ஆறாம் பௌத்த சங்கம்

ஆறாம் பௌத்த சங்கம் (Sixth buddhist council), கௌத புத்தரின் 2500-ஆம் ஆண்டு நினைவு நாளை கொண்டாடுவதற்காக, மியான்மர் நாட்டின் ரங்கூன் நகரத்தில் மே, 1954 முதல் மே 1956 முடிய நடைபெற்றது. [1]
பர்மா நாட்டின் பிரதமர் யு நூவின் ஆதரவில் நடைபெற்ற ஆறாம் பௌத்த சங்கத்திற்கு எட்டு நாடுகளிலிருந்து 500 பௌத்த அறிஞர்களும், பிக்குகளும் கலந்து கொண்டனர்.
ஆறாம் பௌத்தச் சங்கத்தில் மியான்மர், இலங்கை, இந்தியா, நேபாளம், திபெத், கம்போடியா, தாய்லாந்து, லாவோஸ் என எட்டு நாடுகளின் பௌத்த அறிஞர்கள் கலந்து கொண்டனர். ஆறாம் பௌத்த சங்கத்தில் பௌத்த தருமம், விநயபிடகம் குறித்த நெறிமுறைகள் தொகுக்கப்பட்டது. மேலும் பாலி மொழியில் அமைந்த அனைத்து பௌத்த சாத்திரங்கள் மறுபரிசீலனைச் செய்யப்பட்டு ஓதப்பட்டது. [2]
இதனையும் காண்க[தொகு]
- பௌத்த சங்கம்
- முதலாம் பௌத்த சங்கம்
- இரண்டாம் பௌத்த சங்கம்
- மூன்றாம் பௌத்த சங்கம்
- நான்காம் பௌத்த சங்கம்
- ஐந்தாம் பௌத்த சங்கம்