உள்ளடக்கத்துக்குச் செல்

ஆறு மாநில இடைத்தேர்தல், 2016

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

2016 ஆறு மாநில இடைத்தேர்தல் என்பது இந்தியாவில் அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேற்கு வங்காளம், மத்தியப் பிரதேசம், திரிபுரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் பாண்டிச்சேரி ஒன்றியப் பகுதியிலும் 2016 நவம்பர் 19 ஆம் தேதி சில மக்களவை தொகுதிகளுக்கும் சட்டமன்ற தொகுதிகளுக்கும் நடந்த (வாக்குப்பதிவு நடந்த நாள்) இடைத்தேர்தலைக் குறிக்கிறது.[1][2][3] நவம்பர் 22 ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டன.

அருணாச்சலப் பிரதேசம்

[தொகு]

அருணாச்சலப் பிரதேசத்தில் முன்னாள் முதல்வர் கலிகோ புல் இறந்ததால் ஆயுலிஅங் சட்டமன்றத் தொகுதிக்குத் தேர்தல் நடந்தது.

ஆயுலிஅங்

கட்சிவேட்பாளர் பெயர்பெற்ற வாக்குகள்கடந்த (2014) தேர்தலில் பெற்ற வாக்குகள்
பாசகதாசங்குலு புல்5,3261,502 (பானிம் ரி)[4]
கட்சி சாராதவர்யோம்பி இக்ரி4,3847,272 (கலிகோ புல்)

அசாம்

[தொகு]

அசாமில் ஒரு மக்களவை தொகுதிக்கும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடந்தது.

பைதலங்சோ (சட்டமன்றம்)

கட்சிவேட்பாளர் பெயர்பெற்ற வாக்குகள்கடந்த சட்டமன்றத்தில் (2016)கட்சிகள் பெற்ற வாக்கு
பாசகமான்சிங் ராங்பி72,16053,077 (அருண் தேரங்)
காங்கிரசுருபோன்சிங் ரான்கேங்55,56062,596 (மான்சிங் ராங்பி)

கடந்த தேர்தலில் மான்சிங் ராங்பி காங்கிரசு சார்பில் போட்டியிட்டு வென்று பாசகவில் சேர்ந்ததால் பதவி விலகினார். இப்போது பாசக சார்பில் போட்டியிட்டு வென்றுள்ளார்.

லேக்கிம்பூர் (மக்களவை)

கட்சிவேட்பாளர் பெயர்பெற்ற வாக்குகள்கட்சிகள் 2014இல் பெற்ற வாக்குகள்
பாசகபிரதன் பருவா5,51,6636,12,543 (சர்பானந்தா சோனோவால்)
காங்கிரசுஎம் அரி பேகு3,61,4443,20,405 (ரானே நர்ரா)

அசாம் முதல்வர் சர்பானந்தா சோனோவால் பதவி விலகியதால் நடந்த தேர்தலில் இத்தொகுதியை பாசக தக்கவைத்துக் கொண்டது.

மத்தியப் பிரதேசம்

[தொகு]

மத்தியப் பிரதேசத்தில் ஒரு மக்களவை தொகுதிக்கும் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடந்தது.

நேபாநகர் (சட்டமன்றம்)

கட்சிவேட்பாளர் பெயர்பெற்ற வாக்குகள்கடந்த (2013) சட்டமன்றத்தில் பெற்ற வாக்குகள்
பாசகமஞ்சு ராசேந்திர தாடு99,62687,224 (ராசேந்திர சியாமல் தாடு)[5]
காங்கிரசுஆன்டார்சிங் தேவிசிங் பார்டே அம்பா57,42865,046 (ராமகிருட்டிணன் படேல்)

நேபாநகர் சட்டமன்ற தொகுதியில் 2013இல் வெற்றி வேறுபாடு 22,178 வாக்குகள்.

சாதோல் (மக்களவை)

கட்சிவேட்பாளர் பெயர்பெற்ற வாக்குகள்கட்சிகள் 2014இல் பெற்ற வாக்குகள்
பாசகஇக்காயன் சிங்4,81,3985,25,419 (தல்பட் சிங் பிரசாதே)
காங்கிரசுஇமாதிரி தல்பிர் சிங்4,21,0152,84,118 (ராசேசு நந்தினி சிங்)

மேற்கு வங்காளம்

[தொகு]

மேற்கு வங்காளத்தில் இரு மக்களவை தொகுதிகளுக்கும் ஓர் சட்டமன்றத் தொகுதிக்கும் தேர்தல் நடந்தது.

மான்டீசுவர் (சட்டமன்றம்)

கட்சிவேட்பாளர் பெயர்பெற்ற வாக்குகள்கடந்த சட்டமன்றத்தில் (2016)கட்சிகள் பெற்ற வாக்கு
அஇதிகாசிகத் பாஞ்சா1,47,31684,134 (சாசல் பாஞ்சா)
இந்திய பொதுவுடமை கட்சி (மார்க்சியம்)முகமது ஒசுமான் கானி சர்க்கார்20,18983,428(சௌத்திரி முகமது இதயத்துல்லா)
பாசகபிசுவஞித் போடோர்16,07315,452 (பிசுவஞித் போடோர் )

கூச்பகார் (மக்களவை)

கட்சிவேட்பாளர் பெயர்பெற்ற வாக்குகள்2014இல் கட்சிகள் பெற்ற வாக்குகள்
அஇதிகாபார்தா பிரதிம் ரே7,94,3755,26,499 (ரேணுகா சின்கா)
பாசகஎம் சந்திர பர்மன்3,81,1342,17,653 (எம் சந்திர பர்மன்)
பார்வர்டு பிளாக்நிரிபேந்திர நாத் ராய்87,3634,39,392 (தீபக் குமார் ராய்)

