உள்ளடக்கத்துக்குச் செல்

ஆலமரத்துப்பட்டி (விருதுநகர்)

ஆள்கூறுகள்: 9°28′25″N 77°50′21″E / 9.473709°N 77.839175°E / 9.473709; 77.839175
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலமரத்துப்பட்டி
கிராமம்
ஆலமரத்துப்பட்டி is located in தமிழ் நாடு
ஆலமரத்துப்பட்டி
ஆலமரத்துப்பட்டி
தமிழ்நாட்டில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 9°28′25″N 77°50′21″E / 9.473709°N 77.839175°E / 9.473709; 77.839175
நாடு இந்தியா
அரசு
 • ஊராட்சி மன்ற தலைவர்ப மாகலிங்கம்
Languages
 • Officialதமிழ்l
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
626130
Telephone code91 4562
வாகனப் பதிவுTN 67

தமிழ்நாட்டில் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஆலமரத்துப்பட்டி கிராமம் திருத்தங்கலிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவிலும் சிவகாசியிலிருந்து 6 கிலோமீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது. ஆலமரத்துப்பட்டியைச் சுற்றி செங்கமலப்பட்டி, நாரணாபுரம், செல்லையநாயக்கன்பட்டி ஆகிய கிராமங்களும், திருத்தங்கல், சிவகாசி ஆகிய நகரங்களும் உள்ளன.

இக்கிராமத்தில் மிகப் பழமையான அரசமரமும், காளி கோவிலும், கிருட்டிணர் கோவிலும் அமைந்துள்ளது. ஏப்ரல் மாதத்தில் திருவிழா மிக விமரிசையாக இக்கிராமத்தில் நடைபெறும். திருவிழாவின் போது நாராயணர் மற்றும் நாச்சியார் சுவாமி சிலைகள், திருத்தங்கலிலிருந்து பல்லக்கில் கொண்டு வரப்பட்டு பூசை செய்யப்படும். இப்பல்லக்கை கிராம மக்களே சுமந்து வருவர். இக்கிராமத்தில் நுழையும் இடத்தில் முக்கு பிள்ளையார் கோயில் உள்ளது. புதிய முயற்சிகளில், புதிய வேலைகளில் ஈடுபடும் போது முக்கு பிள்ளையாரை வணங்கிச் செல்வர்.

முக்கிய நபர்கள்[தொகு]

இக்கிராமத்தில் முதலில் குடியேறிய நாகம்மா நாயுடு குடும்பத்தினா்,மற்றவர்களுக்கு நிலங்களை தானமாக வழங்கினர். சனார்த்தனன், சங்கரப்பன் மற்றும் சின்னையன் ஆகியோா் சமூக நல்லிணக்கதிற்கு பாடுபட்டனர். இக்கிராமத்திலிருந்து முன்னாள் தமிழ்நாடு சட்ட மன்ற உறுப்பினராக திரு.பாலகங்காதரன் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்திய சுதந்திர போராட்டத்தில் இக் கிராமத்திலிருந்து பலர் கலந்து கொண்டு, பெல்லாரி சிறையில் 2 ஆண்டுகள் வரை தண்டனைப் பெற்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]