ஆரியங்குழி தேவி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

ஆரியங்குழி தேவி கோவில், இந்தியாவின் கேரளா, திருவனந்தபுரம் மாவட்டம், ஆரியங்குழி என்னுமிடத்தில் அமைந்துள்ள ஒரு புகழ்பெற்ற தேவி கோவில் ஆகும். [1]

புராணம்[தொகு]

குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு குழந்தை வண்டல் அவ்விடத்திலிருந்து ரத்தம் வர ஆரம்பித்தது. அவ்விடத்தில் தெய்வீக சக்தி இருப்பதாக உணர்ந்த மக்கள் பாறையை வணங்கத் தொடங்கினர். நாளடைவில் தெற்கு கேரளாவில் உள்ள ஒரு பிரபலமான கோயிலாக மாறியது.

துணைத் தெய்வங்கள்[தொகு]

இக்கோயிலின் மூலவர் சுயம்பு ஆவார். கணபதி, நாகராஜர், பிரம்மராட்சசு, மாடம் தம்புரான், யட்சி அம்மா ஆகியோருக்கான துணைச் சன்னதிகள் இங்கு உள்ளன.

கோயில் நேரம்[தொகு]

வழிபாட்டிற்காக இக்கோயில் காலை 4.45 முதல் 10.35 வரையிலும், மாலை 5.00 முதல் இரவு 8.00 வரை திறந்திருக்கும். [2]

குறிப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஆரியங்குழி_தேவி_கோயில்&oldid=3826587" இலிருந்து மீள்விக்கப்பட்டது