ஆஸ் யூ லைக் இட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
1623ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் ஃபோலியோவின் முதல் பக்கத்தின் தொலைநகல்.

ஆஸ் யூ லைக் இட் (As You Like It) என்பது, வில்லியம் ஷேக்‌ஸ்பியர் எழுதிய ஒரு கிராமப்புற வாழ்க்கையை விவரிக்கும், நகைச்சுவை இசை நாடகம் ஆகும். இது 1599 அல்லது 1600 ஆம் ஆண்டின் முற்பகுதியில் எழுதப்பட்டிருக்கக்கூடும் என்று நம்பப்படுகிறது. முதன்முதலாக 1623 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் ஃபோலியோ என்ற தொகுதியில் வெளியிடப்பட்டது. இந்த பணியானது, தாமஸ் லாட்ஜ் என்பவர் எழுதிய ரோசாலின்ட் என்பவரின் காதல் உரைநடையை அடிப்படையாகக் கொண்டது. இந்த நாடகம் முதன்முதலாக எப்போது மேடையேற்றப்பட்டது என்று சரியாக தெரியவில்லை, ஆனாலும் 1603ஆம் ஆண்டில் வில்ட்டன் ஹவுஸ் என்ற இடத்தில் முதன் முதலில் அரங்கேற்றப்பட்டதாகக் கருதப்படுகிறது. ஆஸ் யூ லைக் இட் நாடகம், அதன் கதாநாயகி ரோசாலின்ட் தன்னுடைய மாமாவின் நீதிமன்றத்தின் தண்டனையிலிருந்து தப்பி ஓடுவதைத் தொடர்கிறது, பின்னர் அவள் அர்டன் காடுகளில் தஞ்சமடைவதையும் அங்கு காதலில் விழுவதையும் அடிப்படையாக கொண்டது. இந்த நாடகத்திற்கான வரவேற்பு வரலாற்றிலேயே பலவாறாக வேறுபடுகிறது, சிலர் வழக்கமான ஷேக்ஸ்பியர் எழுத்தில் இருக்கும் தரம் இதில் குறைவாக இருப்பதாகவும், வேறு சிலர் இந்த நாடகம் மிகவும் சிறப்பானது என்றும் குறிப்பிடுகின்றனர்.

ஷேக்ஸ்பியரின் மிகவும் பிரபலமான, அதிகமாக பயன்படுத்தப்படும் தொடர்களான "உலகமே ஒரு நாடக மேடை" என்பது இந்த நாடகத்திலிருந்தே வருகிறது. மேலும் இதுவே, அளவுக்கதிமான நல்லவை (too much of a good thing) என்ற தொடரின் மூலப்புள்ளியும் ஆகும். இந்த நாடகம் பார்வையாளர்களுக்கு விருப்பமானதாகவே இருந்து வருகிறது, மேலும் ரேடியோ, திரைப்படம் மற்றும் இசை அரங்குகளுக்கு ஏற்ப பயன்படுத்தப்பட்டு வருகிறது.

கதாபாத்திரங்கள்[தொகு]

பிரடெரிக் மன்னனின் சபை:

  • மன்னன் ஃப்ரெட்ரிக், இவர் மூத்த மன்னரின் தம்பி, முன்னாள் மன்னரிடமிருந்து தந்திரமாக ஆட்சியைப் பெற்றவர்.
  • ரோசலின்ட், முன்னாள் மன்னரின் மகள்
  • சீலியா, பிரடெரிக் மன்னனின் மகள் மற்றும் ரோசாலின்டின் சகோதரி
  • டச்ஸ்டோன், சபையில் உள்ள கோமாளி
  • லா பியவ், சபை உறுப்பினர்
  • சார்லஸ், மல்யுத்த வீரன்

ஆர்டன் காட்டில் உள்ள மூத்த மன்னனின் விரட்டப்பட்ட சபை:

  • மூத்த மன்னர், பிரெட்ரிக் மன்னனின் அண்ணன் மற்றும் ரோசாலின்டின் தந்தை
  • ஜாக்கஸ், சோக மயமான பிரபு
  • அமீயன்ஸ், பங்கேற்கும் ஒரு பிரபு மற்றும் இசைக்கலைஞர்

ஓடிச்சென்ற சர் ரோலாண்ட் டி பாய்சின் வீட்டில் உள்ளவர்கள்:

  • ஆலிவர், மூத்த மகன் மற்றும் வாரிசு
  • ஜாக்கஸ், இரண்டாவது மகன், நாடகத்தின் இறுதியில் சிறிது நேரமே வரும் பாத்திரம்
  • ஆர்லாண்டோ, இளைய மகன்
  • ஆடம், ஆர்லாண்டோ பிரிந்து செல்லும்போதும் அவருடன் சென்ற பழைய வேலையாள்
  • டென்னிஸ், ஆலிவரின் வேலையாள்

