இசுராபனி நந்தா
Appearance
தனித் தகவல்கள் | |||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப் பெயர் | சிராபனி நந்தா | ||||||||||||||||||||
தேசியம் | இந்தியா | ||||||||||||||||||||
பிறந்த நாள் | சூலை 5, 1991 | ||||||||||||||||||||
பிறந்த இடம் | புல்பனி, ஒடிசா, இந்தியா | ||||||||||||||||||||
விளையாட்டு | |||||||||||||||||||||
நாடு | India | ||||||||||||||||||||
விளையாட்டு | விரைவோட்டக்காரர் | ||||||||||||||||||||
நிகழ்வு(கள்) | 100 மீ ஓட்டம், 200 மீ ஓட்டம், 4x100 மீ தொடரோட்டம் | ||||||||||||||||||||
|
சிராபனி நந்தா (Srabani Nanda, Shrabani Nanda) ஒடிசாவைச் சேர்ந்த இந்தியப் பெண் விரைவோட்ட மெய்வல்லுநர் ஆவார். இவர் 4x100 மீ தொடரோட்டம், 100 மீ ஓட்டம் மற்றும் 200 மீ ஓட்டம் ஆகிய விரைவோட்டப் போட்டிகளில் சிறப்புக் கவனம் செலுத்துகிறார். இவர் ஒடிசாவின் கந்தமாள் மாவட்டத்தைச் சேர்ந்தவர்.
சாதனைகள்
[தொகு]சிராபனி நந்தா தேசிய அளவிலும் பன்னாட்டளவிலும் பல பதக்கங்களை வென்றுள்ளார்.
பன்னாட்டுப் போட்டிகள்
[தொகு]- இரியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் தகுதியை முடிவுசெய்ய ஜி கோசனாவ் நினைவுப் போட்டிகள் அல்மாத்தியில் நடத்தப்பட்டன; இதில் பெண்கள் 200 மீ விரைவோட்டப் பகுப்பில் 23.07 பதிவுசெய்து தனது பங்கேற்பை உறுதி செய்தார். தகுதிக்கான நேரம் 23.20 விநாடிகளாக தீர்மானிக்கப்பட்டிருந்தது.
- அசாமில் நடந்த 2016 தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 200 மீ விரைவோட்டத்தில் தங்கப் பதக்கமும் 100 மீ விரைவோட்டத்தில் வெள்ளிப் பதக்கமும் வென்றார்.
- அக்டோபர் 12, 2010இல் தில்லி சவகர்லால் நேரு விளையாட்டரங்கத்தில் நடந்த பொதுநலவாய விளையாட்டுக்களில் பெண்கள் 4x100 மீ தொடரோட்டத்தில் 45.25 விநாடிகளில் ஓடி வெண்கலப் பதக்கம் வெல்லக் காரணமாகவிருந்தார்.
- புனேயில் நடந்த 2008 பொதுநலவாய இளைஞர் விளையாட்டுக்களில் பெண்கள் 4x100 மீ தொடரோட்டத்தில் தங்கப் பதக்கம் வென்றனர்.
- 2007இல் கொழும்பில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 100மீ மற்றும் 200 மீ விரைவோட்டத்தில் வெண்கலப் பதக்கம் வென்றார்.
தேசியப் போட்டிகள்
[தொகு]- 2010ஆம் ஆண்டு மே 1 முதல் மே 4 வரை சார்க்கண்டின் இராஞ்சியில் நடந்த 15ஆவது தேசிய தடகள மூத்தோர் கூட்டமைப்புக் கோப்பை போட்டிகளில் 100 மீ விரைவோட்டத்திலும் (11.98 வினாடிகள்) 4x100 மீ தொடரோட்டத்திலும் வெள்ளிப் பதக்கங்கள் வென்றார்.
- 2009ஆம் ஆண்டு நவம்பர் 20இல் வாரங்கலில் நடந்த 25வது தேசிய இளையோர் தடகளப் போட்டிகளில் இருபது அகவைக்குக் கீழான பெண்களுக்கான போட்டிகளில் 100 மீ (12.11 வி), 200 மீ (25.04 வி) விரைவோட்டங்களில் தங்கப் பதக்கங்கள் வென்றார்.[1]