ஆர். லீமா ரோஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லீமா ரோசு

ஆர். லீமா ரோசு (R. Leema Rose) இந்தியாவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த இடது சாரி அரசியல்வாதி. 2006 ஆம் ஆண்டில் இவர் தமிழ்நாடு சட்டமன்றத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கன்னியாகுமரி மாவட்டம், திருவட்டார் தொகுதியில் போட்டியிட்டு தேர்ந்தெடுக்கப்பட்டார்.  [1]

இவர் இளங்கலை அறிவியல் மற்றும் இளங்கலை கல்வியில் பட்டம் பெற்ற பட்டதாரி ஆவார். 1989 ஆம் ஆண்டு முதல் இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராவார். 2011 ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கன்னியாகுமரி மாவட்டம், விளவங்கோடு தொகுதியில் போட்டியிட்டார்.[2] இவர் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கன்னியாகுமரி மாவட்ட செயலாளராக இருந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 2006 Tamil Nadu Election Results, Election Commission of India
  2. "Profile of CPI(M) Candidates for Tamilnadu Assembly Elections: 2011". Communist Party of India (Marxist). பார்த்த நாள் 24 சூன் 2017.

வெளி இணைப்புகள்[தொகு]

1. Affidavit submitted along with application for the 2006 TN State elections

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்._லீமா_ரோஸ்&oldid=2956892" இருந்து மீள்விக்கப்பட்டது