இங்கிலாந்தின் வரலாறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இங்கிலாந்தின் வரலாறு
இங்கிலாந்தின் அரச சின்னம்
(1198-1340)
வரலாறு

முந்தைய வரலாறு
கெல்ட்டியர்
உரோமர்
ஆங்கிலோ செக்சோன்
வைக்கிங்
நோர்மன்
டியூடர்
இசுட்டுவட்
கிரிகோரியன்
விக்டோரியா
தற்காலம்
ஐக்கிய இராச்சியம்

காலக்கோடு

பிரித்தானியக் காலக்கோடு

தொகு

இங்கிலாந்தின் வரலாறு (History of England) என்பது ஐரோப்பிய கண்டத்தில் பல சிறப்புகள் பெற்றதும், இன்று உலகெங்கும் பரவியிருக்கும் அங்கில மொழி தோற்றம் பெற்றதுமான இங்கிலாந்தின் வரலாறாகும். இங்கிலாந்து, வேல்ஸ், ஸ்கொட்லாந்து மற்றும் வட அயர்லாந்து ஆகிய நான்கு நாடுகளும் ஒருங்கிணைந்து ஐக்கிய இராச்சியம் என அழைக்கப்படும் அரசியல் பரப்புக்குள், பாரிய பிரித்தானியா அல்லது பெரிய பிரித்தானியா என அழைக்கப்படும் தீவின் வரலாற்றையே "இங்கிலாந்தின் வரலாறு" எனப்படுகிறது. இங்கிலாந்து என்பது பாரிய பிரித்தானியாவின் ஒரு ஆட்சி பகுதி அல்லது நாடு மட்டுமே என்றப்போதும், பெரிய பிரித்தானியா தீவு மற்றும் அதன் அயல் குட்டித்தீவுகள் போன்றவற்றையும் உள்ளடக்கிய நிலப்பரப்பின் ஒரு நீண்ட வரலாற்றை "இங்கிலாந்தின் வரலாறு" எனப்படுகிறது. இந்த நிலப்பரப்பின் வரலாறு பல ஆக்கிரமிப்புக்களையும், பல்வேறு மொழிக்கலப்புகளையும், புரட்சியையும், உலகையே தன்வசப் படுத்திய வீரமிகுந்த வரலாற்றையும் கொண்டதாகும். இந்த நிலம் பல நூற்றுக்கணக்கான போர்களை சந்தித்துள்ளது. தொடர்ந்து இடம்பெற்ற போர்களால் இரத்தமும் வியர்வையும் கலந்த ஒரு நீண்ட வரலாற்றை இங்கிலாந்து கொண்டுள்ளது.

முந்தைய வரலாறு[தொகு]

பிரித்தானியாவில் கி.மு 2500 ஆண்டுகளுக்கு முற்பட்ட கற்காலத் தடையங்கள்

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, இன்று பாரிய பிரித்தானியா என அறியப்படும் தீவின் நிலத்தகடு, ஐரோப்பிய நிலத்தகட்டுடன் இணைந்த ஒரு நிலப்பரப்பாகவே இருந்தது. கிட்டத்தட்ட கி.மு 15,000 ஆண்டுகளுக்கு முன்பு முற்றிலும் பனிப்பாறைகளாக இருந்த இந்நிலப்பரப்பு, மெல்ல மெல்ல உருக ஆரம்பித்தது. கிட்டத்தட்ட கி.மு 8000 - கி.மு 6500 வரையான காலப்பகுதிகளில் ஐரோப்பிய நிலத்துடன் இணைந்திருந்தப் பனி பிரதேசத்தின் பனியுருகி, கடல் மட்டம் உயர்ந்ததால் தீவாக தோன்றிய நிலப்பகுதிகளில் ஒன்றே, தற்போது "பிரித்தானியா" என்றழைக்கப்படும் தீவாகும். அதனைத் தொடர்ந்து கி.மு 3000 புதிய கற்காலத்தின் தோற்றம் (New Stone Age begins) ஐரோப்பியப் பகுதிகளில் இருந்து கெல்டிக் மக்கள்; குழுமங்களாக பிரித்தானியாவில் வந்து குடியேறத் தொடங்கினர். அவர்கள் விவசாயிகளாகவும் போர் குணமிக்கவர்களாகவும் விளங்கினர்.

கி.மு 2100 வெண்கலக் காலத்தின் தோற்றம்.

கி.மு 2050 மக்கள் வெண்கலத்திலான உலோக வேலை, செப்பு, தகரம் போன்றவற்றைப் பயன்படுத்திய மனித நாகரிக வளர்ச்சியின் ஒரு காலகட்டமாகும். பிரித்தானிய பூர்வக்குடிகளான கெல்டிக் மக்களும் வெண்கலத்திலானக் கருவிகள், ஆயுதங்கள் செய்து பழக்கப்பட தொடங்கினர்.

