இசபெல்லா, பிலிப்பீன்சு
இசபெல்லா | |
---|---|
மாகாணம் | |
நாடு | பிலிப்பீன்சு |
பிராந்தியம் | ககயன் பள்ளத்தாக்கு |
நேர வலயம் | ஒசநே+8 (பிசீநே) |
அதிகாரப்பூர்வ இணையதளம் |
இசபெல்லா (Isabela) என்பது பிலிப்பீன்சின் லூசோனின், ககயன் பள்ளத்தாக்குப் பிராந்தியத்தில் அமைந்துள்ள ஐந்து மாகாணங்களில் ஒன்றாகும்.[1] இதன் தலைநகரம் இலாகன் ஆகும். இதுவே பிலிப்பீன்சின் இரண்டாவது மிகப்பெரிய மாகாணம் ஆகும். இம்மாகாணத்தில் 1,018 கிராமங்களும், 34 மாநகராட்சிகளும் உள்ளன. இதன் தற்போதைய மாகாண சபை ஆளுநர் மூன்றாம்ஃ பபுஸ்டினோ ஹி. டி (Faustino G. Dy III) ஆவார். 2015 ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புக்கு அமைவாக இசபெல்லா மாகாணத்தின் சனத்தொகை 1,593,566 ஆகும்.[2] இதன் மொத்த நிலப்பரப்பளவு 12,414.93 சதுர கிலோமீற்றர்கள் ஆகும். மேலும் பிலிப்பீன்சில் காணப்படும் 81 மாகாணங்களில், மொத்த நிலப்பரப்பளவின் அடிப்படையில் இம்மாகாணம் 2ஆம் மாகாணமாகவும் சனத்தொகையின் அடிப்படையில் 15ஆம் மாகாணமாகவும் காணப்படுகின்றது. அத்துடன் இம்மாகாணத்தில் இலோகானோ, தகலாகு, ஆங்கிலம் உள்ளடங்கலாக ஐந்து பிரதான மொழிகள் பேசப்படுகின்றன.
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of Provinces". PSGC Interactive. Makati City, Philippines: National Statistical Coordination Board. Archived from the original on 21 ஜனவரி 2013. பார்க்கப்பட்ட நாள் 30 December 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help); Unknown parameter|=
ignored (help) - ↑ "Population of the provine". Archived from the original on 2011-07-09. பார்க்கப்பட்ட நாள் 2017-01-10.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)