இக்கால் ஏஞ்சலீ

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இக்கால் ஏஞ்சலீ
Ikal Angelei
இக்கால் ஏஞ்சலீ, 2017
பிறப்புகிட்டாலி , கென்யா
தேசியம்கென்ய நபர்
பணிஅரசியல்வாதி
விருதுகள்கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது (2012)

இக்கால் ஏஞ்சலீ (Ikal Angelei) கென்ய நாட்டைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியும் சுற்றுச்சூழல் ஆர்வலருமாவார். கென்யா நாட்டிலுள்ள கிட்டாலி நகரத்தில் இவர் பிறந்தார்.

எத்தியோப்பியாவில் உள்ள கில்கெல் கிபே III அணையின் சுற்றுச்சூழல் தாக்கங்களுக்கு எதிராகவும் , கென்ய பழங்குடி சமூகங்கள் சார்பாகப் பேசியதற்காகவும் 2012 ஆம் ஆண்டு இவருக்கு கோல்டுமேன் சுற்றுச்சூழல் விருது வழங்கப்பட்டது.[1] துர்கானா ஏரியைச் சுற்றியுள்ள பிராந்தியத்தில் சுற்றுச்சூழல் நீதிக்காக பிரச்சாரம் செய்யும் துர்கானா எரி நண்பர்கள் அமைப்பை இக்கால் ஏஞ்சலீ நிறுவினார்.[2]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Ikal Angelei". Goldman Environmental Prize. பார்க்கப்பட்ட நாள் 29 May 2012.
  2. "Friends of Lake Turkana". friendsoflaketurkana.org. பார்க்கப்பட்ட நாள் 4 March 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=இக்கால்_ஏஞ்சலீ&oldid=3147058" இலிருந்து மீள்விக்கப்பட்டது