ஆள்புலம்
Appearance
ஆள்புலம் அல்லது பிரதேசம் அல்லது மண்டலம் (territory) என்பது ஓர் அரசிற்கு உட்பட்ட ஓர் ஆட்சிப்பகுதியைக் குறிக்கும் சொல்லாகும். பெரும்பாலான நாடுகளில், ஒரு ஆள்புலம் என்பது ஒரு நாட்டால் கட்டுப்படுத்தப்படும் ஒரு பகுதியின் ஒழுங்கமைக்கப்பட்ட பிரிவாகும், ஆனாலும், பல நாடுகளில் ஆட்சிக்குட்பட்ட ஆள்புலங்கள், அந்நாடுகளின் மாநிலப் பிரிவுகளுக்கு ஒத்த அரசியல் நிலையை அவை பெற்றிருப்பதில்லை.[1] பன்னாட்டு அரசியலில், ஒரு ஆள்புலம் பொதுவாக நடுவண் அல்லது மற்றொரு அரசின் ஆட்சியின் கீழ் இறையாண்மை இல்லாத புவியியல் பகுதியாகும்.
சொல்லாக்கம்
[தொகு]ஆள்புலம் என்ற சொல் தமிழில், வினைத்தொகை ஆகும்.
வகைகள்
[தொகு]ஆள்புலங்கள் பின்வருவனவற்றில் ஒன்றாக இருக்கலாம்:
- தலைநகர் ஆள்புலம் (Capital territory)
- சார்பு ஆள்புலம் (Dependent territory)
- நடுவண் ஆள்புலம் (Federal territory)
- கடல்கடந்த ஆள்புலம் (Overseas territory)
- அமைப்புசாரா ஆள்புலம் (Unorganized territory)
- சர்ச்சைக்குரிய ஆள்புலம் (Disputed territory)
- ஆக்கிரமிக்கப்பட்ட ஆள்புலம் (Occupied territory)
- கடல்சார் ஆள்புலம் (Maritime territory)
மேற்கோள்கள்
[தொகு]வெளி இணைப்புகள்
[தொகு]- Peace Palace Library – Research Guide பரணிடப்பட்டது 2016-11-10 at the வந்தவழி இயந்திரம்