ஆர்டன் காட்டில் உள்ள குடியானவர்கள்

  • பெபி, ஒரு ஆடு மேய்க்கும் பெண்
  • சில்வியஸ், ஆடு மேய்ப்பவன்
  • ஆட்ரி, குடியான பெண்
  • கொரின், வயதான ஆடு மேய்ப்பவர்
  • வில்லியம், குடியானவர்
  • சர் ஆலிவர் மார்டெக்ஸ்ட், மத சடங்கு செய்பவர்

பிற கதாபாத்திரங்கள்:

  • ஃப்ரெடெரிக் மன்னனின் சபையில் உள்ள பிரபுக்கள் மற்றும் பெண்கள்
  • மூத்த மன்னனின் காட்டு சபையில் உள்ள பிரபுக்கள்
  • பணியாட்கள் மற்றும் இசைக்கலைஞர்கள்
  • ஹைமன், நாடகத்திலேயே வரும் ஒரு நாடகத்தில் தோன்றும் ஒரு கதாபாத்திரம், திருமணத்திற்கான கடவுள்

கதைச் சுருக்கம்[தொகு]

ஆஸ் யூ லைக் இட் நாடகத்திலிருந்து ஒரு காட்சி, ஃபிரான்சிஸ் ஹேமன், சி. 1750.

இந்த நாடகம், பிரான்ஸில் உள்ள சிறு இராச்சியத்தில் நடப்பதாக சித்தரிக்கப்படுகிறது, ஆனால் பெரும்பாலான நிகழ்வுகள், 'ஆர்டன் வனப்பகுதி' என்ற காட்டில் நடக்கிறது.

பிரெட்ரிக் இந்த இராச்சியத்தைக் கைப்பற்றி, மூத்த மன்னரான தனது சகோதரரை நாடு கடத்தி விடுகிறார். மன்னரின் மகளான ரோசாலின்ட், புதிய மன்னரின் மகளான சீலியாவுக்கு நெருக்கமானவளாக இருந்ததால், இராச்சியத்தில் தொடர்ந்து தங்குவதற்கு அனுமதிக்கப்பட்டாள். மேலும் ரோசாலிண்டைப் பார்த்தவுடனே காதலில் விழுந்த ஆர்லாண்டோ என்ற இளைஞன், தன்னுடைய மூத்த சகோதரரின் கட்டாயத்தால் வீட்டிலிருந்து வெளியேற வேண்டிய கட்டாயத்திற்கு ஆளானார். பிரெடெரிக் கோபமுற்று ரோசாலிண்டை சபையிலிருந்து விரட்டி விடுகிறார். இதனால் சீலியாவும் ரோசாலிண்டும் சேர்ந்து சபையில் இருக்கும் கோமாளியான டச்ஸ்டோன் என்பவனுடன் சேர்ந்து நாட்டை விட்டு வெளியேற முடிவு செய்கின்றனர். அப்போது ரோசாலிண்ட் ஒரு இளம் ஆணைப் போன்று வேடமணிந்து கொள்கிறாள்.

ரோசாலிண்ட், தற்போது கேனிமெட் (ஜோவின் சொந்த சேவகன்) ஆக வேடம் தரித்துக் கொண்டிருக்கிறாள், சீலியாவும் தற்போது அலீனா ("அந்நியன்" என்பதற்கான இலத்தீன் சொல்) என்ற பெயரில் வேடம் தரித்துக் கொள்கிறாள், இருவரும் அர்டன் வனப்பகுதியில் அர்காடியன் பகுதிக்கு வருகின்றனர். இங்கே தான் நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட மன்னர் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இருந்து வருகிறார். இவர்களில் சோகமயமான ஜாக்கசும் இருக்கிறார். இந்த கதாபாத்திரம், ஒரு மானைக் கொன்றதற்காக அழுது கொண்டிருப்பதாக நமக்கு அறிமுகப்படுத்தப்படுகிறது. "கேனிமெட்" மற்றும் "அலீனா" ஆகியோர் உடனடியாக மன்னரையும் அவரைச் சார்ந்தவர்களையும் பார்க்கவில்லை, ஏனெனில் அவர்கள் கொரினைச் சந்தித்தப் பிறகு அவர் வாடகைக்கு இருந்த ஒரு பகுதியை விலைக்கு வாங்கிக் கொள்ளும் சலுகையை எதிர்கொள்கின்றனர்.

