ஆலனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆலனியா இராச்சியம்
பிந்தைய 9ஆம் நூற்றாண்டு[1]–1238/1239
ஒசேத்திய வரலாற்றாளர் உருசுலான் பிசரோவின் 9-12ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலிருந்த ஆலனியாவின் வரைபடம்.[2][3]
ஒசேத்திய வரலாற்றாளர் உருசுலான் பிசரோவின் 9-12ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையிலிருந்த ஆலனியாவின் வரைபடம்.[2][3]
நிலைஇராச்சியம்
தலைநகரம்மகாசு
பேசப்படும் மொழிகள்ஆலனிய - முன் - ஒசேத்தியன்
சமயம்
சிதிய மதம், பிறகு 10ஆம் நூற்றாண்டில் கிறித்தவம்[4]
அரசாங்கம்முடியரசு
வரலாற்று சகாப்தம்நடுக்காலம் (ஐரோப்பா)
• கசர்களிடமிருந்து சுதந்திரம்
பிந்தைய 9ஆம் நூற்றாண்டு[1]
1238/1239
முந்தையது
பின்னையது
கசர் ககானரசு
மங்கோலியப் பேரரசு

ஆலனியா என்பது வடக்கு காக்கேசியாவில் செழிப்புடனிருந்த ஒரு நடுக்கால இராச்சியம் ஆகும். இது தற்போதைய சிர்காசியா, செச்சினியா, இங்குசேத்தியா மற்றும் வடக்கு ஒசேத்திய ஆலனியா ஆகிய பகுதிகளை உள்ளடக்கியதாக இருந்தது. இந்நாட்டில் ஈரானிய ஆலன்கள் வசித்து வந்தனர். இவர்கள் ஒசேத்தியர்களின் முன்னோர் ஆவர்.[5][6][7][8] இது 9ஆம் நூற்றாண்டில் கசர்களிடமிருந்து சுதந்திரமடைந்தது. 1238-39ஆம் ஆண்டில் மங்கோலியப் பேரரசால் அழிக்கப்பட்டது. இதனது தலைநகரம் மகாசு ஆகும். தெரியல் சியார்சு வழியே சென்ற முக்கியமான வணிகப் பாதையை இந்த நாடு கட்டுப்படுத்தியது. மன்னன் துருகுலேலின் ஆட்சியின் கீழ் 11ஆம் நூற்றாண்டில் இந்த இராச்சியமானது அதன் உயர் நிலையை அடைந்தது. .[9]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆலனியா&oldid=3532605" இருந்து மீள்விக்கப்பட்டது