இசுபிரிட் தளவுலவி
செவ்வாய்க் கோளில் தளவுலவி | |
இயக்குபவர் | நாசா |
---|---|
திட்ட வகை | தளவுலவி (Rover) |
சுற்றுப்பாதைக்குப் புகுத்தப்பட்ட நாள் | ஜனவரி 4, 2004இல் தரையிறங்கியது. |
தே.வி.அ.த.மை எண் | 2003-027A |
இணைய தளம் | JPL's Mars Exploration Rover home page |
இசுபிரிட் (MER-A, Mars Exploration Rover - A), என்பது நாசாவினால் செவ்வாய்க் கோளுக்கு அனுப்பப்பட்ட இரண்டு தளவுலவிகளில் (rover) முதலாவதாகும். இது ஜனவரி 4, 2004 இல் செவ்வாயில் 90 மைல் அகண்ட கூஸிவ் குழியில் ('Gusev Crater') வெற்றிகரமாகத் தரையிறங்கியது. இது தரையிறங்கி மூன்று வாரங்களில் இத்திட்டத்தின் மற்றுமொரு தளவுலவியான ஆப்பர்சூனிட்டி தளவுலவி (Oppportunity Rover) இது தரையிறங்கிய இடத்துக்கு மறுபுறத்தில் மெரிடியானி பீடத்தில் (Meridiani Planum) தரையிறங்கியது.
நாசா திட்டவியலாளர்கள் எதிர்பார்த்தமையை விட 15 மடங்கு அதிக நேரம் ஸ்பிரிட் தளவுலவி செயற்பட்டது. இதனால் அது செவ்வாய்க் கோளின் பாறைகளைப் பற்றிய நிலவியல் (geology), மற்றும் கோளின் மேற்பரப்பு பற்றியும் விரிவாக ஆய்வு நடத்த முடிந்தது. இத்திட்டம் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகிறது (2008).
நீருக்கான ஆதாரங்கள்
[தொகு]இரண்டு ஆண்டுகளில் இசுபிரிட் தளவுலவி சுமார் 70,000 படங்களை அனுப்பியுள்ளது. அதன் படி செவ்வாய்த் தளத்தில் ஹம்ப்ரீ என்ற பாறையில் நீர் இருந்ததற்குச் சான்றுகள் காட்டியிருப்பதாக மார்ச் 5, 2004 இல் நாசா அறிவித்தது[1].
பொனெவில் குழி
[தொகு]மார்ச் 11, 2004 இல், 400-யார்டு (370 m) பயணத்தின் பின்னர் ஸ்பிரிட் தளவுலவி பொனெவில் குழியை (Bonneville crater) அடைந்தது. இக்குழி 150 யார்டுகள் (140 m) அகலமும் 30 யார்டுகள் (27 m) ஆழமும் கொண்டது. ஆனால் இக்குழி ஒரு முக்கியத்துவமும் இல்லாத காரணத்தால் ஸ்பிரிட் இக்குழியினுள் இறங்கவில்லை. மாறாக அது தென்மேற்குப் பகுதியாக நகர்ந்து கொலம்பியா குன்றுகளை நோக்கிச் செலுத்தப்பட்டது.
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- செவ்வாய்க் கோளின் தளத்தை உளவும் விண்வெளி ஊர்திகள் (சி.ஜெயபாரதன்)
- JPL's Mars Exploration Rover Mission home page
- (obsolete JPL Mars Exploration Rover home page) பரணிடப்பட்டது 2008-07-13 at the வந்தவழி இயந்திரம்
- Spirit Mission Profile பரணிடப்பட்டது 2007-08-01 at the வந்தவழி இயந்திரம் by NASA's Solar System Exploration
- Planetary Photojournal, NASA JPL's Planetary Photojournal for Spirit
- SpaceFlightNow Status Page
- Mission Status updates from NASA JPL பரணிடப்பட்டது 2004-12-04 at the வந்தவழி இயந்திரம்
- Marsbase.net, a site that tracks time on Mars.
- NASA TV Special Events Schedule for MER News Briefings at JPL
- MAESTRO - public version of rover simulation software பரணிடப்பட்டது 2004-01-05 at the வந்தவழி இயந்திரம்
- Cornell's rover site: Athena
- Finding Spirit: high resolution images of landing site (Mars Global Surveyor - Mars Orbiter Camera)
- நியூ சயன்டிஸ்ட்