பிலிப் ரிச்சர்ட் மோரிசு வரைந்த ஆட்ரி

ஆர்லாண்டோவும் அவருடைய சேவகர் ஆடமும் (இந்த பாத்திரத்தில் ஷேக்ஸ்பியரே நடித்திருக்கக் கூடும் என்று சந்தேகத்துடன் நம்பப்படுகிறது)[1] மன்னரையும் அவரைச் சார்ந்தவர்களையும் கண்டறிந்து, அவர்களுடன் தங்கியிருக்கத் தொடங்குகின்றனர். மேலும் அவர்கள் ரோசாலிண்டிற்காக எளிமையான காதல் கவிதைகளை மரங்களில் செதுக்கி வைக்கின்றனர். ரோசாலிண்டும் ஆர்லாண்டோவைக் காதலிக்கிறாள். அவள் கேனிமெட்டாக அவனைச் சந்தித்து காதல் தவிப்பை ஆற்றுவிக்க முயற்சிப்பதாக நடிக்கிறாள். அதாவது கேனிமெட்டான "தான்" ரோசாலிண்டின் இடத்தை நிரப்புவதாகவும், "அவனும்" ஆர்லாண்டோவும் ஒன்றாக இணைந்திருக்கலாம் என்றும் கூறுகிறான்.

இந்த சூழ்நிலையில், ஆடுமேய்க்கும் பெண்ணான, பெபி, கேனிமெட்டுடன் (உண்மையில் ரோசாலிண்ட்) காதலில் விழுகிறாள். பெபியை சில்வியஸ் காதலிக்கிறான். கேனிமெட்டும் தொடர்ந்து அவன் பெபியை விரும்பவில்லை என்று கூறி வருகிறான். கோமாளியான டச்ஸ்டோனும், ஆடு மேய்க்கும் பெண்ணான ஆட்ரியை நோக்கி காதல் வலை வீசுகிறான், மேலும் ஜாக்கஸ் ஆட்ரியை கவரும் முன்பு அவளை தான் திருமணம் செய்து கொள்ள விழைகிறான்.

இறுதியாக, சில்வியஸ், பெபி, கேனிமெட் மற்றும் ஆர்லாண்டோ ஆகியோர் ஒரு விவாதத்தில் சேர்கின்றனர். அதில் யார் யாரை மணந்து கொள்வது என்ற விவாதம் நடைபெறுகிறது. கேனிமெட் இந்த சிக்கலைத் தீர்த்து வைப்பதாக கூறுகிறான். அதாவது ஆர்லாண்டோவுக்கு ரோசாலிண்டைத் திருமணம் செய்து வைப்பதாகவும், பெபி கேனிமெட்டைத் திருமணம் செய்து கொள்ள முடியாவிட்டால் சில்வியசைத் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறான். அடுத்த நாள், கேனிமெட் தான் ரோசாலிண்ட் என்பதை வெளிப்படுத்துகிறான். மேலும் பெபி தன்னுடைய காதல் தவறு என்பதை உணர்ந்து சில்வியசைத் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கிறாள்.

ஆர்லாண்டோ ஆலிவரை காட்டில் சந்திக்கிறான், அங்கு அவன் ஒரு பெண் சிங்கத்திடமிருந்து ஆலிவரைக் காப்பாற்றுகிறான். இதனால் ஆலிவர் ஆர்லாண்டோவை துன்புறுத்தியதற்காக மனம் வருந்துகிறான் (சில இயக்குநர்கள், இதனை ஒரு கதை என்றே கருதுகின்றனர்). ஆலிவர் அலீனாவை (சீலியாவின் மாறுவேடம்) சந்தித்து, அவள் மேல் காதல் கொள்கிறான், இருவரும் திருமணம் செய்து கொள்ள சம்மதிக்கின்றனர். இதனால் ஆர்லாண்டோ மற்றும் ரோசாலிண்ட், ஆலிவர் மற்றும் சீலியா, சில்வியஸ் மற்றும் பெபி மற்றும் டச்ஸ்டோன் மற்றும் ஆட்ரி ஆகியோர் கடைசி காட்சியில் திருமணம் செய்துகொள்கின்றனர். இதன் பின்னர் பிரெடெரிக்கும் தன்னுடைய தவறுகளை உணர்ந்து, ஆட்சியை மீண்டும் நியாயமான மூத்த சகோதரருக்கு தர முன்வருகிறார் மற்றும் ஆன்மீக வாழ்க்கை வாழ முடிவெடுக்கிறார். சோகமயமான ஜாக்கஸ், மீண்டும் சபைக்கு திரும்ப மறுத்து காட்டிலேயே ஆன்மீக வாழ்க்கை வாழ முடிவெடுத்து விடுகிறார். இறுதியில் ரோசாலிண்ட் பார்வையாளர்களுக்காக ஒரு முடிவு இசையுரையை ஆற்றுகிறாள், நாடகத்தின் சார்பாக பார்வையாளர்களில் உள்ள ஆண்களையும் பெண்களையும் புகழ்ந்துரைக்கிறாள்.

தேதியும் உரையும்[தொகு]

இந்த நாடகம், ஸ்டேஷ்னர்ஸ் கம்பெனியின் பதிவேட்டில் 1600 ஆகத்து 4 இலேயே உள்ளிடப்பட்டுள்ளது; ஆனால் 1623 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட முதல் ஃபோலியோ எனப்படும் சேக்சுபியரின் நாடகங்கள் அடங்கிய தொகுப்பு ஒன்றிலேயே இது முதன் முதலாக இடம்பெற்றுள்ளது.