கி.மு 1200 பிரித்தானியாவில் சிறிய கிராமங்கள் தோன்றிய காலகட்டமாகும். வணிகத் தொடர்புகள் ஏற்படத் தொடங்கின.

கி.மு 750 இரும்புக் காலத்தின் தோற்றம் (Iron Age); வெண்கலத்திற்கு பதிலாக மக்கள் இரும்பு பொருற்களை பயன்படுத்தத் தொடங்கிய காலகட்டமாகும். அக்கால கட்டத்தில் பிரித்தானியாவில் கிட்டத்தட்ட 150,000 மக்கள் தொகையினர் வாழ்ந்ததாக நம்பப்படுகின்றது.

அதன் பின்னர் கி.மு 500 மத்திய ஐரோப்பியப் பகுதிகளில் இருந்தும் மேலும் சில இனக் குழுமங்கள் பிரித்தானியாவில் வந்து குடியேறினர். அவர்களையும் கெல்டிக் இனக் குழுமத்தின் ஒரு அங்கத்தினராகவே பார்க்கப்படுகிறது. அவர்களும் விவசாயிகளாகவும், போர் குணமிக்கவர்களாகவும் இருந்தனர்.

கெல்டிக் மக்கள்[தொகு]

இன்று பாரிய பிரித்தானியா என அழைக்கப்படும் தீவு தோன்றியதன் பின்னர், ஐரோப்பியப் பகுதிகளில் இருந்த மக்கள் இந்த நிலப்பரப்பிற்கு குடிப்பெயரத் தொடங்கினர். இந்த மக்களையே "கெல்டிக் மக்கள்" என்று அழைக்கப்படுகின்றது. கெல்டிக் எனும் சொல் உரோமானியர்களால் பயன்படுத்தப்பட்ட ஒரு சொல்லாகும். "கெல்டிக்" என்றால் ஆங்கிலத்தில் "பாபேரியன்" என்பதாகும். அதன் தமிழ் பொருள் "காட்டுமிராண்டி" என்பதாகும். இதனடிப்படையில் ஐரோப்பிய நிலப்பரப்புகளில் வசித்தப் பூர்வக்குடிகள் எல்லோரையும் "கெல்டிக்" என்றும் அவர்கள் பேசிய மொழியை "கெல்டிக் மொழி" என்றுமே உரோமானியர்கள் வரையரை செய்தனர். இருப்பினும் ஒவ்வொரு கெல்டிக் இனக்குழுமங்களுக்கும் வெவ்வேறு பெயரையும் முன்னொட்டாக இட்டே "கெல்டிக்" என்று அழைத்தனர். இன்றையப் பிரித்தானியாவில் வாழ்ந்த பூர்வக்குடிகளை பிரிட்டன் அல்லது "பிரிட்டன் கெல்டிக்" என்றே அழைத்தனர். இவர்களே பிரித்தானியாவின் பூர்வக் குடிகளாவர். இவர்கள் பேசிய மொழியையும் "கெல்டிக் மொழி" என்றே அழைக்கப்படுகின்றது.

வாழ்வியல்[தொகு]

இந்த கெல்டில் பூர்வக்குடிகளின் வாழ்வியல் வேட்டையாடுதல், கால்நடைகள் வளர்த்தல், விவசாயம் செய்தல் போன்றவைகளாகும். [1] தங்களது விவசாய நிலங்களில் சிறியச் சிறிய கிராமங்களாக அமைத்து குழுமங்களாக வாழ்ந்தனர். வேட்டையாடுதல் அவர்களது முதன்மைப் பழக்கங்களின் ஒன்றாக இருந்தது. அதேவேளை ன் போர் விரும்பிகளாகவும், இரும்புகளினால் ஆயுதங்கள், கருவிகள் போன்றவற்றை செய்யக் கூடியவர்களாவும் விளங்கினர். பிரித்தானியாவில் குடியேறிய இனக்குழுமத்தினர் அனைவரையும் கெல்டிக் என ஒரே பெயர்கொண்டு அழைத்தாலும், அவர்களிடையே பல வேறுபட்ட இனக்குழுமங்கள் இருந்தன. இவர்களிடையே தொடர்ச்சியான சண்டைகளும் நடந்தவண்ணமே இருந்தது.

இறைநம்பிக்கை[தொகு]

அதேவேளை இறைநம்பிக்கை நம்பிக்கை உள்ளவர்களாகவும், கடவுள் பக்தி மிக்கவர்களாகவும் இருந்தனர். வானம், மின்னல், சூரியன் என ஒவ்வொன்றையும் ஒவ்வொரு கடவுளாக வழிபட்டனர். அதாவது பலகடவுள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகும். கிட்டத்தட்ட 400 மேற்பட்ட தெய்வங்கள், தேவதைகளை அவர்களது வழிபாட்டில் இருந்ததாக நம்பப்படுகின்றது.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=இங்கிலாந்தின்_வரலாறு&oldid=3670784" இலிருந்து மீள்விக்கப்பட்டது