மூலம் ரகசிய விண்வெளி ஓடம் மூலம் நிலவுக்குச் சென்று விட்டதாகவும் கருத்துகள் பரவலாகப் பேசப்பட்டு வருகிறது.

இட்லர் வெர்சன் 2.0[தொகு]

உயிரியல் தொடர்பான ஆய்வுகளில் ஈடுபாடு கொண்ட இட்லர், தனது நண்பரும் விஞ்ஞானியுமான மருத்துவர் ஜோசப் மெங்காலே உதவியுடன் தன்னைப் போலவே ஒருவரை குளோனிங் முறையில் உருவாக்கி விட்டதாகவும் ஒரு கதை இணையத்தில் உலவுகிறது.

அண்டார்டிகாவில் இட்லர்[தொகு]

புவியின் தென்துருவத்தில் நாஜிக்கள் படை மூலம் இட்லர் 1930-களில் ராணுவ தளம் ஒன்றினை அமைத்ததாக கூறப்படுகிறது. இட்லர் அங்கு சென்றிருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. கடந்த 1943ம் ஆண்டில் நாஜிக்களின் ராணுவத் தளபதியாக இருந்த அட்மிரல் கார்ல் டோனிட்ஸ் இட்லருக்காக நீர்மூழ்கிக் கப்பலை கட்டமைத்ததில் ஜெர்மனி பெருமையடைகிறது என்று கூறியிருந்தார். எனவே அந்தக் கப்பலில் இட்லர் அண்டார்டிகாவுக்கு சென்றிருப்பார் எனக் கருதப்படுகிறது. நாஜிக்களின் நீர்மூழ்கிக் கப்பலை இங்கிலாந்து ராணுவம் 1950-களில் அழித்தது.

ஸ்பெயினில் இட்லர்[தொகு]

ரான் டி ஹான்சிங் என்பவர் எழுதியுள்ள இட்லர்ஸ் எஸ்கேப் என்ற புத்தகத்தில், இட்லர் 1945ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ஸ்பெயினுக்குத் தப்பிச் சென்றதாகக் குறிப்பிட்டுள்ளார். இட்லர் மரணமடைந்ததாக கூறப்பட்ட பதுங்கு குழியில் கண்டெடுக்கப்பட்ட உடல் இட்லரின் உடல் இல்லை என்ற தகவலை அடிப்படையாகக் கொண்டு இந்த வாதத்தினை அந்த எழுத்தாளர் முன்வைத்தார். அதேபோல இட்லரின் மனைவியான இவா பிரன் உடலும் கடைசி வரை அடையாளம் காணப்படவில்லை.

மேற்கோள்கள்[தொகு]

 1. http://m.dinamalar.com/weeklydetail.php?id=20920
 2. "இட்லரின் மரணத்தை மறுக்கும் இங்கிலாந்து ஆய்வாளர்".