இங்மார் பேர்ஜ்மன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
இங்மார் பேர்ஜ்மன்
Ingmar Bergman Smultronstallet.jpg
"காட்டு ஸ்ட்ராபெரிகள்" (Wild Strawberries) என்னும் படப்பிடிப்பின்போது இங்மார் பேர்ஜ்மன் (1957)
இயற் பெயர் ஏண்ஸ்ட் இங்மார் பேர்ஜ்மன்
பிறப்பு சூலை 14, 1918(1918-07-14)
உப்சலா, சுவீடன்
இறப்பு 30 சூலை 2007(2007-07-30) (அகவை 89)
Fårö, சுவீடன்
தொழில் film director, producer & writer
நடிப்புக் காலம் 1944 - 2005
துணைவர் எல்சி ஃபிஷர் (1943-1945)
Ellen Lundström (1945-1950)
Gun Grut (1951-1959)
Käbi Laretei (1959-1969)
Ingrid von Rosen (1971-1995)
பிள்ளைகள் Lena Bergman (b.1943)
Eva Bergman (b.1945)
Jan Bergman (b.1946)
Mats Bergman (b.1948)
Anna Bergman (b.1948)
Ingmar Bergman Jr. (b.1951)
Maria von Rosen (b.1959)
Daniel Bergman (b.1962)
Linn Ullmann (b.1966)

ஏண்ஸ்ட் இங்மார் பேர்ஜ்மன் (Ernst Ingmar Bergman - 14 ஜூலை 1918 – 30 ஜூலை 2007) ஒன்பது தடவைகள் அக்கடமி விருதுக்கு நியமிக்கப்பட்ட சுவீடிய, திரைப்பட, மேடை நாடக, ஒப்பேரா இயக்குனர் ஆவார். மனித நிலைமைகள் பற்றிய தேடுதல்களில், ஊக்கமின்மை, மனக்கசப்பு, நகைச்சுவை, நம்பிக்கை போன்ற பல விடயங்களை இவர் தனது படங்களில் வெளிப்படுத்தினார். இவர் தற்காலத் திரைப்படத் துறையில் மிகப் பெரியவரும் மிகுந்த செல்வாக்கு உள்ளவருமான இயக்குனராகக் கருதப்படுகிறார்.

62 திரைப்படங்களை இயக்கியுள்ள இவர், இவற்றுட் பலவற்றைத் தானே எழுதியும் இருக்கிறார். அத்துடன் 170க்கு மேற்பட்ட நாடகங்களையும் இயக்கினார். லிவ் உல்மன், பிபி அண்டர்சன், மக்ஸ் வொன் சிடோ போன்றவர்கள் இவரது அனைத்துலகப் புகழ் பெற்ற நடிகர்களுள் சிலராகும். இவரது படங்களில் பல இவரது சொந்த நாடான சுவீடனின் நிலத்தோற்றப் பின்னணியில் எடுக்கப்பட்டவை. இவருடைய படங்களின் கருக்கள் பெரும்பாலும், ஊக்கக்குறைவு, இறப்பு, நோய், துரோகம், பைத்தியம் போன்றவற்றுடன் தொடர்பானவை.

பேர்க்மன் 60 ஆண்டுகளுக்கும் மேலாகச் செயல்பட்டு வந்தாலும், 1976 ஆம் ஆண்டில் வருமானவரி ஏய்ப்பு தொடர்பிலான குற்றவியல் விசாரணைகளினால் இவரது தொழில் பாதிப்புக்குள்ளானது. அக்காலத்தில், நிலுவையில் இருந்த படத்தயாரிப்பு வேலைகளைக் கைவிட்டதுடன், தனது கலைக் கூடத்தையும் மூடிவிட்டு எட்டு ஆண்டுகள் ஜேர்மனியில் மறைந்து வாழ்ந்தார்.

வரலாறு[தொகு]

இங்மார் போர்ஜ்மன், சுவீடனில் உள்ள உப்சலாவில் பிறந்தார். தாயார் கரீன், தந்தையார் எரிக் பெர்க்மன். எரிக், லூதரன் மத குரு பின்னாளில் சுவீடன் அரசரின் மதகுருவாக இருந்தார். இங்மார், சமயத் தொடர்பான வடிவங்களுக்கும், கலந்துரையாடல்களுக்கும் நடுவில் வளர்ந்தார். தந்தையார் எரிக், ஒரு பழமைவாதியாகவும், தீவிரமான வலதுசாரி அரசியல் கருத்துக்களைக் கொண்டவராகவும் இருந்ததுடன், ஒரு கடும்போக்குக் கொண்ட தந்தையாகவும் இருந்தார். படுக்கையிலேயே சிறுநீர் கழித்துவிடுதல் போன்றவற்றுக்காகத் தான் இருட்டறைகளில் பூட்டி வைக்கப்பட்டதாக இங்மார் கூறியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்மார்_பேர்ஜ்மன்&oldid=2212111" இருந்து மீள்விக்கப்பட்டது