அமைப்பு[தொகு]

ஆர்டன் என்பது, பொதுவாக, ஷேக்ஸ்பியரின் சொந்த ஊரான ஸ்ட்ராஃபோர்டு அபான் ஏவான் என்பதற்கு அருகில் இருந்த ஏதேனும் ஒரு காட்டுப்பகுதியின் பெயர் என்று கூறப்படுகிறது. ஆக்ஸ்ஃபோர்டின் ஷேக்ஸ்பியர் வெளியீட்டில், 'ஆர்டன்' என்பது பிரான்சில் உள்ள ஆர்டென்னஸ் என்ற வனப்பகுதியின் ஆங்கில உச்சரிப்பு என்று கூறப்பட்டுள்ளது. இதிலேயே ஆசிரியர் தனது கதையை நடத்துகிறார்[2]) மற்றும் இதனை காட்டும் விதமான எழுத்துவரிசையை மாற்றி விட்டது. பிற பதிப்புகளில், ஷேக்ஸ்பியரின் 'ஆர்டன்' எழுத்துவரிசைத் தக்க வைக்கப்பட்டுள்ளது. அவை, கிராமப்புறம் சார்ந்த கற்பனைக் கதையானது கற்பனையான உலகை சிருஷ்டிக்கிறது, எனவே புவியியல் சார்ந்த இருப்பிட விவரங்களின் அவசியம் இல்லை. ஷேக்ஸ்பியரின் ஆர்டன் பதிப்பின் அடிப்படையில், 'ஆர்டன்' என்ற பெயர் பாரம்பரியமான அர்காடியா பகுதி மற்றும் விவிலியத்தில் குறிப்பிடப்படும் ஏதேன் தோட்டம் ஆகியவற்றின் சேர்க்கை என்று நம்பப்படுகிறது. ஏனெனில் இந்த நாடகத்தில், பாரம்பரிய மற்றும் கிறித்தவ நம்பிக்கைகள் மற்றும் தத்துவங்கள் காண்பிக்கப்படுகின்றன. மேலும், ஷேக்சுபியரின் தாயின் பெயர், மேரி ஆர்டன் என்பதாகும்.

மேடை நாடகமாக்கம்[தொகு]

இங்கிலாந்தின் மறுமலர்ச்சிக்கு முன்னர் எந்த மேடையிலும் இந்த நாடகம் நடத்தப்பட்டதற்கான பதிவு எதுவும் இல்லை. ஆனாலும் வில்ட்ஷிரில் உள்ள வில்டன் ஹவுஸ் என்ற இடத்தில் ஒரு நிகழ்வு நடந்திருக்கும் சாத்தியம் உள்ளது. ஜாக்கோபியன் லண்டன் நகரத்தில் பூபோனிக் பிளேக் நோய் பரவியிருந்த நேரத்தில், முதலாம் ஜேம்ஸையும் அவருடைய சபையினரையும் பெம்ப்ரோக்கின் 3வது ஏர்லான வில்லியம் ஹெர்பர்ட் வில்டன் ஹவுஸிற்கு வரவேற்றார். இந்த நிகழ்ச்சி 1603 ஆம் ஆண்டில் அக்டோபர் முதல் டிசம்பர் வரை நடைபெற்றது. டிசம்பர் 2, 1603 -இல், வில்டன் ஹவுஸிற்கு வந்து அரசருக்காக நடித்துக் காண்பிக்க, கிங்ஸ் மென்னுக்கு £30 தொகை வழங்கப்பட்டது. அந்த இரவில் நடிக்கப்பட்ட நாடகம் ஆஸ் யூ லைக் இட் தான்[3] என்று ஹெர்பர்ட் குடும்பத்தின் பாரம்பரியம் தெரிவிக்கிறது.

ஆங்கில மறுமலர்ச்சியின் காலத்தில், 1669 ஆம் ஆண்டில் ராயல் வாரன்ட் நாடகத்தை நிகழ்த்துமாறு கிங்ஸ் கம்பெனி கேட்டுக்கொள்ளப்பட்டது. 1723ஆம் ஆண்டில் ட்ரூரி லேன் என்ற இடத்தில் நிகழ்த்தப்பட்ட, ஒரு தழுவல் நாடகம் லவ் இன் எ ஃபாரஸ்ட் என்பதாகும், இதில் கொல்லே சிப்பர் ஜாக்கஸ் ஆக நடித்திருந்தார். பதினேழு ஆண்டுகள் கழித்து (1740), மற்றொரு, ட்ரூரி லேன் தயாரிப்பில் ஷேக்ஸ்பியரின் கதை மீண்டும் நிகழ்த்தப்பட்டது.[4]

