இசுலாம் கரிமோவ்
இசுலாம் கரீமவ் Islom Karimov Ислам Каримов | |
---|---|
![]() | |
உஸ்பெகிஸ்தான் முதல் அதிபர் | |
பதவியில் 1 செப்டம்பர் 1991 – 2 செப்டம்பர் 2016 | |
பிரதமர் |
|
முன்னவர் | பதவி தோற்றுவிக்கப்பட்டது |
பின்வந்தவர் | நிக்மதில்லா யுல்தஷேவ் |
உசுபெக் சோவியத் சோசலிசக் குடியரசின் தலைவர் | |
பதவியில் 24 மார்ச் 1990 – 1 செப்டம்பர் 1991 | |
முன்னவர் | பதவி தோற்றுவிக்கப்பட்டது |
பின்வந்தவர் | பதவி நீக்கப்பட்டது |
உஸ்பெக் சமவுடைமைக் கட்சியின் முதன்மைச் செயலர் | |
பதவியில் 23 சூன் 1989 – 1 செப்டம்பர் 1991 | |
முன்னவர் | ரபீக் நிஷோனவ் |
பின்வந்தவர் | பதவி நீக்கப்பட்டது |
தனிநபர் தகவல் | |
பிறப்பு | இஸ்லாம் அபதுகனியெவிச் கரீமவ் சனவரி 30, 1938 சமர்கந்து, உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசு சோவியத் ஒன்றியம் (தற்போது சமர்கந்து, உசுபெக்கிசுத்தான்) |
இறப்பு | 2 செப்டம்பர் 2016 தாஷ்கந்து, உசுபெக்கிசுத்தான் | (அகவை 78)
இறப்பிற்கான காரணம் |
பக்கவாதம்[1] |
அடக்க இடம் | சமர்கந்து, உசுபெக்கிசுத்தான் |
அரசியல் கட்சி |
|
வாழ்க்கை துணைவர்(கள்) | நதாலியா பெத்ரோவ்னா குச்மீ (1964–196?, மணமுறிவு) தத்தியானா கரீமவா (1967–2016, கணவர் இறப்பு) |
பிள்ளைகள் |
|
இசுலாம் அப்துகனியெவிச் கரீமவ் (Islam Abduganiyevich Karimov, உசுபேகியம்: Islom Abdugʻaniyevich Karimov, உருசியம்: Ислам Абдуганиевич Каримов; 30 சனவரி 1938 – 2 செப்டம்பர் 2016) உஸ்பெகிஸ்தான் நாட்டின் முதல் அதிபா். 1991 முதல் 2016 இல் தான் இறக்கும் வரை உஸ்பெகிஸ்தான் நாட்டின் அதிபராகப் பணிபுரிந்தார்.
இவா் இளம் வயதில் ஆதரவற்றோா் இல்லத்தில் வளா்ந்து பொருளாதாரம் மற்றும் இயந்திரப் பொறியியலைப் பயின்றாா். 1964 முதல் 1991 சோவியத் ஒன்றியப் பொதுவுடைமைக் கட்சியிலிருந்த கரீமவ் 1989-ம் ஆண்டு முதல் 1991 வரை உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சியின் இறுதியான முதன்மைச் செயலராகப் பொறுப்பிலிருந்தார். உஸ்பெக் சோவியத் சமவுடைமைக் குடியரசின் அதிபராக 24 மார்ச் 1990 முதல் 1 செப்டம்பர் 1991 வரை இருந்தார். உஸ்பெக் பொதுவுடைமைக் கட்சியிலிருந்து தோற்றுவிக்கப்பட்ட உஸ்பெக் மக்கள் ஜனநாயகக் கட்சியின் தலைவராக 2007 ஆம் ஆண்டுவரை பொறுப்பிலிருந்தார். பின்னர் உஸ்பெக் முற்போக்கு ஜனநாயகக் கட்சியாக உருமாற்றமடைந்த அக்கட்சியின் தலைவராக 2016 ஆம் ஆண்டுவரையிருந்தார்.[2]
பக்கவாதத்தின் விளைவால்[3][4] 2 செப்டம்பர் 2016 இல் இறந்தார்.[5]
சான்றுகள்[தொகு]
- ↑ "Obituary: Uzbekistan President Islam Karimov". 2 அக்டோபர் 2016. http://www.bbc.co.uk/news/world-asia-37218158.
- ↑ Hierman, Brent (2016). Russia and Eurasia 2016-2017. The World Today Series, 47th edition. Lanham, MD: Rowman & Littlefield. ISBN 978-1-4758-2898-6. p. 314.
- ↑ "President Islam Karimov of Uzbekistan Suffers Brain Hemorrhage, Daughter Says". The New York Times. 29 August 2016. https://www.nytimes.com/2016/08/30/world/asia/uzbekistan-president-islam-karimov.html. பார்த்த நாள்: 29 August 2016.
- ↑ "Uzbek leader's illness raises fears of power vacuum amid mounting threat". NBC News. 29 August 2016. http://www.nbcnews.com/news/world/uzbek-president-islam-karimov-hospitalized-raising-fears-power-vacuum-n639331. பார்த்த நாள்: 29 August 2016.
- ↑ "Islam Karimov: Uzbekistan president's death confirmed". BBC. 2 September 2016. 2 September 2016 அன்று பார்க்கப்பட்டது.