ஆலோலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலோலம்
இயக்கம்மோகன்
கதைஜான் பால் மோகன்
இசைஇளையராஜா
நடிப்புநெடுமுடி வேணு

பாரத் கோபி
கே. ஆர். விஜயா

சங்கராதி
ஒளிப்பதிவுராமச்சந்திர பாபு
வெளியீடுஆகத்து 5, 1982
நீளம்அடி
நாடுஇந்தியா
மொழிமலையாளம்

ஆலோலம் என்பது 1982 ஆம் ஆண்டு வெளிவந்த மலையாள திரைப்படமாகும். இத்திரைப்படத்தினை மோகன் இயக்கியிருந்தார்.

இத் திரைப்படத்திற்காக கித்தோவின் கதைக்கு ஜான் பால் திரைக்கதை எழுதினார். நெடுமுடி வேணு , பாரத் கோபி , கே. ஆர். விஜயா , சங்கரதி மற்றும் பலர் இப்படத்தில் நடித்துள்ளனர்.காவலம் நாராயண பணிக்கர் மற்றும் ஜெயதேவர் ஆகியோரின் பாடல் வரிகளுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். [1][2][3]

நடிகர்கள்[தொகு]

  • நெடுமுடி வேணு -குட்டன் தம்புரான், கால்நடை மருத்துவ உதவியாளர்
  • பாரத் கோபி - முகுந்த மேனன், கால்நடை மருத்துவர்
  • கே. ஆர். விஜயா - சாவித்திரி, முகுந்த மேனனின் மனைவி
  • சங்கராதி - நாணு
  • ராஜ்யம்
  • டி. எம்.ஆபிரகாம் -
  • தொடுபுழா வசந்தி - ஜானகி

கதை[தொகு]

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

முகுந்த மேனன் மற்றும் சாவித்திரி தம்பதிகளுக்கு குழந்தை இல்லாமல் இருக்கின்றது ஆனாலும் இருவரும் பாசத்துடன் வாழ்ந்து வருகிறார்கள். குட்டன் தம்புரான் என்னும் நபருடன் முகுந்த மேனனுக்கு பழக்கம் ஏற்படுகிறது. குட்டன் தம்புரான் பெண்கள் விஷயத்தில் சற்று சபலம் உள்ள நபராக நடந்து கொள்கிறார். ஒவ்வொரு முறையும் ஏதேனும் ஒரு பெண்ணை இச்சைக்கு அழைப்பதற்காகவே அவர் வார்த்தைகளும் செயல்களும் அமைகின்றன.

துணி துவைக்கும் சத்தம் கேட்டால் கூட அதை யார் துவைக்கின்றார் எந்த நிலையில் இருக்கின்றார் என்பதனை அறிய ஆவலோடு செல்லக்கூடிய நபராகவும்.. அங்கிருக்க கூடிய பெண்களினால் வசைபாட கூடிய நபராகவும் குட்டன் தம்புரான் இருக்கின்றார். முகுந்த மேனனுக்கு அருகில் உள்ள வீட்டில் இருக்கும் நாணு என்ற விதவைப் பெண்ணோடு குட்டன் தம்புரானுக்கு தொடர்பு ஏற்படுகின்றது. அதனைப் பற்றி முகுந்த மேனனிடம் கூறி அவருக்கும் ஆசையைத் தூண்டுகிறார். ஒரு கட்டத்தில் விதவை மகளிடம் செல்லக்கூடிய அளவிற்கு மிகுந்த மேனன் மாறி விடுகின்றார். இறுதியில் தன்னுடைய மனைவியை எண்ணி விலைமகளிடம் இருந்து விலகி வந்து விடுகிறார்.

இறுதியாக தன்னுடைய இந்த தவறான செயலுக்கு தூண்டுதலாக அமைந்தது தம்புரான் என்பதனை உணர்ந்து அவர் வீட்டில் இருக்கும் சமயத்தில் அவரை அறைந்து தன்னுடைய கோபத்தை வெளிப்படுத்துகிறார். பின்பு தன்னுடைய மனைவியிடம் சரணடைகின்றார்.

இசை[தொகு]

இப்படத்தில் காவலம், ஜெயதேவர் ஆகியோர் பாடல்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.


ஆதாரங்கள்[தொகு]

  1. "Aalolam". www.malayalachalachithram.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.
  2. "Aalolam". malayalasangeetham.info. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.
  3. "Alolam". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-10-16.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலோலம்&oldid=3941105" இலிருந்து மீள்விக்கப்பட்டது