ஆஸ் யூ லைக் இட் டின் குறிப்பிடத்தக்க சமீபகால தயாரிப்புகளில், 1936 ஆம் ஆண்டு வெளிவந்த ஓல்ட் விக் தியேட்டர் தயாரித்த, எடித் இவான்ஸ் நடித்ததும், 1961 ஆம் ஆண்டில், ஷேக்ஸ்பியர் மெமோரியல் தியேட்டர் தயாரித்த, வெனெஸ்ஸா ரெட்க்ரேவ் நடித்த தயாரிப்புகளும் அடங்கும். நீண்டகாலம் வெற்றிகரமாக ஓடிய, தயாரிப்பு ஒன்றை, பிராட்வே தயாரித்தது, அதில் கேத்தரின் ஹெப்பர்ன் ரோசாலிண்டாகவும், கிளோரிஸ் லீச்மேன் சீலியாவாகவும், வில்லியம் பிரின்ஸ் ஆர்லாண்டோவாகவும், எர்னெஸ்ட் தீசிகர் ஜாக்கஸ் ஆகவும் நடித்திருந்தனர், இதனை மைக்கெல் பென்த்ஹால் இயக்கியிருந்தார். இது 1950ஆம் ஆண்டில் மட்டும் 145 முறைகள் நிகழ்த்தப்பட்டது. 2005 ஆம் ஆண்டில், ஆன் டாரியோவில் உள்ள ஸ்ட்ரார்ட்ஃபோர்ட் பகுதியில் ஸ்ட்ராட்ஃபோர்டு ஃபெஸ்டிவல் நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட நாடகம் மற்றொரு குறிப்பிடத்தக்க ஒன்றாகும். இதில் 1960களின் அமைப்புகளும், ஷேக்ஸ்பியரின் வரிகளுக்கு பாரெனேக்ட் லேடிஸ் அமைத்த இசையும் பயன்படுத்தப்பட்டன.

விமர்சனரீதியான வரவேற்பு[தொகு]

ராபர்ட் வாக்கர் மேக்பெத் வரைந்த ரோசாலிண்ட்

இந்த நாடகத்தின் சிறப்பு குறித்து பல அறிஞர்களும் பல கருத்துக்களைக் கொண்டிருந்தனர். சாமுவெல் ஜான்சன் முதல் ஜார்ஜ் பெர்னாட் ஷா வரை பல விமர்சகர்களும், ஆஸ் யூ லைக் இட் நாடகத்தில் ஷேக்ஸ்பியர் நாடகத்தில் இருக்கும் கலை உணர்வுகள் எதுவுமில்லை என்று குறிப்பிடுகின்றனர். ஷேக்ஸ்பியர் இந்த நாடகத்தை அதிக ஜனரஞ்சகமாகவே எழுதினார் என்றும், இதையே இந்த கதையை ஆஸ் யூ லைக் இட் என்று அழைப்பதன் மூலம் சுட்டிக்காட்டினார் என்றும் ஷா குறிப்பிடுகிறார். டால்ஸ்டாய் இதன் கதாபாத்திரங்கள் அழியாமல் இருப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை மற்றும் டச்ஸ்டோன் தொடர்ந்து கோமாளியாகவே இருப்பதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. சில விமர்சகர்கள் இந்த பணியில் சிறந்த இலக்கிய மதிப்பு இருப்பதாக குறிப்பிடுகின்றனர். ஷேக்ஸ்பியரின் பெண் கதாபாத்திரங்களிலேயே மிகவும் தெளிவாக புரிந்து கொள்ளப்பட்ட கதாபாத்திரம் ரோசாலிண்ட் என்று ஹரால்ட் ப்ளூம் தெரிவிக்கிறார். விமர்சன ரீதியான வேறுபாடுகள் காணப்பட்டாலும், அடிக்கடி நடத்தப்படும் ஷேக்ஸ்பியரின் நாடகங்களில் ஒன்றாகவே இது இருந்து வருகிறது.

பாலினம் சார் ஆய்வுகளில் ஈடுபட்டுள்ள நவீனகால விமர்சகர்கள், இதில் வரும் விரிவான பாலின வேறுபாடுகளை ஆர்வத்துடன் கவனித்து வருகிறார்கள். நாடகத்தின் நான்கு கதாபாத்திரங்கள் மூலம், ரோசாலிண்ட் — ஷேக்ஸ்பியரின் காலத்தில் ஒரு ஆணே இந்த பாத்திரத்தில் நடித்திருக்க வேண்டும் — ஏனேனில் ஒரு ஆணாகவும் மாறுவதற்கு அவசியம் உண்டு, மேலும் பெபி (ஒரு ஆணாலேயே செய்யப்பட்டிருக்க வேண்டும்), இந்த "கேனிமெட்," கதாபாத்திரத்துடன் காதலில் விழுகிறாள், இந்த பெயரே ஓரினச்சேர்க்கை ஒலிப்பைச் சேர்ந்ததாக உள்ளது. உண்மையில், ரோசாலிண்ட் நாடகத்தின் கடைசியில் விவரிக்கும், முடிவுரையிலும், வெளிப்படையாகவே தான் ஒரு பெண் இல்லை (அல்லது குறைந்தபட்சம் அந்த பாத்திரத்தில் நடிப்பது) என்றும் கூறுகிறாள்.

