ஆர்ப்பாட்டம்
Jump to navigation
Jump to search
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஆர்ப்பாட்டம் (Demonstration) அல்லது போராட்டம் (Public protest) என்பது பொதுவான ஒரு இடத்தில் மக்கள் கூட்டமாக ஒரு எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுப்பது ஆகும். ஒரு செயற்பாடு, சூழ்நிலை, அல்லது நிகழ்வுக்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதே ஆர்ப்பாட்டத்தின் நோக்கம். ஒரு தொழில் நிறுவனத்தின் முடிவுகளை அல்லது வேலை நிலைமைகளை எதிர்த்து, மொழித் திணிப்பை எதிர்த்து, இன அழிப்பை எதிர்த்து என பல நோக்கங்களுக்காக ஆர்ப்பாட்டங்கள் நடாத்தப்படலாம். ஆர்ப்பாட்டகாரர்களை எதிர்த்தும் ஆர்ப்பாட்டம் நடாத்தப்படுவதுண்டு.