ஐந்தாம் பௌத்த சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.


ஐந்தாம் பௌத்த சங்கம் (Fifth Buddhist council) (பர்மியம்: ပဉ္စမသင်္ဂါယနာ) மியான்மார் நாட்டின் மண்டலை நகரத்தில் 1871ல் நடைபெற்றது. 2400 பர்மிய நாட்டுப் பிக்குகள் கலந்து கொண்ட ஐந்தாம் பௌத்த சங்கத்திற்கு, முதிய பிக்குகளான மகாதேரர் ஜெகராபிவம்சர், நரேந்தபித்தஜா மற்றும் மகாதேரர் சுமங்கலர் ஆகியோர் தலைமை வகித்தனர். இம்மாநாடு ஐந்து மாதங்கள் தொடர்ந்து நடைபெற்றது.

பர்மிய அரசரின் ஆதரவில் நடைபெற்ற இம்மாநாட்டில், பர்மிய பௌத்த அறிஞர்கள் மற்றும் பிக்குகள் மட்டுமே கலந்து கொண்டதால், பர்மாவிற்கு வெளியே உள்ள தேரவாத பௌத்தர்கள், இப்பௌத்த மாநாட்டை ஏற்றுக்கொள்வதில்லை. [1]

நோக்கம்[தொகு]

பாலி மொழியில் எழுதப்பட்ட பழையான, பௌத்த சமயத் தொகுப்பான, கௌதம புத்தரின் உபதேசங்கள் அடங்கிய திரிபிடகத்தை ஓதி, பரிசீலனை செய்து, அதில் தேவையற்ற சிறு வேறுபாடுகளை திருத்தவும், நீக்கவும் முடிவு செய்யப்பட்டது.

மேலும் திரிபிடகத்தை 729 பளிங்குக்கல் பலகைகளில், பர்மிய மொழியில் செதுக்கி மக்களின் பார்வைக்கு வைத்தனர். [2]

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Mendelson, Sangha and State in Burma, Cornell University Press, Ithaca, New York, 1975, pages 276f
  2. The Fifth Buddhist Council

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஐந்தாம்_பௌத்த_சங்கம்&oldid=3450227" இருந்து மீள்விக்கப்பட்டது