ஆழி செந்தில்நாதன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆழி செந்தில்நாதன்
Aazhi Senthil Nathan
ஆழி செந்தில்நாதன் சென்னையில் நடைபெற்ற கணித்தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கில், பிப்ரவரி 2024-இல்
ஆழி செந்தில்நாதன் சென்னையில் நடைபெற்ற கணித்தமிழ் பன்னாட்டுக் கருத்தரங்கில், பிப்ரவரி 2024-இல்
பிறப்புசெந்தில்நாதன்
தேவிகாபுரம், ஆரணி திருவண்ணாமலை மாவட்டம், தமிழ்நாடு,  இந்தியா
தொழில்எழுத்தாளர்
பத்திரிகையாளர்

ஆழி செந்தில்நாதன் (Aazhi Senthil Nathan ) என்பவர் இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தைச் சேர்ந்த ஓர் எழுத்தாளார் ஆவார். கட்டுரையாளர்,[1] பத்திரிகையாளர், மொழிபெயர்ப்பாளர், பதிப்பாளர், மொழி நிகர்மைச் செயற்பாட்டாளர், சமூக ஆர்வலர் எனப் பன்முக ஆளுமை கொண்டவராக இவர் அறியப்படுகிறார்.[2]

பிறப்பும் பணியும்[தொகு]

ஆழி செந்தில்நாதன் தமிழ்நாட்டில் திருவண்ணாமலை மாவட்டத்தில் ஆரணிக்கு அருகில் உள்ள தேவிகாபுரத்தில் பிறந்தார். தனது கல்லூரிக் கல்வியினை இளநிலை அறிவியல் பட்டத்தை இயற்பியலில், செய்யாறு அறிஞர் அண்ணா அரசினர் கலைக் கல்லூரியில் முடித்துவிட்டு, சென்னைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை இதழியல் பட்டத்தினை முடித்தார். கல்லூரிக் கல்வியினை முடித்தப் பின்னர் இந்தியா டுடே உள்ளிட்ட பத்திரிகைகளிலும், தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களிலும் பத்திரிகையாளராகவும், மொழிபெயர்ப்பாளராகவும் பணியாற்றினார். சிறிது காலத்திற்கு பின்னர் தமிழில் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான திட்டங்களில் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பு அல்லது உள்மயமாக்கம் பணிகளில், ஈடுபட்டு வருகின்றார்.

பதிப்பகப்பணி[தொகு]

2007ஆம் ஆண்டு ஆழிப் பதிப்பகத்தினைத் தொடங்கி நூற்றுக்கும் மேற்பட்ட நூல்களை வெளியிட்டுள்ளார்.

புத்தகங்கள் வெளியீடு[தொகு]

  • 1974 – மாநில சுயாட்சி
  • நீங்கள் ஏன் கமால் ஹசன் இல்லை
  • பச்சைத் துரோகம்
  • மொழி எங்கள் உயிருக்கு நேர்

மேற்கோள்கள்[தொகு]

  1. "ஆழி செந்தில்நாதன்", Hindu Tamil Thisai, பார்க்கப்பட்ட நாள் 2024-02-12
  2. https://www.arunchol.com/author/aazhi-senthil-nathan?f[page]=1&f[sort]=most-read
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆழி_செந்தில்நாதன்&oldid=3887053" இலிருந்து மீள்விக்கப்பட்டது