உள்ளடக்கத்துக்குச் செல்

இவா பிரான்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இவா பிரான்
இவா பிரான் (இடது) உடன் அடால்ப் இட்லர் (வலது)
பிறப்புஇவ அன்னா பௌலா பிரான்
(1912-02-06)6 பெப்ரவரி 1912
முனிக், ஜெர்மனி
இறப்பு30 ஏப்ரல் 1945(1945-04-30) (அகவை 33)
பெர்லின், ஜெர்மனி
இறப்பிற்கான
காரணம்
தற்கொலை
மற்ற பெயர்கள்இவா இட்லர்
பணிபிரௌ (பதவியில் இருந்த காலம் ஓரு நாள்) (ஃபியூரரின் துணைவியார்)
வாழ்க்கைத்
துணை
அடால்ப் இட்லர் (1945)

இவா அன்னா பௌலா பிரான் இறக்கும்போது இவா அன்னா பௌலா இட்லர் ( பெப்ரவரி 6, 1912-30 ஏப்ரல் 1945) அடால்ப் இட்லரின் மனைவியான இவர் இட்லரை தன்னுடைய 17 வது வயதில் இட்லரின் உதவியாளராகவும், அவர் புகைப்பட ஆர்வத்துக்கு மாடலாகவும் ஊழியம் செய்வதற்கு இட்லரை முனிக்கில் சந்தித்தார். அது முதல் அவரிடம் நெருக்கமானார்.

தற்கொலை -முயற்சி

இட்லரின் அந்தரங்கத்தில் அதிகம் பங்கு கொண்டவர். இவருடைய அரசியல் பங்கு அவ்வளவாக அறியப்படவில்லை, இவருடைய மேம்போக்கான செயல்களாகிய புகைப்பது மற்றும் தேவைக்கு அதிகமான அலங்காரம், ஆடையற்ற நிலையில் சூரியக் குளியல் எடுப்பது போன்ற காரணங்களால் சில நேரங்களில் இட்லரின் கண்டிப்புக்கு ஆளானார். ஆரம்ப கால நட்பின் போது இரு முறை தற்கொலை -முயற்சி மேற்கொண்டார்.[1]

ஜெர்மனியின் பிரௌ 30 ஏப்ரல், 1945 ல் பெர்லின் செஞ்சேனையிடம் வீழ்ந்தபோது இட்லருடன் சேர்ந்து சயனைட் நஞ்சை உட்கொண்டு தற்கொலை செய்துகொண்டார். அதற்கு ஒருநாள் முன்னதாக இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள். இவர் இறக்கும் பொழுது இவர் கறுவுற்றிருத்தாக வதந்திகளும் உண்டு. அது உண்மையில்லை, திருமணத்திற்கு பின் இவரை பிரௌ (பியூர்ரின் மனைவி) அழைக்க ஊழியர்கள் பணிக்கப்பட்டனர். அந்த ஒரு நாள் மட்டும் அழைக்க முடிந்தது. இட்லர் மட்டும் அடிக்கடி பியூரலின் பிரான் என்று கடைசி நிமிடம் வரை அழைத்து மகிழ்ந்தார்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2017-05-01. பார்க்கப்பட்ட நாள் 2018-01-31.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இவா_பிரான்&oldid=3544604" இலிருந்து மீள்விக்கப்பட்டது