ஆர்தர் மில்லர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஆர்தர் மில்லர்

தொழில் நாடகாசிரியர், கட்டுரையாளர்
நாடு அமெரிக்கர்
கல்வி நிலையம் மிச்சிகன் பல்கலைக்கழகம்
குறிப்பிடத்தக்க
படைப்பு(கள்)
டெத் ஆஃப் எ சேல்ஸ்மேன்
த குருசிபிள்
எ வியூ ஃபிரம் த பிரிட்ஜ்
குறிப்பிடத்தக்க
விருது(கள்)
நாடகத்திற்கான புலிட்சர் பரிசு (1949)
கென்னடி மையம் விருதுகள் (1984)
துணைவர்(கள்) மேரி ஸ்லேட்டரி (1940–56)
மர்லின் மன்றோ (1956–61)
இங்கெ மோரத் (1962–2002)
உறவினர்(கள்) ஜோன் கோப்லாண்ட் (சகோதரி)
கெர்மிட் மில்லர் (சகோதரன்)
ரெபெக்கா மில்லர் (மகள்)
தானியல் மில்லர் (மகன்)
தானியல் டே-லெவிஸ் (மருமகன்)
கையொப்பம் Arthur Miller signature.svg

ஆர்தர் ஆஷேர் மில்லர் (Arthur Asher Miller, அக்டோபர் 17, 1915 – பெப்ரவரி 10, 2005)[1][2] ஓர் அமெரிக்க நாடகாசிரியரும் கட்டுரையாளரும் ஆவார். அமெரிக்க நாடகத் துறையில் புகழ்பெற்று விளங்கிய மில்லரின் சிறப்பான நாடகங்களாக ஆல் மை சன்ஸ் (1947), டெத் ஆஃப் எ சேல்ஸ்மேன் (1949), த குருசிபிள் (1953), மற்றும் எ வியூ ஃபிரம் த பிரிட்ஜ் (ஓரங்கம், 1955; ஈரங்கமாகத் திருத்தப்பட்டது, 1956) ஆகியவற்றைக் குறிப்பிடலாம்.

மில்லர் எப்போதும் செய்திகளில், குறிப்பாக 1940களின் பிந்தைய ஆண்டுகள், 1950கள் மற்றும் துவக்க 1960களில், அடிபட்டார்; இந்தக் காலத்தில்தான் அவர் அமெரிக்க கீழவையின் அமெரிக்கத்தனமல்லாதச் செயல்களுக்கான குழுவினால் விசாரிக்கப்பட்டார், புலிட்சர் பரிசு வென்றார், அஸ்துரியாஸ் இளவரசர் விருது பெற்றார் மற்றும் ஹாலிவுட் நடிகை மர்லின் மன்றோவை மணந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

  1. Death of a playwright: legend Arthur Miller dies aged 89, பெப்ரவரி 11, 2005 த கார்டியனில் வந்த இரங்கியல் குறிப்பு
  2. "Arthur Miller Files". University of Michigan. 2006-10-01 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

நேர்முகங்கள்/செவ்விகள்

இரங்கல்கள்

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்தர்_மில்லர்&oldid=3233152" இருந்து மீள்விக்கப்பட்டது