ஆர்க்டிக் முயல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஆர்க்டிக் முயல்[1]
Arctic Hare 1.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பாலூட்டி
வரிசை: Lagomorpha
குடும்பம்: Leporidae
பேரினம்: Lepus
இனம்: L. arcticus
இருசொற் பெயரீடு
Lepus arcticus
Ross, 1819
Arctic Hare area.png
ஆர்க்டிக் முயலின் பரவல்

ஆர்க்டிக் முயல் (Lepus arcticus) அல்லது துருவ முயல் என்பது துருவப்பகுதிகளுக்கு ஏற்ப தகவமைத்துக்கொண்ட ஒரு முயல் இனம். இது ஆர்க்டிக் பனிப்பகுதியில் வாழ்வதற்கேற்ப அடர்ந்த மயிர்க்கற்றைகளைக் கொண்டுள்ளது. மேலும் இவை கதகதப்பாக இருக்க தரைப்பகுதியில் பனிக்கு அடியில் துளைகள் அமைத்து வாழ்கின்றன. இவை நீளமான காதுகளைக் கொண்டிருக்கின்றன. இவற்றால் மணிக்கு 40 மைல் தொலைவு வரை ஓட இயலும். ஆர்க்டிக் ஓநாய்களே இவற்றின் முதன்மையான இரைகொல்லியாகும்.

இம்முயல்கள் கனடா, அலாஸ்காவின் வடகோடிப்பகுதிகள், கிரீன்லாந்தின் துந்த்ராப் பகுதிகளில் காணப்படுகின்றன. ஆர்க்டிக் முயல் 22 முதல் 28 அங்குல நீளமும் 4 முதல் 5.5 கிலோ எடையும் இருக்கும். தாவரங்களும் இலைகள், புற்களுமே இவற்றின் உணவு.

மேற்கோள்கள்[தொகு]

  1. வார்ப்புரு:MSW3 Hoffmann
  2. Lagomorph Specialist Group (1996). Lepus arcticus. 2006 ஐயுசிஎன் செம்பட்டியல். ஐயுசிஎன் 2006. தரவிறக்கப்பட்டது 2006-05-06. Database entry includes a brief justification of why this species is of least concern
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆர்க்டிக்_முயல்&oldid=1922076" இருந்து மீள்விக்கப்பட்டது