கருப்பொருள் கருத்துக்கள்[தொகு]

மதரீதியான கதை[தொகு]

எமிலி பயார்டு (1837-1891) வரைந்த ஷேக்ஸ்பியரின் ஆஸ் யூ லைக் இட் நாடகத்தின் சித்திரங்கள். "ரோசாலிண்ட் ஆர்லாண்டோவிற்கு ஒரு செயினைத் தருகிறாள்."

விஸ்கோன்சின் பல்கலைக்கழக பேராசிரியர் ரிச்சர்ட் நோவ்லஸ், இவரே இந்த நாடகத்தின் 1977 புதிய வாரியோரம் பதிப்பின் ஆசிரியர் ஆவார், இவர் தன்னுடைய கட்டுரையான "ஆஸ் யூ லைக் இட்டில் உள்ள புராணங்களும் வகைகளும் (மித் அண்ட் டைப் இன் ஆஸ் யூ லைக் இட்)"[5] என்பதில், இந்த நாடகத்தில் ஏதேன் தோட்டம், ஹெர்குலிஸ் மற்றும் கிறிஸ்து ஆகிய புராண விஷயங்களும் இருக்கும் தொடர்பை விவரிக்கிறார். ஆனாலும், எந்த வகையான நிலைத்த மத ரீதியான கருத்துக்களையும் அவரால் தீர்மானிக்க முடியவில்லை மற்றும் இந்து மதம் சார்ந்த நாடகம் என்றும் தீர்மானிக்க முடியவில்லை. ஆனாலும், பிற அறிஞர்கள் இந்த நாடகத்தில் பல மதரீதியான கருத்துக்கள் இருப்பதாகவும், அதனை நல்லமுறையில் புரிந்து கொள்ள முடியும் என்றும் வாதாடுகின்றனர்.

மொழி[தொகு]

பகுதி II, காட்சி 7, இதில்தான் ஷேக்ஸ்பியரின் மிகவும் பிரபலமான சொற்றொடர்களில் ஒன்று வருகிறது, அதாவது:

"All the world's a stage
And all the men and women merely players;
They have their exits and their entrances,
And one man in his time plays many parts,
His acts being seven ages."

இந்த பிரபலமான தொடரை நாடகத்தில் ஜாக்கஸ் கூறுகிறார். இதில், மையக் கருத்தை உருவாக்கும் நோக்கோடு, சிறப்பான கற்பனை உருவகங்கள் கூறப்படுகின்றன: ஒரு மனிதனின் ஆயுட்காலம் ஏழு பகுதிகளாக பிரிக்கப்படுகிறது. இந்த பகுதிகள், "ஏழு வயதுகள்," என்றழைக்கப்படுகின்றன, அவை "வாயைச் சப்பிக் கொண்டு, செவிலியின் கையில் தவழும் குழந்தை நிலை" என்பதில் தொடங்குகிறது, பின்னர் தொடர்ந்து ஆறு சிறப்பான சொல் விளக்கங்களில் செல்கின்றன, இறுதியாக, "இரண்டாம் குழந்தைப்பருவத்தில்,/செயலிழந்த பற்கள், செயலிழந்த கண்கள் மற்றும் எல்லாமே செயலிழந்த நிலையில் முடிவுறுகின்றன."

பாஸ்டோரல் தோற்றம்[தொகு]

கிராமப்புறம் சார்ந்த நகைச்சுவையும், அதிலிருந்த சீரற்ற அமைப்புகளும், ரோசாலிண்ட் கூறும் தூய்மையான காதலும், ஆர்லாண்டோவின் உணர்ச்சிமயமான அன்பும், கிராமப்புற பகுதிகளில் காண்பிக்கப்பட்ட நிகழ்வுகளும், காட்டுப்பகுதியில் சுதந்திர வேட்கையும் நிஜம் போன்றே தோற்றமளிக்கக்கூடியவை ஆகும், மேலும் காட்டில் நிகழ்வுகளின் வாய்ப்புகள் அதிகரிப்பதும், கிண்டல் கலந்த தொனியும் இந்த நாடகத்திற்கு சிறப்பான கதாபாத்திர உருவாக்கத்தின் அவசியத்தை விலக்கிவிடுகின்றன. முதல் பகுதியில் முக்கிய நிகழ்வு ஒரு மல்யுத்த போட்டியைப் போன்றே இருக்கக்கூடியது, மேலும் இதில் அடிக்கடி பாடல் ஒன்று குறுக்கிடும். இறுதியில், விழாவில் கலந்து கொண்டவர்களை வாழ்த்த ஹைமன் தானே வந்து ஆசீர்வதிக்கிறான்.