தம்லுக் (மக்களவை)

கட்சிவேட்பாளர் பெயர்பெற்ற வாக்குகள்2014இல் கட்சிகள் பெற்ற வாக்குகள்
அஇதிகாஅதிகாரி திப்யேந்து7,79,5947,16,928 (அதிகாரி சுவேந்து)
பொதுவுடமை கட்சி (மார்க்சியம்)மந்திரா பாண்டா2,82,0664,70,447 (சேக் இப்ராகிம் அலி)
பாசகஅம்புசா மகான்தி1,96,45086,265 (பாத்சலாம்)

திரிபுரா

[தொகு]

திரிபுராவில் இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது.

பார்சலா (சட்டமன்றம்)

கட்சிவேட்பாளர் பெயர்பெற்ற வாக்குகள்
பொதுவுடமை கட்சி (மார்க்சியம்)சமு சர்க்கார்15,769
பாசகசிசுடா மோகன்தாசு12,395

2013 தேர்தல் முடிவுகள்[6]

கட்சிவேட்பாளர் பெயர்பெற்ற வாக்குகள்
காங்கிரசுசிசேந்திர சர்க்கார்17,728
பொதுவுடமை கட்சி (மார்க்சியம்)சிசேந்திர தாசு17,467

கோவாய் (சட்டமன்றம்)

கட்சிவேட்பாளர் பெயர்பெற்ற வாக்குகள்
பொதுவுடமை கட்சி (மார்க்சியம்)பிசுவசித் தத்தா24,810
அஇதிகாமோகன் தாசு8,716

2013 தேர்தல் முடிவுகள்[7]

கட்சிவேட்பாளர் பெயர்பெற்ற வாக்குகள்
பொதுவுடமை கட்சி (மார்க்சியம்)சமிர் தேப்சர்க்கார்22,692
காங்கிரசுதீபக் மசூம்தார்13,859

தமிழ் நாடு

[தொகு]

தமிழ்நாட்டில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர்களுக்கு பணம் கொடுக்கப்பட்டதாக கூறி தஞ்சாவூரிலும் அரவக்குறிச்சியிலும் நிறுத்திவைக்கப்பட்ட தேர்தல் இப்போது நடைபெற்றது, மேலும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர் சீனிவேல் இறந்ததால் திருப்பரங்குன்றத்துக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

அரவக்குறிச்சி (சட்டமன்றம்)

கட்சிவேட்பாளர் பெயர்பெற்ற வாக்குகள்
அதிமுகசெந்தில் பாலாசி88, 068
திமுககே. சி. பழனிச்சாமி64, 407

இத்தொகுதியை திமுகவிடம் இருந்து அதிமுக கைப்பற்றியது. திமுகவின் கே. சி. பழனிச்சாமி இதன் கடந்த சட்டமன்ற உறுப்பினர்.

தஞ்சாவூர் (சட்டமன்றம்)

கட்சிவேட்பாளர் பெயர்பெற்ற வாக்குகள்
அதிமுகரங்கசாமி101362
திமுகஅஞ்சுகம் பூபதி74,488

திருப்பரங்குன்றம் (சட்டமன்றம்)

கட்சிவேட்பாளர் பெயர்பெற்ற வாக்குகள்கடந்த சட்டமன்றத்தில் (2016)கட்சிகள் பெற்ற வாக்கு
அதிமுகஏ. கே. போசு1,13,03293,453 (சீனிவேல்)
திமுகசரவணன்70,36270,461 (மணிமாறன்)

புதுச்சேரி

[தொகு]

புதுச்சேரியில் முதல்வர் நாராயண சாமி போட்டியிட வசதியாக நெல்லித்தோப்பு உறுப்பினர் ஜான்குமார் பதவி விலகியதால் அத்தொகுதிக்கு இடைத்தேர்தல் நடைபெற்றது.

நெல்லித்தோப்பு (சட்டமன்றம்)

கட்சிவேட்பாளர் பெயர்பெற்ற வாக்குகள்கடந்த சட்டமன்றத்தில் (2016)கட்சிகள் பெற்ற வாக்கு
காங்கிரசுநாராயண சாமி18, 70918,506 (சான்குமார்)
அதிமுகஓம் சக்தி சேகர்7,5656,365 (ஓம் சக்தி சேகர்)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Bypoll Election Results 2016 Live Update: BJP wins big in MP, Assam & Arunachal; TMC sweeps Bengal, AIADMK holds Tamil Nadu
  2. மக்களவை முடிவுகள் [தொடர்பிழந்த இணைப்பு]
  3. சட்டமன்ற முடிவுகள் [தொடர்பிழந்த இணைப்பு]
  4. Arunachal Pradesh Assembly Election 2014 Constituency: Hayuliang (45) [தொடர்பிழந்த இணைப்பு]
  5. "Madhya Pradesh (MP) Assembly (Vidhan Sabha) Election Results 2013". Archived from the original on 2019-03-14. Retrieved 2016-11-26.
  6. Barjala (Tripura) Assembly Constituency Elections
  7. "Tripura Assembly Election 2013 " Constituency: Khowai (25)". Archived from the original on 2013-11-14. Retrieved 2016-11-26.

- 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தமிழ்நாடு, புதுச்சேரி, அசாம், மேற்கு வங்காளம் [தொடர்பிழந்த இணைப்பு]