வில்லியம் ஷேக்ஸ்பியரின் ஆஸ் யூ லைக் இட் தெளிவாக பாஸ்டோரல் காதல் வகையைச் சார்ந்தது, ஆனால் ஷேக்ஸ்பியர் இந்த வகையைப் பயன்படுத்துவதில்லை, அவரே உருவாக்குகிறார். ஷேக்ஸ்பியர் பாஸ்டோரல் வகையை ஆஸ் யூ லைக் இட் டில் பயன்படுத்துவதன் மூலமாக, நீதிதவறுதல், மகிழ்ச்சியின்மை ஆகியவற்றை உருவாக்கும் சமூக நடைமுறைகளை விமர்சனத்துடன் பார்க்கிறார், மற்றும் சமூகத்திற்கு புறம்பான, சுய அழித்தல் நடவடிக்கைகளைக் கேலி செய்கிறார்’, மிகவும் குறிப்பாக, காதல் என்ற கருப்பொருளின் மூலமாக, பாரம்பரிய பெட்ராக்கன் காதலர்களின் குறிப்பைப் பயன்படுத்தி முடிக்கிறார்.[6]

பாரம்பரிய சூழல்களில் உள்ள கதாபாத்திரங்கள் ஷேக்ஸ்பியர் மற்றும் அவர்களின் பார்வையாளர்களுக்கு பிரபலமான விஷயங்கள் ஆகும்; ஆனாலும், லேசான நகைச்சுவையும் விரிவான கருத்துக்களும் இந்த நிகழ்ச்சியில் புதிய சிறப்பம்சத்தை வழங்குகின்றன. ரோசாலிண்டின் உகந்தநோக்கு, சோகமயமான ஜாக்கஸ் பெண்கள் வெறுக்கும் போக்கை விட வேறுபட்டு நிற்கிறது. ஷேக்ஸ்பியர் வேறு சில கருப்பொருட்களைப் பின்னாளில் இன்னும் தீவிரமானதாக எடுத்துக்கொண்டார்: தந்திரமான மன்னரும், ஓடிச்சென்ற மன்னரும் மெஷர் ஃபார் மெஷர் மற்றும் தி டெம்பஸ்ட் ஆகியவற்றுக்கான கருப்பொருள்களை வழங்கியது.

இந்த நாடகத்தில் வரும், வனப்பகுதியில் நடக்கும் நிகழ்வும் மற்றும் ஏராளமான காதல் நிகழ்வுகள், மென்மையான கிராமப்புற சூழல் ஆகியவை பல இயக்குநர்களால் விரும்பப்படும் அமைப்பாக இருந்தது, குறிப்பாக பூங்கா அல்லது வெளிப்புறங்களில் இதே போன்ற தளத்தில் நடத்துவதற்கு ஏற்றதாக இருந்தது.

தழுவல்கள்[தொகு]

இசை[தொகு]

ஹுயூக் தாம்சன் வரைந்த ரோசாலிண்ட் மற்றும் சீலியா

"அண்டர் தி கிரீன்வுட் ட்ரீ" என்பதை இசையாக டோனவான் அமைத்தார் மற்றும் அதை எ கிஃப்ட் ஃப்ரம் எ ஃப்ளவர் டூ எ கார்டன் என்ற நிகழ்வுக்காக 1968ஆம் ஆண்டில் பதிவு செய்தார்.

தாமஸ் மோர்லே (c. 1557-1602) என்பவர் "இட் வாஸ் எ லவ்வர் அண்ட் ஹிஸ் லாஸ்" என்பதற்காக இசையை அமைத்தார்; இவர் ஷேக்ஸ்பியர் இருந்த இடத்திலேயே இருந்தார், சில நேரங்களில் ஷேக்ஸ்பியரின் நாடகங்களுக்காக இசையை அமைத்துவந்தார்.

வானொலி[தொகு]

அமெரிக்க மாகாணம் மின்னசொட்டாவில் உள்ள ரேடியோ ஸ்டேஷன் WCAL வரலாற்றில், , ஆஸ் யூ லைக் இட் நாடகமே முதன்முதலில் ஒளிபரப்பப்பட்ட நாடகம் ஆகும். இது 1922ஆம் ஆண்டில் ஒளிபரப்பப்பட்டது.

திரைப்படம்[தொகு]

ஆஸ் யூ லைக் இட் லாரன்ஸ் ஆலிவர் என்பவரின் முதல் ஷேக்ஸ்பியர் திரைப்படம் ஆகும், இந்த படத்தை அவர் தயாரித்து, இயக்கியதோடு நடிக்கவும் செய்தார். இங்கிலாந்தில் உருவாக்கப்பட்டு, 1936ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது, இந்த திரைப்படத்தில் இயக்குநர் பால் சிஸ்ன்னரின் மனைவி எலிசபெத் பெர்க்னர் என்பவரும் நடித்திருந்தார், இவர் ரோசாலிண்டாக நடித்தார், இவர் பேச்சில் கடுமையான, ஜெர்மன் தொனியில் பேசி வந்தார். ஆனாலும், இது இதே காலத்தில் எடுக்கப்பட்ட, எ மிட்சம்மர் நைட்ஸ் ட்ரீம் மற்றும் ரோமியோ அண்ட் ஜூலியட் போன்ற படங்களை விட குறைவான அளவிற்கு, "ஹாலிவுட் தரத்தில்" இருந்தது, மேலும் இதில் ஷேக்ஸ்பியரின் நடிகர்கள் மட்டுமே நடித்திருந்தாலும், இதனை ஆலிவர் அல்லது பிற விமர்சகர்கள் வெற்றியாக கருதவில்லை.

ஆஸ் யூ லைக் இட் டின் 1978 பிபிசி வீடியோடேப் பதிப்பில் ரோசாலிண்ட்டாக ஹெல்லன் மிர்ரன் நடித்திருந்தார், இதை பேசில் கோல்மேன் என்பவர் இயக்கியிருக்கிறார்.[7]

1992ஆம் ஆண்டில், கிறிஸ்டின் எட்ஜார்ட், இந்த நாடகத்தைத் தழுவி மற்றொரு திரைப்படத்தை உருவாக்கினார். இந்த திரைப்படத்தில், ஜேம்ஸ் பாக்ஸ், சிரில் சுசாக், ஆண்ட்ரூ டியர்னன், கிரிஃப் ரைஸ் ஜோன்ஸ் மற்றும் எவன் ப்ரெம்னர் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த நாடகம், நவீனகால மற்றும் சாதரண நகர்ப்புற உலகத்திற்கு மாற்றப்பட்டது.

19 ஆம் நூற்றாண்டு ஜப்பானில் உருவாக்கப்பட்ட, ஆஸ் யூ லைக் இட் டின் பதிப்பு உருவாக்கப்பட்டது, இது கென்னத் ப்ரானக்கால் இயக்கப்பட்டு 2006ஆம் ஆண்டில் வெளிவந்தது. இதில் ப்ரைஸ் டல்லஸ் ஹோவார்ட், டேவிட் ஓய்லோவோ, ரமோலா கராய், ஆல்ஃப்ரெட் மோலினா, கெவின் கிளைன் மற்றும் பிரெய்ன் ப்ளஸ்ட் ஆகியோர் நடித்திருந்தனர். இந்த திரைப்படம் சினிமாக்களுக்காக உருவாக்கப்பட்டாலும், அது ஐரோப்பாவில் மட்டுமே திரையரங்குகளில் வெளியிடப்பட்டது, மற்றும் அமெரிக்காவில் 2007 ஆம் ஆண்டு எச்பிஓ தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது.

இசை அரங்க நிகழ்ச்சி[தொகு]

டேனியல் அகுஸிடோ மற்றும் சாம்பி பக் இந்த நாடகத்தை, 80 களின் இசைத்தொகுப்பான "லைக் யூ லைக் இட்" என்பதற்கு பயன்படுத்தினார்.[8]

கிராஃபிக் நாவல்[தொகு]

ஜனவரி 2009 -இல் மங்கா-ஸ்டைல் கிராஃபிக் நாவல் ஒன்று வெளிவந்தது, இதனை செல்ஃப் மேட் ஹீரோ பப்ளிஷர்ஸ் என்பவர்கள் வெளியிட்டனர், இதில் அர்டன் வனப்பகுதியானது, நவீனகால சீனாவுக்கு மாற்றப்பட்டது. இந்த கதை ரிச்சர்ட் அப்பிக்னான்சி என்பவரால் தழுவி எழுதப்பட்டது, இதற்கான சித்திரங்களை சை குட்சூவாடா என்பவர் வரைந்திருந்தார்.

குறிப்புகள்[தொகு]

  1. Dolan, Frances E. "Introduction" in Shakespeare, As You Like It . New York: Penguin Books, 2000.
  2. Jonathan Bate (2008). Soul of the Age: the life, mind and world of William Shakespeare. இலண்டன்: Viking. பக். 37. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-670-91482-1. 
  3. F. E. Halliday, A Shakespeare Companion 1564–1964, Baltimore, Penguin, 1964; p. 531.
  4. Halliday,Shakespeare Companion, p. 40.
  5. ELH , volume 33, March (1966) pp 1-22
  6. Sarah Clough. "As You Like It: Pastoral Comedy, The Roots and History of Pastoral Romance". Sheffield Theatres. 2008-10-11 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2008-08-10 அன்று பார்க்கப்பட்டது.
  7. As You Like It (1978) at the Internet Movie Database, http://www.imdb.com/title/tt0077180/
  8. "Sammy Buck". Sammy Buck. 2007-05-29. 2011-06-02 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2009-04-23 அன்று பார்க்கப்பட்டது.

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆஸ்_யூ_லைக்_இட்&oldid=3725989" இருந்து மீள்விக்கப்பட்டது